fbpx
LOADING

Type to search

உலகம் தொழில்நுட்பம்

கீழே வரும் ட்விட்டர் குருவி.  உயர எழும் ப்ளூ ஸ்கை!  எலான் மஸ்க் விதிக்கும் கட்டுப்பாடுகளின் விளைவுகள்!!

செய்தி சுருக்கம்:

ப்ளூ ஸ்கை என்பது ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சியின் ஆதரவுடன் வளர்ந்து வரும் ஒரு நிறுவனமாகும்.  ட்விட்டரை போன்றே ப்ளூ ஸ்கையும் எழுத்துக்களால் ஆன சமூக ஊடக தளமாகும். 

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

 ஒரு நாளைக்கு ட்விட்டர் பைனாளர் இத்தனை இடுகைகளை மட்டுமே பார்க்க  முடியும் என்ற கட்டுப்பாட்டை எலான் மாஸ்க் விதித்ததை அடுத்து ப்ளூ ஸ்கை அதிகமான புதிய பயனர்கள் பதிவுசெய்துகொண்டு உள்ளே வருவதை கண்ணுறுவதாக  ப்ளூ ஸ்கை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எலான் மாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒவ்வொரு பயனாளரும் அவரது தகுதிக்கேற்ப ஒரு நாளைக்கு எத்தனை டிவிட்டர் இடுகைகளை காண முடியும் என்பதற்கான வரம்புகளை நிர்ணயித்தார்.  அதாவது,  சரிபார்க்கப்பட்ட கணக்குகள் ஒரு நாளைக்கு 10,000 இடுகைகளை பார்க்கலாம்.  சரி பார்க்கப்படாத கணக்குகள் ஒரு நாளைக்கு ஆயிரம் இடுகைகளை மட்டுமே பார்க்க முடியும்.  அதே சமயம் புதிய கணக்குகள் 500 இடுகைகளை மட்டுமே பார்க்க இயலும். 

 இந்த வரம்பைத் தாண்டி இடுகைகளைப் பார்க்க முயலும் பயனர்களுக்கு ‘விகித வரம்பை மீறுகிறீர்கள்’ என்ற செய்தி காண்பிக்கப்படுகிறதாம்.  அதிக அளவிலான தரவுகளை உறிஞ்சுதலை தடுப்பதற்கும் மற்றும் எளிதான கையாளும் வசதிக்காகவும்  இப்படிப்பட்ட வரம்புகள் அமலாக்கப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

எலான் மஸ்கின் இத்தகைய கட்டுப்பாடுகளையடுத்து மக்கள் டிவிட்டரின் போட்டி நிறுவனமான ப்ளூ கையை நோக்கி தங்கள் பார்வையைத் திருப்பி உள்ளனர்.  இதன் காரணமாக  ப்ளூ ஸ்கையில்  அதிக அளவிலான பயனாளர்கள் பதிவு செய்யத் தொடங்க,  சிறிது நேரத்திற்கு ப்ளூ ஸ்கை முடங்கியது.  எனவே ப்ளூ ஸ்கை புதிய  கணக்கு பதிவுகளை ஏற்பதை  தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.  மீண்டும் இப்பொழுது ப்ளூ ஸ்கை பதிவு செய்தல்களை ஏற்றுக் கொள்ள தொடங்கியுள்ளது. 

பின்னணி:

 இன்னமும் ப்ளூ ஸ்கை ஏற்கனவே இருக்கும் பயனாளர் மூலம் அழைப்பிதழை பெற்று இணையக்கூடிய அளவில் பீட்டா கட்டத்தில் மட்டுமே உள்ளது.  ட்விட்டர் வலைதளத்தில் நிகழ்ந்து வரும் ஏக கெடுபிடிகள் காரணமாக ப்ளூ ஸ்கை நிறுவனம் பலனை அடைந்து வருகிறது. 

 ப்ளூ ஸ்கை நிறுவனம் முதலில் 2019 இல் தொடங்கப்பட்டது.  ஏ டி  புரோட்டோகால் எனப்படும்  பரவலாக்கப்பட்ட நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் இத்தளம் இயங்குகிறது. 

 இந்த ஆண்டு  ஏப்ரல் இறுதிக்குள்  ப்ளூ ஸ்கை  50,000 மேற்பட்ட  பயனாளிகளை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளது.   ப்ளூ ஸ்கையை போன்று  மஸ்டோ டான்  என்ற வலைதளமும் ட்விட்டருக்கு எதிராக வளர்ந்து வருகிறது. 

 இத்தகைய போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியால்  ட்விட்டர்  நீலக் குருவியானது  தற்போது தரையை நோக்கி மெல்ல மெல்ல பாய்ந்து கொண்டிருக்கிறது என்று கருதலாம்.  எத்தனை போட்டிகள் வந்தாலும் ட்விட்டரை போன்று அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பொது தளம் அமைவது  கடினம் தான். எலான் மஸ்க் என்ன செய்கிறார் என்று டெக் உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள் :

வெண்பா: தமிழ்க் கலாச்சாரத்தோடு கூடிய சமையல் வீடியோ விளையாட்டு
மூளையில் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் காயங்களால் குழந்தைகளின் நுண்ணறிவு  பாதிக்கப்படாது: ஆய்வு சொல்லும...
அமெரிக்காவில் பரவும் இறைச்சி அலர்ஜி - ஆபத்துக்குக் காரணம் என்ன?
விவேக் ராமசாமி என்னுடைய இசையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்: ராப் ஸ்டார் எமினெம்
கருத்தடைக்கான தடையை உடைத்தது அமெரிக்கா! வரலாற்றில் முதன்முறையாக கருத்தடை மாத்திரைக்கு அமெரிக்காவில் ...
டிவிட்டர் அளவிற்கு திரெட் செயலி வளர்ச்சியடைவில்லையே ஏன்?
திசை மாற்றும் சமூக வலைத்தளங்கள்
தென்கொரியாவில் தடை செய்யப்படும் நாய் இறைச்சி உற்பத்தி! பல நூற்றாண்டு பழக்கத்திற்கு கொரியாவில் எதிர்ப...
அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிக் கலாச்சாரம்: அதிர்ச்சி ரிப்போர்ட்
ஏன் வீடுகளின் விலை வீழச்சி அடைகிறது? ஏனென்றால் நாம் போதுமான அளவு செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை!
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *