BRICS கூட்டமைப்பில் இணைந்த ஆறு புதிய நாடுகள் – சர்வதேச அரங்கில் வலுவான அமைப்பாகிறது பிரிக்ஸ்.


செய்தி சுருக்கம்:
BRICS கூட்டமைப்பின் 15 ஆவது உச்சி மாநாடு சமீபத்தில் தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலுள்ள Sandton Convention Center இல் நிகழ்ந்தது. அதில் கலந்துகொண்ட உறுப்புநாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய தென்னாப்பிரிக்க நாட்டின் அதிபர் மற்றும் நடப்பு பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் Cyril Ramaphosa பின்வரும் விவரங்களை அறிவித்தார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்திருந்த ஆறு நாடுகளின் மனுக்கள் நம் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களாலும் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இணைத்து கொள்ளப்பட்டுள்ளன. பிரிக்ஸ் அமைப்பில் புதிதாக தங்களை இணைத்துக் கொண்ட நாடுகள் Argentina, Egypt, Ethiopia, Iran, Soudi Arabia மற்றும் United Arab Emirates ஆகியவை ஆகும்.
வருகின்ற 2024 ஜனவரி முதல் இந்த ஆறு நாடுகளும் தங்களை பிரிக்ஸ் அமைப்பின் கூட்டு நாடுகள் என அறிவித்துக்கொள்ள முழு அதிகாரமும் வழங்கப்பட உள்ளது. இதுவரை பிரிக்ஸ் கூட்டணியில் Brazil, Russia, India, China மற்றும் South Africa ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தன, தற்போது இதனுடன் இணையவுள்ள ஆறு நாடுகளால் இந்த அமைப்பின் பலம் சர்வதேச அளவில் அதிகரித்து உள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
பிரிக்ஸ் அமைப்பில் புதிதாக ஆறு நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பேசிய தென்னாப்பிரிக்க நாட்டின் தலைவர், BRICS அமைப்புடன் இணைந்து கொள்ள ஆசைப்படுகின்ற அனைத்து நாடுகளின் முயற்சிகளுக்கும் மதிப்பளிப்பதாகவும், தற்போது புதிதாக அங்கம் வகிக்கும் ஆறு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு பிரிக்ஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றும் வரைமுறைகளை விளக்கி கூறுவதற்கு புதிய வடிவமைப்பை தயார் செய்து கொண்டிருப்பதாகவும், இதனால் எதிர்காலத்தில் பல புதிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டில் இந்த பிரிக்ஸ் அமைப்பில் புதிதாக தென்னாப்பிரிக்க நாட்டை இணைத்து கொண்டனர், அதன் பின்னர் 13 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது மேலும் புதிதாக ஆறு நாடுகளை தங்களைடைய அமைப்பில் இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் வலுவான கூட்டமைப்பாக பிரிக்ஸ் மாறியுள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட நிபந்தனைகள் எதுவும் இதுவரை விதிக்கபடாமல் இருந்த நிலையில் தற்போது நிகழ்ந்து முடிந்த 15 ஆவது உச்சி மாநாட்டில் இந்த அமைப்பில் புதிய உறுப்பு நாடுகள் இணைய தேவையான நிபந்தனைகளையும் வரையறைகளையும் தீர்மானித்து கொண்டுள்ளதாக தெரிகிறது.
பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் வருடத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்க படுவார். இந்நிலையில் வரும் ஆண்டில் தலைவர் பதவி பெறுவது ரஷியாவின் முறையாகும், இந்த மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புதின் விழா ஏற்பாட்டாளர்களை வெகுவாக பாராட்டினார், மேலும் அவர் பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள Ramaphosa சிறந்த நிர்வாக திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும், புதிதாக ஆறு நாடுகள் இணைவதால் பல்வேறு தொழில்நுட்ப விசயங்கள் மற்றும் பொறுப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும், அதனை சிறப்பாக நடத்தி காட்டியுள்ளோம் என்றும் கூறினார்.
மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்யம் மற்றும் சர்வதேச சந்தையில் அவர்களின் ஆளுமை போன்றவற்றை உடைக்க கிழக்காசிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பே பிரிக்ஸ் ஆகும். இந்த அமைப்பின் மூலமாக உலக சந்தையின் வணிகம் பன்முகத்தன்மை கொண்டதாக மாறியது, பண்டமாற்று மற்றும் வணிகம் அனைவருக்கும் பொதுவானது என்பதை நிரூபித்தது. ஆனாலும் இன்னும் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்க ஏகாதிபத்யமும் பிரிக்ஸ் அமைப்பின் மீது குறி வைத்து கொண்டு தான் இருக்கிறது. இந்த அமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையே கலகம் விளைவிக்கவும் முயற்சிக்கின்றனர். சோவியத் யூனியன் உடைந்த போது சந்தோஷமடைந்த மேற்கத்திய நாடுகள் தற்போது பிரிக்ஸ் அமைப்பை பார்த்து பதறுகின்றன. இதை பற்றி பிரிக்ஸ் அமைப்பினர் கருத்து தெரிவிக்கும் போது மேற்கத்திய ஏகாதிபத்யம் எங்களால் உடைந்த போதும் அவர்கள் இன்னமும் சர்வதேச வணிகத்தை டாலர் மதிப்பில் நிகழ்த்தி கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் ஆதிக்கத்தில் மட்டுமே உலக நாடுகள் இருக்க வேண்டும் என விரும்புகின்றன. இதையும் நாம் மாற்றி நம் உள்நாட்டு பண பரிவர்த்தனைகள் மூலமாக வணிக நடவடிக்கைகள் இனி மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
பின்னணி:
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பினர்களும் ஆறு புதிய நாடுகளின் புதிய உறுப்பினர்களும் பிரிக்ஸ் அமைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர். இந்த புதிய ஆறு நாடுகளின் இணைப்பால் அதிகரித்துள்ள வசதிகளால் இனி வரும் காலங்களில் சர்வதேச சந்தையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும் என தெரிய வருகிறது.
பிரிக்ஸ் அமைப்பு புதிய நாடுகளை உறுப்பினர் ஆக்கி கொள்வதில் ஒரு சமரசமான அணுகுமுறையை கையாள்கிறது, இதன் மூலம் உலகின் அனைத்து நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ள முடியும் படி அதன் சேர்க்கை கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் பல நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து கொள்வதன் மூலமாக சர்வதேச அரங்கில் மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்யத்தை முற்றிலுமாக முறியடிக்க முடியும் என்று பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.