fbpx
LOADING

Type to search

இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் பொழுது போக்கு வர்த்தகம்

பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது அமேசான்

அமேசான் பிரைம் வீடியோ அல்லது பிரைம் வீடியோ என்பது அமேசான் என்ற அமெரிக்க நிறுவனத்தால் சந்தா அடிப்படையிலான ஸ்ட்ரீமிங் மீடியா மற்றும் வாடகை வசதி கொண்ட ஓடிடி மூலம் வழங்கப்படும் சேவையாகும். இது அமேசான் நிறுவனத்தின் பிரைம் சந்தா திட்டத்தின் கீழ் வரக்கூடியது. சீனா, கியூபா, ஈரான், வட கொரியா, சிரியா தவிர உலகம் முழுவதும் அமேசான் பிரைம் வீடியோவைக் காண முடியும். இதற்காகச் சந்தாதாரர்களிடமிருந்து மாதம் அல்லது வருடக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், அமேசான் இந்திய அரசு நடத்தும் ஸ்டூடியோக்களிலிருந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்ய இந்திய அரசாங்கத்துடன் இணைவதாக அறிவித்தது. அத்தோடு அரசு திரைப்பட நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப்களும் வழங்குகிறது. சியாட்டிலைத் தலைமையிடமாகக் கொண்ட அமேசானுக்கு இந்தியா மிக முக்கியமான வளர்ச்சிச் சந்தையாகும். ஆனால் அதன் விரிவாக்கம் இந்தியாவில் மிகக் கடினமாகவே உள்ளது. பல்வேறு சவால்களையும் சட்டப் போராட்டங்களையும் இந்தியச் சந்தையில் எதிர்கொண்ட அமேசான் தற்போது பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. பிரிட்டிஷ் உள்ளடக்க நிறுவனமான பிபிசி ஸ்டுடியோஸின் பிபிசி பிளேயர் மற்றும் பிபிசி கிட்ஸ் ஆகியவற்றை இந்தியாவில் வழங்க அமேசானின் வீடியோ ஒருங்கிணைப்புத் தளமான பிரைம் வீடியோ சேனல்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ, பிரிட்டிஷ் நிறுவனமான பிபிசி ஸ்டூடியோஸின் பிபிசி பிளேயர் மற்றும் பிபிசி கிட்ஸ் ஆகியவற்றைத் தனது ஸ்ட்ரீமரின் மேடையில் மதிப்புக் கூட்டப்பட்ட சேனலாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் பிரைம் வீடியோ சந்தாதாரர்கள் அசல் பிரிட்டிஷ் நாடகங்கள், நகைச்சுவை மற்றும் ஆவணப்படங்கள், உண்மை நிகழ்ச்சிகள், வாழ்க்கைமுறை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பிரபலமான பிரிட்டிஷ் உள்ளடக்கத்தைச் சேனல் மூலம் அணுக முடியும் எனத் தெரியவருகிறது.

பிபிசி பிளேயர் மற்றும் பிபிசி கிட்சை முதன்முறையாக இந்தியாவில் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் சிறந்த பிரிட்டிஷ் பொழுதுபோக்குகளை இந்தியப் பார்வையாளர்களுக்கு அவை வழங்கும் எனவும் பிபிசி ஸ்டூடியோசின் தெற்காசிய விநியோகஸ்தர் ஸ்டான்லி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். பிபிசி பிளேயரை அறிமுகப்படுத்தும் ஐந்தாவது நாடு இந்தியா என்றும் தற்போது இது சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளில் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிபிசி பிளேயர் சிக்ஸ்போர், அரசியல் திரில்லர், திரில்லர் தி டிப்ளோமேட், சிட்காம் சிட்டிசன் கான், ஷேர்லாக், மறக்கப்படாதது, ஹாப்பி வேலி, டாப் கியர், தி கிரேட் பிரிட்டிஷ் பேக் ஆப், திஸ் இஸ் கோயிங் டு ஹர்ட், தி நார்த் வாட்டர், தி பர்சூட் ஆப் லவ்,  மற்றும் ஸ்மால் ஆக்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கும் என்றும் பிபிசி கிட்ஸ் ஹே டக்கி, கோ ஜெட்டர்ஸ், ஜோஜோ அண்ட் கிரன் கிரன், சாரா அண்ட் டக் மற்றும் ஜூனியர் பேக் ஆப் போன்ற பிரபலமான குழந்தைகளின் நிகழ்ச்சிகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

அமேசானுடன் இணைந்து பிபிசி பிளேயர் மற்றும் பிபிசி கிட்ஸ் ஆகியவை பிடுபிடுசி(B2B2C) சேவைகளாகத் தொடங்கப்பட்டாலும் இந்தியச் சந்தையில் இந்நிறுவனம் நேரடியாக நுகர்வோரிடம் செல்லத் தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களுக்குச் சந்தா செலுத்துவதன் மூலமாக இந்தியாவில் பிரைம் விடியோ சேனல்கள் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன என்கிறார் இந்தியாவின் பிரைம் வீடியோ சேனல்களின் தலைவர் விவேக் ஸ்ரீவஸ்தவா. மேலும் அவர், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், உலகம் முழுமையும் பரந்த அளவிலான புகழ்பெற்ற நிகழ்ச்சிகளை வழங்கும் பிபிசி ஸ்டுடியோவுடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்”, எனத் தெரிவித்துள்ளார்.

பிபிசி பிளேயர் மற்றும் பிபிசி கிட்ஸ் ஆகியவை தற்போதுள்ள பிரைம் வீடியோ சேனல்களான லயன்ஸ் கேட் ப்ளே, டிஸ்கவரி பிளஸ், ஈரோஸ் நவ், டாக்குபே, மனோரமா மேக்ஸ், ஹோய்ச்சோய், எம்யூபிஐ, ஏஎம்சி ப்ளஸ், ஷார்ட்ஸ் டிவி, கியூரியாசிட்டி ஸ்ட்ரீம், மைஜென் டிவி மற்றும் மியூசியம் டிவி ஆகியவற்றுடன் இணைகின்றன.

பிபிசி பிளேயர் மற்றும் பிபிசி கிட்ஸ் ஆகியவை வருடத்துக்கு 599 ரூபாய்க்கு ஒரு தொகுப்பாகக் கிடைக்கின்றன. தனியாக ஆண்டுக்கு 199 ரூபாய்க்கு கிடைக்கும் பிபிசி கிட்ஸ் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு நிகழ்ச்சியை வழங்கும் எனக் கூறப்படுகிறது.

 பிபிசி இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோசமான கலவரங்களில் அவரது நடவடிக்கையை விமர்சிக்கும் ஆவணப்படத்தை ஒளிபரப்பிய பின், வரி அதிகாரிகள் அதன் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த நிலையில், அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்தியாவில்  அமேசான் பிபிசியின் இந்தக் கூட்டணி முக்கியக் கவனம் பெறுகிறது என்றும் அம்பானியின் ஜியோசினிமா இயங்குதளத்திற்கு இது நேரடியான சவாலாக இருக்கும் என்றும்  கூறப்படுகிறது.

தொடர்புடைய பதிவுகள் :

இலங்கைத் தமிழரான சங்கரி சந்திரனுக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த மைல்ஸ் பிராங்கிளின் இலக்கிய விருது
ஜனநாயக ஆட்சியும் செங்கோல்களின் வரலாறும்!
வெண்பா: தமிழ்க் கலாச்சாரத்தோடு கூடிய சமையல் வீடியோ விளையாட்டு
பொழுதுபோக்குகள் மன அழுத்த அபாயத்தை 30% குறைக்கும்:  புதிய ஆய்வு முடிவு
இந்தியா-குடிகளும் அவர்கள் குடிப்பழக்கமும் 
படைப்பாற்றலில் கற்பனைத்திறனில் மனிதனை மிஞ்சும் சாட்ஜிபிடி (ChatGPT)!! ஆகச்சிறந்த படைப்பாளிகள் கூட சா...
பச்சை நிறமாக மாறிவரும் பெருங்கடல்கள்! நிலமல்லவா பசுமையாக இருக்க வேண்டும்…!! என்ன நடக்கிறது?
ட்விட்டரை சாய்க்கத் தயாராகும் மெட்டா!  கயிறை (த்ரெட்ஸ்)  இழுக்கத் தயாராகுங்கள்!!
தமிழக முதல்வர் FinTech நகர திட்டத்தை தொடங்கிவைத்தார்
சோஷியல் மீடியா மயக்கத்தில் இந்தியா - முளைக்கும் திடீர் பிரபலங்கள்
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *