இன்று உலகம் முழுவதிலும் ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பேச்சுத்தான் அதிகமாக உள்ளது. அதன் ஆற்றலையும் அதிவேகமான பாய்ச்சலையும் கண்டால் மிகவும் வியப்பாகவே உள்ளது. சாட் ஜிபிடி, கூகுள் பார்ட் போன்ற சாட்பாட் உதவியால் பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மருத்துவம், பாதுகாப்பு, வணிகம், நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, உற்பத்தி என அனைத்துத் துறைகளிலும் இன்று ஏ.ஐ என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு கோலோச்சி வருகிறது. மனிதனைப் போலவே சிந்தித்துப் […]
உங்கள் குழந்தைகள் புத்தகங்களை அதிகம் வாசிப்பவர்களாக இருந்தால், அத்தகைய பழக்கம் இல்லாத குழந்தைகளைக் காட்டிலும் அவர்கள் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும், கற்பனைத் திறன் கொண்டவர்களாகவும், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வு கடந்த மாதம் ஜூலை 20-ல் இருந்து 27க்குள் எபிக் என்னும் நிறுவனத்தின் சார்பில் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஒன்போலால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் குழுவில் சந்தை ஆராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுக்கருத்து ஆராய்ச்சிக்கான அமெரிக்கச் சங்கம் […]
செய்தி சுருக்கம்: இலங்கையில் ஆறு திரைப்படங்களைத் தயாரிக்க இருப்பதாக மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரக்டக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது. தயாரிக்கப்படும் ஆறு படங்களில் ஐந்து சிங்கள மொழியிலும் ஒன்று தமிழிலும் இருக்கும். சர்வதேச அளவில் வெளியிடப்படும் சிங்களத் திரைப்படங்கள்! இத்திரைப்படங்கள் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வெளியிடப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. “இன்று வெளியிடுவதாக நாங்கள் அறிவித்துள்ள ஒவ்வொரு படமும் எங்களின் பங்கில் பெரும் முதலீட்டுடன் வந்துள்ளது, அதை இலங்கை சந்தையை மட்டும் கொண்டு […]
மன அழுத்தம் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை, நாட்டின் தலைவர் முதல் கடைநிலை ஊழியர் வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. உலகில் இன்று அதிகம் பேசப்படும் உளவியல் பிரச்சினை இதுதான். ஒரு சிலர் எப்பொழுதுமே மன அழுத்தத்துடன் இருப்பார்கள். கேட்டால் அதிக வேலைப்பளு, குடும்பம், தனிப்பட்ட பிரச்சினைகள் என்று கூறுவார்கள். வேறு சிலர் குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் மன அழுத்தத்துக்கு ஆட்படுவார்கள். எடுத்துக்காட்டாக மாணவர்கள் பரீட்சை, […]