பரந்த அளவிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார அளவுருக்களில் இந்தியா, சீனாவை விட 16.5 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாகப் பிரபல தரகு நிறுவனமான பெர்ன்ஸ்டீனின் சமீபத்திய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது. காப்புரிமை, அந்நிய நேரடி முதலீடு, அந்நியச் செலாவணி இருப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களைப் பகுப்பாய்வு செய்த பெர்ன்ஸ்டீன் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இந்த இடைவெளியைத் தெரிவித்துள்ளது. காப்புரிமையைப் பொறுத்தவரை, இந்தியா சீனாவை விட 21 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. அந்நிய நேரடி […]
இன்று உலகம் முழுவதிலும் ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பேச்சுத்தான் அதிகமாக உள்ளது. அதன் ஆற்றலையும் அதிவேகமான பாய்ச்சலையும் கண்டால் மிகவும் வியப்பாகவே உள்ளது. சாட் ஜிபிடி, கூகுள் பார்ட் போன்ற சாட்பாட் உதவியால் பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மருத்துவம், பாதுகாப்பு, வணிகம், நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, உற்பத்தி என அனைத்துத் துறைகளிலும் இன்று ஏ.ஐ என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு கோலோச்சி வருகிறது. மனிதனைப் போலவே சிந்தித்துப் […]
பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியால் பனாமா கால்வாயின் நீர்மட்டம் குறைந்துள்ளது. போதுமான ஆழம் இல்லாததால் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் இரு பக்கங்களிலும் 135க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் முடங்கிக் கிடப்பதாகத் தெரியவந்துள்ளது. பனாமா கால்வாய் பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் ஒரு செயற்கை கால்வாய். அமெரிக்கக் கண்டத்தின் நடுவில் இருக்கும் குறுகிய நிலப்பரப்பு வழியாக இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நகரிலிருந்து அதற்கு எதிர் […]
செய்தி சுருக்கம்: BRICS கூட்டமைப்பின் 15 ஆவது உச்சி மாநாடு சமீபத்தில் தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலுள்ள Sandton Convention Center இல் நிகழ்ந்தது. அதில் கலந்துகொண்ட உறுப்புநாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய தென்னாப்பிரிக்க நாட்டின் அதிபர் மற்றும் நடப்பு பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் Cyril Ramaphosa பின்வரும் விவரங்களை அறிவித்தார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்திருந்த ஆறு நாடுகளின் மனுக்கள் நம் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இணைத்து கொள்ளப்பட்டுள்ளன. பிரிக்ஸ் அமைப்பில் புதிதாக […]
செய்தி சுருக்கம்: இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய அரசின் சர்க்கரை ஏற்றுமதி 11.1 மில்லியன் டன்கள், ஆனால் நடப்பு காலாண்டில் வரை 6.1 மில்லியன் டன்கள் மட்டுமே சர்க்கரை ஏற்றுமதி செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 30 வரையிலும் மொத்தமாக இந்த நிதியாண்டில் 17.2 மில்லியன் டன்கள் சர்க்கரை இந்திய அரசு ஏற்றுமதி செய்யவுள்ளது, அதன் பின்னர் அக்டோபர் முதல் தேதி முதலாக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. ஏழு ஆண்டுகள் கழித்து இந்திய […]