fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம் தெரிவு பல்பொருள் பொழுது போக்கு

உங்கள் துணை மீது அதிக அக்கறை செலுத்துங்கள் – அப்புறம் பாருங்கள் உங்கள் செக்ஸ் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று!! 

உலகில் உள்ள எல்லா உயிரினமும் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடுகிறது. இதில் மனித இனம் மட்டும்தான் இனப்பெருக்கத்திற்கு அப்பாற்பட்டும் இன்பத்திற்கான இணைசேரும் ஒரே உயிரினம். மனிதர்களது மனநலம், மற்றும் குணநலம் ஆகியவை அவர்களது செக்ஸ் வாழ்க்கையைச் சார்ந்துள்ளது. 

மோசமான மற்றும் திருப்தியில்லாத செக்ஸ் வாழ்க்கையை வாழும் ஆணும் பெண்ணும் உணர்வுச்சிக்கலுக்கு உள்ளாவதைக் காண்கிறோம். திருப்தியான செக்ஸ் வாழ்க்கையானது மனிதர்களின் மனநிலையை உற்சாகமாக்கி அவர்களது  செயல்திறனை அதிகரிக்கிறது. 

செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடும் அனைவரும் அதை ஒரே மாதிரி அணுகுவதில்லை. வெறும் உடலுறவுக்காக ஒருவரை ஒருவர் அணுகுவதற்கும், இருவருக்குமான உறவில் ஒரு அர்ப்பணிப்பு மற்றும் அக்கறையோடு செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு ஆராய்ச்சி வெளிக்கொணர்ந்துள்ளது.

செக்ஸா அல்லது அர்ப்பணிப்பா? எது முதல் தேவை?

சிறந்த செக்ஸானது உறவில் ஈடுபாட்டை அதிகரிக்குமா? அல்லது உறவில் காட்டப்படும் அக்கறை சிறந்த செக்ஸ் அனுபத்தைத் தருகிறதா என்பதில் இதுவரை தெளிவான விளக்கங்கள் இல்லை.  

திருமணத்திற்கு முன்பாக இருக்கும் செக்ஸ் ஈடுபாடு திருமணத்திற்குப் பிறகு இருப்பதில்லை என்பது பெரும்பாலானவர்களின் கூற்று. ‘திருமணம் செக்ஸைக் கொலை செய்கிறது’ என்று பலரும் வேடிக்கையாகக் கூறுவதைக் காணலாம். திருமண உறவில் முதன்மையாக அந்த ஜோடிகள் இருவரும் ஒரு உத்தரவாதமான அர்ப்பணிப்பை உறுதி செய்கிறார்கள். இனி என் துணையின் ஏற்றத்திற்கும் தாழ்விற்கும் தானே பொறுப்பு என்ற அக்கறை அந்த திருமண உறவில் உள்ளது. 

எனில், திருமணமான அனைவரின் செக்ஸ் வாழ்க்கையும் சிறப்பானதாக அமைந்திருக்க வேண்டுமே? அப்படி இருப்பதில்லை என்பது கண்கூடு.. 

நூற்றுக்கணக்கான ஜோடிகள் மற்றும் தம்பதிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு இந்த கேள்விக்கான பதிலைத் தருகிறது. 

உறவில் உள்ள அர்ப்பணிப்பு சிறந்த செக்ஸுக்கு வழிவகுக்கிறது!

நீங்கள் உங்கள் துணையுடன் எவ்வளவு அர்ப்பணிப்போடும் அக்கறையோடும் இருக்கின்றீர்கள் என்பது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. 

சாதாரண மற்றும் அன்றாட வாழ்க்கையில் காட்டப்படும் அக்கறையானது தனது இணை உடலுறவிலும் திருப்தியடைந்தாரா என்பதில் வந்து முடிகிறது. அனைத்திலும் காட்டப்படும் அக்கறை இந்த விசயத்திலும் வெளிப்படும் என்பது ஆய்வு முடிவாகும். வெகு சிலரது உறவில் மட்டுமே இந்த உடலுறவு திருப்தி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் போகிறது. ஆனால் இது விதிவிலக்கு மட்டுமே. 

ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அக்கறை கொள்ளும்போது எந்த தயக்கமும் விலக்கமும் இன்றி ஒருவரது உடலுறவு திருப்தியைப் பற்றித் தெரிந்துகொள்ள இயலும். பெரிதாக அக்கறையோ, துணையைப் பற்றிய புரிதலோ இல்லாதவர்களுக்கு இந்த செக்ஸ் விசயத்திலும் பெரிதாக புரிதல்கள் இருக்கப்போவதில்லை. 

அக்கறை மற்றும் அர்ப்பணிப்பானது ஒருவிதமான பாதுகாப்பு உணர்வை வழங்குவதன் மூலம் அந்த உணர்வை வழங்கும் இணையுடன் மேலும் தீவிரமான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட ஒருவரைத் தூண்டுகிறது. 

எடுத்துக்காட்டாக, தம்பதிகளுக்கு அளிக்கப்படும் கவுன்சிலிங்கானது அவர்களுக்கு இடையிலான பிணைப்பை அதிகரிக்கிறது. அதன் பக்க விளைவாக அவர்களுக்கிடையில் நல்ல செக்ஸ் வாழ்க்கை அமைவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் இந்த தம்பதிகள் செக்ஸ் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைக்காக கவுன்சிலிங் வருபவர்களில்லை. இருப்பினும் இது ஒரு நல்ல பக்க விளைவே!

வேறு காரணங்களுக்காக செக்ஸில் ஈடுபடுபவர்களை விட பாசத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதற்காக செக்ஸில் ஈடுபடுபவர்கள் சிறப்பான செக்ஸ் அனுபவத்தைப் பெறுகின்றார்கள்!!

இந்த ஆய்வு செய்யப்பட்டது எப்படி? 

366 ஜோடிகளில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. தம்பதிகளுக்கான தெரபியாக இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஜோடிகளுக்கிடையிலான அக்கறையையும் பரிவையும் அதிகரிக்கும் வண்ணம் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. 

பல அமர்வுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முதல் அமர்வில் செக்ஸ் செயல்பாட்டில் ஏற்பட்ட  திருப்தி இரண்டாம் கட்ட அமர்வில் துணை மீதான அக்கறையாக வெளிப்பட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அமர்வுகளில் துணை மீதான அக்கறை, செக்ஸ் உறவில் திருப்தியை அதிகரித்ததை காண முடிந்தது. 

ஆக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது இதுதான், நல்ல செக்ஸானது ஜோடிகளிடையே நல்ல உறவை மேம்படுத்துகிறது. அதுவே சிறந்த செக்ஸானது உறவை வெகு சிறப்பானதாக மாற்றுகிறது. 

ஆகவே, நமது துணையின் மீது ஆரோக்கியமான அக்கறையும் ஈடுபாட்டையும் அதிகரிப்பது நமது செக்ஸ் வாழ்க்கையை நல்விதமாக்கும். சிறப்பான செக்ஸ் வாழ்க்கை – உறவில் ஈடுபாட்டை அதிகரிக்கும். 

இந்த தலைமுறையினரின் செக்ஸ் வாழ்க்கை

சென்ற தலைமுறைகளைப் போல இல்லாமல் இந்த தலைமுறையினர் செக்ஸ் வாழ்க்கையைப் புரிதலோடு அணுகுவதாகத்தான் தெரிகிறது. போன தலைமுறைகளில் பெண்களின் உடலுறவு திருப்தியைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது கூட பாவம் என்ற நிலை இருந்தது. இப்போது அப்படி இல்லை. இவற்றைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்கவும், தங்கள் துணையிடம் செக்ஸ் திருப்தியைப் பற்றி பேசவும் இன்றைய தினங்களில் இயலுகிறது. 

உறவில் அக்கறையும் ஈடுபாடும் இல்லாமல் வெறும் செக்ஸில் மட்டும் ஈடுபடுவது அஸ்திவாரம் இன்றி கட்டிடம் எழுப்பது போன்றது என்பதை மட்டும் நாம் புரிந்துகொண்டால் போதும். 

தொடர்புடைய பதிவுகள் :

குறைவான உடலுறவுக்கும் டிமென்ஷியாவிற்கும் தொடர்பு உள்ளதா? புதிய ஆய்வில் தகவல்.
நீண்ட ஆயுள் வேண்டுமா? எட்டு பழக்கவழக்கங்களைக் கையாளுங்கள்!
இ-சிகரெட் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு 30 நாட்களில் கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்படும்!  எச்சரிக்கும...
இதயநோய் ஆபத்தைக் குறைக்கும் ஆறு உணவு பொருள்கள்
Yard Meaning in Tamil
இமயமலை பனிப்பாறைகளின் உருகும் வேகம் அதிகரிப்பு! 
சிறுத்தைகளின் மரண தேசமா இந்தியா?
வீடியோக்களில் இருந்து பிரேம்களை படம் பிடிப்பதை எளிதாக்கியுள்ளது கூகுள் குரோம் பிரௌசர்..!!
ரியல்எஸ்டேட்வீழ்ச்சியால், கனேடியக்குடும்பங்களுக்கு பில்லியன்கணக்கில்நட்டம்.
கஞ்சா போதையில் காரோட்டினால் என்ன ஆகும்? வாருங்கள்.. ஆய்வு முடிவைப்  பார்க்கலாம்..!!
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *