இலங்கையின் இருபெரும் இனங்களான சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒருவருக்கொருவர் மிகவும் ஒத்துப் போகிறார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மொழி வேறுபாடுகள் இவ்விரண்டு இனங்களுக்கிடையே இருந்தபோதும் பல நூறு ஆண்டுகளாக இணைந்திருப்பதால் இந்த மரபணுத் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த டிஎன்ஏ விஞ்ஞானிகளால் கூட்டாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்த செய்தி ஐசயின்ஸ் என்னும் இதழில் வெளியாகியுள்ளது. இதில் இலங்கையில் உள்ள இனக்குழுக்களின் […]
செய்தி சுருக்கம்: இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றபோது, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். அப்போது பியானோ வாசித்ததற்காக ஒரு காவலாளியை பணி நீக்கம் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா போலீஸ் படை தெரிவித்துள்ளது ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? காவலர் ஆர்.எம்.டி. தரயநே, அந்த போராட்ட நாளில் காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட அதிபர் மாளிகையைப் பாதுகாக்க அங்கு பணியில் நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு பதிலாக, அவர் அதிபர் மாளிகையில் இருந்த ஒரு பெரிய […]
செய்தி சுருக்கம்: யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியில் கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 130 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த கஞ்சா கேரளாவிலிருந்து கடத்தப்படுள்ளது தெரியவந்துள்ளது. பின்னணி: படகு மூலம் கடத்தப்பட்டு வந்த கேரள கஞ்சா 61 பார்சல்களில் 3 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. ரூ. 43 […]
செய்தி சுருக்கம்: தெற்காசிய நாட்டின் முதலாவது விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை அமைப்பது தொடர்பான பணிகளை விரைவுபடுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (பிஎம்டி) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்கவை மேற்கோள்காட்டி, விளையாட்டுத்துறையில் நிபுணத்துவத்துடன் பட்டப்படிப்பை முடிப்பதற்கான வாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்குவதாக PMD கூறியுள்ளது. பின்னணி: விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் நிர்மாணப் பணிகளில் கொழும்பு புறநகரில் உள்ள விளையாட்டு வளாகம் விரிவுபடுத்தப்படும் […]
செய்தி சுருக்கம்: யாழ்ப்பாணம் கதுருகொட (கந்தரோடு) ஆலயத்தின் அருகில் உள்ள பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது ஐந்து லக்ஷ்மி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? ஜெர்மனியைச் சேர்ந்த தொல்பொருள் அதிகாரிகள் குழு இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர். பின்னணி: இந்த இடத்தில் கடந்த ஒரு மாதமாக அகழாய்வு நடந்து வருகிறது. கதுருகொட விகாரைக்கு அருகில் ஒரே இடத்தில் […]