fbpx
LOADING

Type to search

இலங்கை தெரிவு பல்பொருள்

இலங்கை அரசியலில் வலுவிழக்கும் புத்த பிக்குகள்! பலவீனமான அத்தியாயத்தின் தொடக்கம்!!

செய்தி சுருக்கம்:

 இலங்கையின் தற்போதைய அரசியல்  மற்றும் பொருளாதார சூழலில் அரசியலில் ஈடுபடும் புத்த பிக்குகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.  2022 எதிர்ப்புகள் மற்றும் ராஜபக்சேக்களின் வீழ்ச்சி இந்நிலைக்கு  வழி வகுத்துள்ளது. 

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

பல ஆண்டுகளாகவே இலங்கை அரசியலில் புத்த பிக்குகள் பௌத்த குருமார்கள் அதீத செல்வாக்கு படைத்தவர்களாக விளங்கி வந்துள்ளனர்.  2019 மற்றும் 2020 தேர்தல்களில் ராஜபக்சே சகோதரர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)   வெற்றிக்காக இவர்கள் கடுமையாக உழைத்தார்கள்.  சொல்லப்போனால் நாடு முழுவதும் உள்ள புத்த கோயில்கள் பிரச்சார அலுவலகங்களாகவே மாற்றப்பட்டிருந்தன.  ராஜபக்ஷைகளுக்கு வாக்களிப்பது தேசப்பற்று மட்டுமல்ல மதக் கடமை எனவும் சித்தரிக்கப்பட்டது.  

 ராஜபக்சேக்களின் தவறான ஆட்சியின் காரணமாக இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளானது. 2022-ல் தீவிரமான எதிர்ப்பு ராஜபக்சே சகோதரர்களை ஆட்சி கட்டிலில் இருந்து வெளியேற்றியது. 

ஆட்சிகள் மாறி காட்சிகள் மாறிய போதும் வியந்து போன இலங்கையின் பொருளாதார நிலை காரணமாக பொதுமக்கள்  தங்கள் அன்றாட வாழ்வை நடத்துவதற்கே பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர்.  1956க்கு பிறகு முதன் முறையாக இலங்கையில் பொருளாதாரம் முதன்மையான பிரச்சினையாக கருதப்பட்டது.  இன ரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் எதிரிகளை விட பணவீக்கம் மற்றும் இலங்கை ரூபாயின் வீழ்ச்சி அதிக முக்கியத்துவம் பெற்றது. 

இலங்கையின் இன்றைய நிலை புத்த பிக்குகளின் வாழ்வை சோதனைக் காலமாக மாற்றியுள்ளது.  கடந்த ஆட்சியாளர்களுக்கு பெரும் ஆதரவை வழங்கி ஒரு மோசமான ஆட்சிக்கு வழிவகுத்தவர்கள் என்ற பெயரை இன்று இவர்கள் சுமந்திருக்கின்றனர். எனவே இலங்கையின் இன்றைய நிலைக்கு தகுந்தவாறு புத்தபிக்குகள் புதிய நிலைப்பாட்டையும் புதுவிதமான அச்சுறுத்தல்களையும் முன்வைக்கின்றனர். 

பின்னணி:

ரணில் விக்கிரமசிங்க புத்த பிக்குகளை மதரீதியான நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்துமாறு மரியாதையுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.  அதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் துறவிகளை அங்கி அணிந்திருக்கும் குழந்தைகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் அரசியல் களத்தில் முக்கியமான ஒரு சூழலை நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.  முதன்முறையாக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் புத்தபிக்குகளின் ஆதரவை எதிர் நோக்காத ஒரு நிலை அங்கு நிலவி வருகிறது. இதன் காரணமாகவே புத்த பிக்குகள் அனைத்து அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் சகட்டுமேனிக்கு குறை கூறி வருகின்றனர்.

ஆனால் ஆட்சி அதிகாரத்தை இத்தனை காலமாக சுவைத்து வந்த புத்த பிக்குகளுக்கு  இன்றைய நிலை பெரும் கவலைகளை  அளித்து வருகிறது.  அதிகாரம் இன்றி இருக்கும் இன்றைய அவர்களது நிலை புத்த பிக்குகளின் இயல்புக்கு எதிரானதோடு  மட்டுமல்லாமல்  பழக்கம் இல்லாததும் கூட.  எனவே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற புத்தபிக்குகள்  எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான்.

2022 டிசம்பரில், மிஹிந்தலை விகாரையின் பிரதமகுருவான வலவஹங்குனவாவே தம்மரதன  அரசாங்கத்திற்கு இறுதி எச்சரிக்கை ஒன்றை வழங்கினார்.  அதாவது,  ஒரு மாதத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள் இல்லையென்றால் இந்த அரசாங்கத்தையும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தூக்கி எறிந்து விட்டு புதிய ஆட்சியை அமைக்க செய்வேன் என்று.  இவர் தான் சில மாதங்களுக்கு முன்பு விக்கிரமசிங்க வை நோக்கு கொண்ட தலைவர் என்று புகழ்ந்துரைத்தவர்.  அதற்கு முன்னதாகவே இவர் ராஜபக்சேவை புத்திசாலித்தனமான தலைமை என்று பாராட்டியவர் ஆவார். 

ஆனால்,  அவர் கொடுத்திருந்த காலக்கெடுவிற்கு பிறகும் விக்கிரமசிங்க அரசு அவரது கோரிக்கைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அவர் தரப்பிலிருந்தும் எந்தவிதமான போராட்டமும் மேல் நடவடிக்கைகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 இதே போல ஓமல்பே சோபித என்ற புத்தபிக்கு –  இவர் தமிழர்கள்,  கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் போனவர் –  இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி பயன்படுத்திக்கொண்டு தனது செல்வாக்கை உயர்த்த முயன்றார்.  இலங்கை அரசு ஆகஸ்ட் 2022 மற்றும் ஜனவரியில் மீண்டும் மின்சார கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது.  இம் மின்சார கட்டண உயர்விலிருந்து  கோயில்களுக்கு மட்டும் சிறப்பு விதிவிலக்கு அளிக்குமாறு பௌத்த மத குருமார்கள் கோரிக்கை விடுத்தனர்.  ஆனால் அரசாங்கம் அதற்கு கொஞ்சமும் செவிமடுக்கவில்லை. 

பொருளாதார ரீதியான தளங்கள் இந்த அரசியல் ஆர்வம் கொண்ட  புத்த பிக்களுக்கு  கை கொடுக்காத நிலையில் அவர்கள் நாடு இனம் மற்றும் மதம் என்ற பழக்கமான விஷயங்களுக்கு திரும்ப தொடங்கினர். 

அந்த பிப்ரவரியில் புத்தபிக்குகள் பாராளுமன்றத்திற்கு அணிவகுத்து சென்றனர்.  13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.  225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 13வது திருத்தச் சட்டத்திற்கு முழு ஆதரவளிப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.  புத்தகங்களின் இந்த அர்த்தமற்ற போராட்டம் பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தால் அலட்சியப்படுத்தப்பட்டது. 

மே 18 அன்று தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு கனடாவின் பிரதமர் ஒரு அறிக்கை வெளியிட்டார். பலாங்கொட காஷ்யபா என்ற இளம் துறவி  கொழும்பில் உள்ள கனடா தூதரகத்திற்கு ஆர்பாட்டக்காரர்களுடன்  அணிவகுத்தார். இலங்கையின் போர் வீரர்களுக்கு  கனடா பிரதமர் அவமரியாதை செய்ததாகவும் இது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க விட்டால் புத்தபிக்குகள் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.  வழக்கம் போல இவரது போராட்டமும் எச்சரிக்கையும் பொதுமக்களாலும் அரசாங்கத்தாலும் கண்டுகொள்ளப்படவே இல்லை. 

தொடர்ந்து இது போன்ற அரசியல் பொருளாதார பிரச்சினைகளில்   புத்த பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பதும்  போராட்டங்களை அறிவிப்பதும் மக்கள் அதை கண்டுகொள்ளாமல் விடுவதும் நடந்து வருகிறது.  புத்த பிக்குகள் குறித்து அரசாங்கம் ஏற்கனவே எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

 மதச்சார்பற்ற அதிகாரத்தின் மீது ஆசை துறந்த நிலையைக் கொண்டவர் கௌதம புத்தர்.  ஆனால் இலங்கையை பொறுத்தவரை அவருடைய சீடர்கள் அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை கொண்டவர்கள்.  இலங்கையில் அரசியல் செயல்பாடு என்பது பிக்குகளின் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக திகழ்கிறது.  புத்த பிக்குகளை அரசியலில் இருந்து அகற்றும் எந்த ஒரு முயற்சியும் பௌத்தத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் எதிரான சதி என்றே பார்க்கப்பட்டு வந்துள்ளது. 

உண்மையில் மாற்றம் ஒன்றே மாறாதது.  புதிதாக உருவாகி வரும்  இலங்கையின் அரசியல் பொருளாதார சூழ்நிலை கருத்தில் கொண்டு புத்தபுக்குகள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசகனை செய்ய வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பு. 

தொடர்புடைய பதிவுகள் :

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாக் ஜலசந்தியின் குறுக்கே பாலம் அமைப்பதால் ஏற்படும் பலன்கள்
உடல்நலனை மட்டுமல்ல மனநலனையும் பாதிக்கும் ஜங்க் உணவுகள்! எதைத் தின்கிறோமோ.. அதுவாகிறோம்…!!
இ - சிகரெட் பாதுகாப்பனதில்லை..  அது உங்கள் ஆண்மையை பாதிக்கிறது.. விந்தணுக்களை சுருக்குகிறது.. எச்சரி...
Since Tamil Meaning
Entrepreneur Tamil Meaning
இந்தியா இலங்கை பேச்சுவார்த்தை - முக்கிய அம்சங்களாக இலங்கையின் எரிசக்தி துறை வளர்ச்சி மற்றும் துறைமுக...
Fukishima அணுமின் நிலைய கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் - இது மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற...
வீடியோக்களில் இருந்து பிரேம்களை படம் பிடிப்பதை எளிதாக்கியுள்ளது கூகுள் குரோம் பிரௌசர்..!!
இலங்கையின் டி. ஆர். சி வரைவில் தமிழர்களின் கவலைகளுக்கு தீர்வு எதுவும் இல்லை - சுமந்திரன்
Freelancer Meaning in Tamil
Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *