கனடா காட்டுத் தீயின் புகை அமெரிக்காவை அடைந்தது

செய்தி சுருக்கம்:
மத்திய கனடாவில் கடந்த ஆறு வாரங்களாக பரவிவரும் காட்டுத் தீயின் புகை தெற்கு நோக்கி பயணித்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் வட கிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
நியூயார்க் நகரில், அமெரிக்காவின் காற்றின் தரக் குறியீடு அபாயகரமான நிலைக்கு உயர்ந்துள்ளது, இதனால் பல வெளிப்புற நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிறன்று, கிட்டத்தட்ட 3.3 மில்லியன் ஹெக்டேர்கள் காடு, தீயால் எரிந்து அழிந்து இருக்கிறது. இது 10 ஆண்டு சராசரியை விட 13 மடங்கு அதிகமாகும். 120,000 க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Wildfires ravaging swaths of Canadian forest have brought smoke and haze to the eastern United States. Watch as #EarthCam witnessed New York City turn an otherworldly shade of orange as the smoke smothers the city. pic.twitter.com/G8TSvOpaT0
— EarthCam (@EarthCam) June 7, 2023