பரந்த அளவிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார அளவுருக்களில் இந்தியா, சீனாவை விட 16.5 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாகப் பிரபல தரகு நிறுவனமான பெர்ன்ஸ்டீனின் சமீபத்திய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது. காப்புரிமை, அந்நிய நேரடி முதலீடு, அந்நியச் செலாவணி இருப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களைப் பகுப்பாய்வு செய்த பெர்ன்ஸ்டீன் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இந்த இடைவெளியைத் தெரிவித்துள்ளது. காப்புரிமையைப் பொறுத்தவரை, இந்தியா சீனாவை விட 21 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. அந்நிய நேரடி […]
செய்தி சுருக்கம்: இந்தியப் பகுதிகள் சிலவற்றை உள்ளடக்கி தனது புதிய வரைபடத்தை வெளியிட்டது சீனா, மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் எல்லை விவகாரம் ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? சீனா வெளியிட்டுள்ள தனது புதிய ‘ஸ்டாண்டர்டு மேப்’ என்னும் வரைபடத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தின் சில பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த செயல் உலகரங்கில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது முதல்முறை அல்ல. பின்னணி: சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய எல்லைகளை சரியாக ஆய்வு செய்து பிரிக்காததால் இந்த […]
செய்தி சுருக்கம்: கடந்த திங்கள் கிழமை (04-09-2023) உலக சுகாதார அமைப்பு WHO – World Health Organization உலகமக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி கல்லீரல் பாதிப்பை கொண்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் DEFITELIO என்ற மருந்தில் போலிகள் கலந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் இந்தியா மற்றும் துருக்கியில் அதிகமான அளவில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த DEFITELIO மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் WHO எச்சரிக்கையில் […]
செய்தி சுருக்கம்: நிலவின் தென்பகுதியில் தற்போது இரவு சூழ்வதால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டுமே ஸ்லீப் மோடுக்கு செல்கின்றன. இதனால் நிலவின் மீதான ஆய்வுப்பணிகள் தற்காலிகமாக முடிவடைந்துள்ளது. ஆனாலும் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய இந்த இயந்திரங்கள் நிலவின் தென் துருவத்தில் சூரியன் உதயமானதும் விழித்தெழுந்து பணிகளை விட்ட இடத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலாவின் இரவு நேரங்களில் அங்கு உருவாக்கக்கூடிய அதிகபட்ச குளிரால் இயந்திரங்களின் பாகங்களில் பழுது ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]
இலங்கையின் இருபெரும் இனங்களான சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மரபணு ரீதியாக ஒருவருக்கொருவர் மிகவும் ஒத்துப் போகிறார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மொழி வேறுபாடுகள் இவ்விரண்டு இனங்களுக்கிடையே இருந்தபோதும் பல நூறு ஆண்டுகளாக இணைந்திருப்பதால் இந்த மரபணுத் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த டிஎன்ஏ விஞ்ஞானிகளால் கூட்டாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்த செய்தி ஐசயின்ஸ் என்னும் இதழில் வெளியாகியுள்ளது. இதில் இலங்கையில் உள்ள இனக்குழுக்களின் […]