fbpx
LOADING

Type to search

இலங்கை தெரிவு பல்பொருள்

1983  கறுப்பு யூலை படுகொலைகள்: 40 வருடங்களாக ஆறாத ரணம்…

1983  கறுப்பு யூலை படுகொலைகள்:

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு நடந்த தமிழர் விரோத படுகொலைகள் மாறாத துயரத்துடன் கருப்பு ஜூலை என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.  ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை நீடித்த கொடூரமான அரச அனுசரணையுடன் நடந்த இனப்படுகொலை இதுவாகும். 

கைகளில் வாக்காளர் பதிவுப் பட்டியலைக் வைத்துக்கொண்டு ஆயுதம் ஏந்திய சிங்களக் கும்பல் தமிழர்களைத் தேடித்தேடி வேட்டையாடியது.  குறைந்தது 4,000 தமிழர்களின் உயிரைப் பறித்தது, 5,000 கடைகளை அழித்தது மற்றும் 150,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை வாழ்விடங்களை விட்டு வெளியேற்றியது. தமிழ் பெண்கள் நூற்றுக்கணக்கில் கற்பழிக்கப்பட்டனர் மற்றும் பல குடும்பங்கள் உயிருடன் எரிக்கப்பட்டன.

ஜூலை படுகொலைக்கான துவக்கப்புள்ளி

ஜூலை 23, 1983 இல் விடுதலைப்புலிகளால் 13 இராணுவத்தினர்  கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்று சொல்லப்பட்டாலும் இதற்கு முன்பிருந்தே ஆங்காங்கே இனப்படுகொலைகள் நிகழ்ந்த வண்ணமே இருந்தது வரலாறு. 

மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். சாட்டர்டே ரிவ்யூ உட்பட உள்ளூர் செய்தித்தாள்கள் இத்தகைய வன்முறைகளை ஆவணப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பகுதியில் ராணுவத்தினர் பயணித்த வாகனம் ஒன்றில் விடுதலைப் புலிகள் ஜூலை 23ஆம் தேதி 11:30  மணி அளவில் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 13 ராணுவ சிப்பாய்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் காயம் அடைந்த மேலும் இரண்டு ராணுவத்தினர் உயர்ந்ததால் சாவு எண்ணிக்கை 15 ஆக அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த  தாக்குதல் சம்பவம்  தொடர்பாக தகவல்கள் மறுநாள் வெளியான நிலையில் தென்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்த தொடங்கியிருந்தனர். 

உயிரிழந்த சிப்பாய்களின் சடலங்களை கொழும்பு பொரள்ளை பகுதியில் அடக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்து இருந்தது.  பொதுமக்களும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் இந்த பகுதிக்கு வந்திருந்தனர் . 

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்த வருகை தந்துள்ளதாக பொய் செய்திகள் பரவலாக பரப்பப்பட்டன.  எனவே ஆங்காங்கே சிறிய அளவில் நடந்து கொண்டிருந்த வன்முறைத் தாக்குதல் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது. 

தனிநாடு கோரிக்கையே காரணம்:

ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தான் இதற்கு காரணம் என்று பரவலாக கூறப்பட்டாலும் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக்  கூட்டணியினர் அடைந்த வெற்றியும் அதன் மூலம் தமிழ் மக்கள் அரசியல் களத்தில் கொண்ட எழுச்சிம் இந்த வன்முறைக்கு ஒரு காரணம். 

தனிநாடு கோரிக்கையுடன் தேர்தலில் வெற்றி அடைந்து எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பேரினவாத கொள்கை கொண்ட தலைவர்களும் பொதுமக்களும் அளித்த பதில் தான் இந்த கலவரம். 

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை 

கறுப்பு ஜூலை கலவரத்தின்போது 53 தமிழ் அரசியல் கைதிகள் – சிங்கள சிறைக் காவலர்களின் கண்காணிப்பில் – சிங்களக் கைதிகளால் வன்முறையில் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில், டெலோ போராளிகளான செல்லராசா “குட்டிமணி” யோகச்சந்திரன், கணேசநாதன் ஜெகநாதன் மற்றும் என். தங்கத்துரை ஆகியோர் அடங்குவர். 

குட்டிமணியும் ஜெகந்தனும் தமிழீழத்தின் பிறப்பைக் காணப்போகும் தமிழர்கள் மீது தங்கள் கண்களை ஒட்டவைக்கக் கேட்டதற்காகப் புகழ் பெற்றவர்கள். அவர்களின் சித்திரவதையில், அவர்கள் மண்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு அவர்களின் கண்கள் இரும்பு கம்பிகளால் பிடுங்கப்பட்டன.

ஆராத ரணம்!

ஒரு வாரம் காலம் நீடித்த இந்த வன்முறை தமிழ் மக்களின்  பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்தது.  வீடுகள் தொழிற்சாலைகள் அனைத்தும் திட்டமிட்டுத் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 

இலங்கையை தங்கள் தாயகம் என்று கருதி இருந்த தமிழர்களுக்கு புதிய பாடம் கற்பிக்கப்பட்டது.  அது அன்று உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கடத்தப்படும் வகையில் அழுத்தமாக ரத்தத்தால் அவர்கள் மனதில் எழுதப்பட்டது. 

1983 ஜூலை மாதம் எழுதப்பட்ட அந்த கருப்பு அத்தியாயம் இன்றும் தமிழர்கள் மனதில் ஆராத ரணமாக நீடிக்கிறது. 

தொடர்புடைய பதிவுகள் :

Obstructive Tamil Meaning| ‘Obstructive’ தமிழ் பொருள்
காட்டுத் தேனீக்கள் மனித இனத்திற்கு அத்தியாவசியத் தேவை..! காரணங்கள் என்ன..?
22 பேருடன் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றத்தைத் தொடங்க முடியும்..! எந்தமாதிரியான குணமுள்ள மனிதர்கள் த...
புது பொலிவு பெறும் ஏர் இந்தியா - வண்ணங்கள், அடையாளங்கள், சீருடைகள் அனைத்திலும் மெருகேற்றப்பட்டு நவீன...
நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளில் 76% நோட்டுகள் வங்கிகளில் திரும்ப ஒப்பட...
இ - சிகரெட் பாதுகாப்பனதில்லை..  அது உங்கள் ஆண்மையை பாதிக்கிறது.. விந்தணுக்களை சுருக்குகிறது.. எச்சரி...
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42,000ஐ தாண்டியுள்ளது
அரிசி மூட்டைகளை வாங்கிக்குவிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்! அரிசி ஏற்றுமதித் தடையின் விளைவுகள்!!
இருமல் மருந்தால் இறந்த குழந்தைகள்! உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது இந்தியா!!
எப்படிப்பட்டவர்கள் தங்களுக்குள் ஈர்க்கப்படுகிறார்கள்? புதிய டேட்டிங் ஆப்கள் சொல்வதென்ன?!
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *