fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம்

திகட்ட திகட்ட பாலியல் இன்பம் பெற உதவும் ஹிப்னாசிஸ்

sex and hypnosis

செய்தி சுருக்கம்:

பாலியல் உணர்ச்சி மற்றும் பாலுறவு கொள்வதில் சிக்கல்கள் உள்ளவர்கள் தாங்களாக சுய ஹிப்னாசிஸ் செய்து அல்லது தொழில்முறை வல்லுநர்களிடம் ஹிப்னோதெரபி பெற்று சிக்கல்களை மேற்கொள்ளலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம்முடைய மனம் நம்முடைய உடலை பெருமளவு கட்டுப்படுத்தக்கூடியது. ஆகவே, டீப் ரிலாக்ஸ்சேஷன் என்னும் ஆழ்நிலை இளைப்பாறுதல், மூச்சுப் பயிற்சி மற்றும் கற்பனை செய்தல் ஆகியவற்றின் வழியாக பாலியல் இன்பத்தை அதிகரிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

பாலுறவில் முழு இன்பம் கிடைப்பதற்கு இணையரிடையே ஒருவர்மேல் ஒருவருக்கு கவர்ச்சி இருக்கவேண்டும் என்பதை தாண்டி, ஆழ்நிலை இளைப்பாறுதலும் உணர்ச்சியை தூண்டும் கற்பனைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இளைப்பாறுவதன் காரணமாக பிறப்புறுப்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அது உணர்ச்சியை கூட்டுகிறது. பாலியல் தூண்டுதல் மேம்படுவதற்கு கற்பனை காட்சிகள் அதிகம் உதவுகின்றன. மனதிற்கு சில எளிய பயிற்சிகளை அளிப்பதன் மூலம் டீப் ரிலாக்சேஷன் என்ற ஆழ்நிலை இளைப்பாறுதலையும், உணர்ச்சியை தூண்டும் கற்பனையையும் அதிகரிக்க இயலும்.

பின்னணி:

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே பாரம்பரிய வைத்தியர்கள் உடலுக்கு சுகமளிக்க மனதோடு உரையாடும் முறையை பயன்படுத்தி வந்துள்ளார்கள். ஆனால் 1778ம் ஆண்டு வரைக்கும் மேற்கத்திய நாடுகளில் இம்முறை புழக்கத்தில் இல்லை. பாரிஸ் நகரத்தில் முதன்முதலாக இம்முறைய அறிமுகம் செய்தவர் ஃப்ரான்ஸ் ஆண்டன் மெஸ்மர் என்ற மருத்துவராவார். இவர், “இப்போது உங்களுக்கு வலிக்கவில்லை,” என்பது போன்று மனதோடு உரையாடும்போது, நோயாளிகளை மனம் இளைப்பாறும்வண்ணம் இசை கேட்கவும், கைகளை கோத்துக் கொள்ளவும் கூறினார். அவரிடம் சிகிச்சை பெற்ற பலர் உடல்ரீதியான நோய்க்கூறுகள் மற்றும் உணர்ச்சிரீதியான போராட்டங்களிலிருந்து விடுதலை பெற்றனர். 1784ம் ஆண்டு பிரான்சின் அறிவியல் கழகம் மெஸ்மர் போதிய ஞானமில்லாமல் மருத்துவத்தை கையாளுகிறார் என்று கூறி தடை செய்தது.

மெஸ்மர் தடை செய்யப்பட்டாலும் அவரது சிகிச்சை முறையான மெஸ்மரிசம் தொடர்ந்து புழக்கத்தில் இருந்தது. உடலுக்கும் மனதுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மெஸ்மர் காலத்திற்கு இருநூறு ஆண்டுகளுக்கு பின்னரே மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்தன.

மெஸ்மரிசத்துக்கு ஹிப்னாடிசம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனால் 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஹிப்னாடிசம், மக்களை மயக்கத்தில் அல்லது அரை தூக்கத்தில் ஆழ்த்தும் ஒரு வித்தை என்ற அளவுக்கே புரிந்துகொள்ளப்பட்டது.
இப்போது ஹிப்னோதெரபி ஆராய்ச்சி முடிவுகள் பதிப்பிக்கப்பட்ட ஒரு மரியாதைக்குரிய சிகிச்சை முறையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

மூளையின் சில பகுதிகள் தர்க்கரீதியாகவும் தீவிரமாகவும் சிந்திக்கக்கூடியவை. மற்ற பகுதிகள் கற்பனையையும் உள்ளார்ந்த அனுபவத்தையும் கட்டுப்படுத்தக்கூடியவை. மூளையின் பரிசோதனை அறிக்கைகள் ஹிப்னாசிஸ் மூறையின் கற்பனை மற்றும் அனுபவ மையங்கள் செயல்பட தூண்டுகிறது என்று காட்டுகிறது.
மைக்ரேன் தலைவலி போன்ற வலிகள், குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல் மற்றும் விரல் சூப்புதல், மனக்கலக்கம், ஆஸ்துமா, வயிற்றுக்கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க தொழில்முறை ஹிப்னோதெரபி பயன்படுத்தப்படுகிறது.

பாலியல் விசித்திரங்கள்:

பெரும்பாலானோர் பாலியல் சார்ந்த கற்பனைகளை, உறவுகளை தாண்டி பாலியல் தொடர்பு, குதவழி புணர்ச்சி, ஆபத்தான உறவு மற்றும் குழு உடலுறவு போன்றவற்றை கற்பனை செய்வதையே தவறு என்று எண்ணி தவிர்க்கின்றனர்.

உடலுறவு இணையை கயிறுகளால் கட்டுதல், கைவிலங்கு பூட்டுதல் போன்ற பாண்டேஜ், உறவில் ஆளுகை காட்டும் இணை விதிக்கும் தண்டனை மற்றும் விதிகளை ஏற்றுக்கொள்ளுதல் என்னும் டிசிப்பிளின், உடலுறவு இணை மீது படுக்கையறையிலோ அல்லது வெளியிலோ ஆதிக்கம் காட்டுதல் என்னும் டாமினன்ஸ், ஆதிக்கம் காட்டும் இணையின் செயல்பாடுகளுக்கும் விருப்பங்களும் தன்னையே ஒப்புக்கொடுத்தல் என்னும் சப்மிஷன், இணையை உடல் அல்லது மனரீதியாக புண்படுத்தி இன்பம் காணும் சாடிசம் போன்றவற்றிலும் ஈடுபட அநேகர் தயங்குகிறார்கள்.
சுய ஹிப்னாசிஸும் பாலியல் இன்பமும்
தனியாகவோ அல்லது இணையுடனோ பாலியல் இன்பத்தை நுகர சுய ஹிப்னாசிஸ் உதவுகிறது.

மனதில் அசைபோடுதல்:

பதின்ம அல்லது இளவயதில் ஆண்களுக்கு எளிதாக பாலியல் உணர்ச்சி எழும். வயதாகும்போது உணர்ச்சி மறைந்து, அதற்கு மெனக்கெட வேண்டியதுபோல உணருவர். பாலியல் சிகிச்சையாளர்கள், கற்பனையான காட்சிகளை மனதில் அசைபோடும் முறையை பரிந்துரைக்கின்றனர். உதாரணமாக மாலையில் உறவு கொள்வதாயின் காலையிலிருந்தே அது குறித்து கற்பனை செய்து பகல் கனவு காண்பது இன்பத்தை கூட்டி அளிக்கும் என்று கூறுகின்றனர்.

உடலுறவு குறித்த கலக்கம்:

உடலுறவில் எப்படி செயல்படுவோமோ என்ற கலக்கத்தை சுய ஹிப்னாசிஸ் அமர்த்துகிறது. மனதை அமைதிப்படுத்துவதால் பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஆண்களுக்கு விறைப்புத்தன்மையையும் பெண்களுக்கு தானாகவே பிறப்புறுப்பில் கசிவும் ஏற்படும். இவற்றில் குறைபாடு இருக்கிறவர்கள் சுகம் பெறுவார்கள்.

உச்சநிலை:

பாலுறவின் உச்சநிலையை அடைய சுய ஹிப்னாசிஸ் உதவுவதாக ஓர் ஆய்வு உறுதி செய்துள்ளது.
வல்வர் வெஸ்டிபூலிட்டிஸ் என்னும் பிறப்புறுப்பில் வலியால் அவதிப்பட்ட பெண்களுக்கு ஹிப்னோதெரபி அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகான உடலுறவின்போது அவர்களுக்கு வலி குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும், உறவுக்கு பின் திருப்தி கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சுயமாக செய்யும் ஹிப்னாசிஸ் மற்றும் முறையான வல்லுநர் தரும் ஹிப்னோதெரபி இரண்டுமே பாலுறவு சார்ந்த மனக்கலக்கத்தை குறைப்பதாகவும், உணர்ச்சியை தூண்டுவதாகவும், தயக்கத்தை மேற்கொண்டு சில உறவுநிலைகளில் ஈடுபடவும், பாலுறவு சார்நத் குறைபாடுகளுக்கு தீர்வு காணவும் உதவுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

மாதவிடாய் நிற்கக்கூடிய மெனோபாஸ் பருவத்தில் பாலியல் சார்ந்த உணர்ச்சிகள், செயல்பாடுகளில் பிரச்னை இருப்பதாக அநேக பெண்கள் கூறுகின்றனர். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அவ்வகைப் பெண்களுக்கு ஐந்துவேளை ஹிப்னாடிக் ரிலாக்சேஷன் என்னும் மன இளைப்பாறுதல் பயிற்சியையும் சில ஆலோசனைகளையும் அளித்தனர். அதற்கு பிறகு அப்பெண்கள் பாலியல் உணர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டனர்.

தொடர்புடைய பதிவுகள் :

டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு பெண்களின் உடலுறவு ஆர்வத்தைக் குறைக்கக்கூடும்! உங்களுடையதை அதிகரிப்பது எப்படி...
எச்.ஐ.வி எனும் இந்நூற்றாண்டின் மாபெரும் கொடிய சாத்தான்
சிக்கல்களைத் தீர்ப்பதற்கான மூன்று விதிகள்
இந்தியாவின் சந்திராயன் - 3 வெற்றிகரமாக நிலவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது!! 
மின்சார வாகனத் தொழிற்சாலைத் திட்டம்: இந்திய வர்த்தக அமைச்சருடன் டெஸ்லா பிரதிநிதிகள் சந்திப்பு
ஸ்மார்ட் போனில் மூழ்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்: ஒரு எச்சரிக்கை
இந்த விலங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போது அது திரும்...
புத்தாடைக்குள் ஒளிந்திருக்கும் அபாயம்
உடல் பருமன் அதிகரிப்பதற்கு பிரக்டோஸ் காரணமாகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?
திருமணத்தை மீறிய உறவு: ஏழு ஆண்டுகளே எல்லையா?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *