செய்தி சுருக்கம்: இந்திய கடற்படைக்கு ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் $5.2 பில்லியன் திட்டத்திற்காக தைசென்குரூப் ஏஜியின் கடல்சார் பிரிவும் இந்தியாவின் மஸகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனமும் கூட்டாக ஏலம் விடக்கூடும் என்று அறிய வந்துள்ளது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிடன் கூட்டாக நீர்மூழ்கி கப்பல்களை உற்பத்தி செய்ய கீலை(Kiel, Germany) தளமாகக் கொண்ட இந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. இப்போது உக்ரைன் போர் இரண்டாவது […]
செய்தி சுருக்கம்: டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவுக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் பாதுகாப்பாக மகதானில் தரையிறங்கியதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னணி: இந்த விமானத்தில் 216 பயணிகளும், 16 விமான ஊழியர்களும் இருந்தனர். பயணிகளுக்கு தரையில் அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் சென்றடைய மாற்று வழிகள் வழங்கப்படும்.என்றும் அந்த விமானம் தரையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
செய்தி சுருக்கம்: குழந்தை அரிஹாவை விரைவில் நாட்டிற்கு அனுப்புமாறு ஜெர்மனியை இந்தியா வலியுறுத்தியது. பின்னணி: பெர்லினில் 20 மாதங்களுக்கும் மேலாக குழந்தை அரிஹா வளர்ப்பு காப்பகத்தில் வசித்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி, ஏழு மாத குழந்தையாக இருந்தபோது, அவரை ஜெர்மனி அதிகாரிகள் பெற்றோரிடம் இருந்து எடுத்து செந்றனர். அரிஹா ஷா 2021 செப்டம்பரில் அவரது பாட்டியால் தவறுதலாக பாதிக்கப்பட்டார், அதன் பின்னர் ஜெர்மன் அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றனர்.
சுருக்கம்:கடந்த மே மாதம் ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்தியா ஒரு நாளைக்கு 1.96 மில்லியன் பீப்பாய்களை இறக்குமதி செய்துள்ளது. ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு , அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை விட ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. ஏன் இது முக்கியம் பெறுகிறது:போர் தொடங்கி ஓராண்டிற்கு பின்னர், இந்தியா […]
செய்தி சுருக்கம் :39 பணியாளர்களுடன் சென்ற சீன மீன்பிடிப் படகு ஒன்று கடந்த வாரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பின்னணி : மே 16ம் தேதி லு பெங் யுவான் யூ 028 என்ற கப்பல் 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் ஐந்து பிலிப்பைன்ஸ் நாட்டவர்களுடன் ஆஸ்திரேலியாவின் பெர்த்திற்கு மேற்கே 5,000 கிலோமீட்டர் தொலைவில் கவிழ்ந்தது. செவ்வாய்க்கிழமை மேலும் 12 சடலங்கள மீட்கபட்டதாகவும் , கவிழ்ந்த கப்பலின் […]