முதுகுவலிதானே என்று அலட்சியம் வேண்டாம்.. உலகில் பெரும்பாலான ஊனத்திற்கும் இயலாமைக்கும் காரணம் இந்த முதுகுவலிதான்..!!

‘ஆபீஸ்ல ரொம்பநேரம் உட்கார்ந்திட்டேன்.. லைட்டா முதுகு வலிக்குது’, ‘பைக்ல ரொம்ப தூரம் போனேனா.. முதுகு வலிக்குது’, ‘என்னனே தெரியல.. குனிஞ்சு நிமிந்தா முதுக வலிக்குது..’ – நாம் அதிகம் கேட்கும் உடல் உபாதையான இந்த முதுகுவலிக்கு இந்த தலைமுறையினர் அதிகம் ஆட்படுவதை கவனித்தீர்களா?
ஏதோ ஒரு தைலத்தையும், மருந்தையும் பூசிக்கொண்டு தற்காலிகமாக இந்த முதுகுவலியில் இருந்து விடுபடுவதோடு இந்த பிரச்சனை முடிந்துவிடுவதில்லை. உலகில் மிக அதிகமான ஊனமுற்றோரையும், இயலாதோரையும் உருவாக்குவதில் இந்த “சாதாரண” முதுகுவலிக்கு பெரும்பங்கு இருக்கின்றது என்பது அதிர்ச்சியளிக்கிறது.
600 மில்லியன் பேரை பாதித்திருக்கும் இந்த முதுகுவலி!
தி லான்செட் ருமட்டாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு இந்த கவலைக்குரிய செய்தியை அறிவித்திருக்கிறது. உலகில் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த லோவர் பேக் பெய்ன் எனப்படும் இந்த கீழ்பாக முதுகுவலியால் அவதிப்பட்டு, ஊனமுற்றும், இயலாமலும் உள்ளனராம்.
முதுகுவலி உடையவர்களது நாடு, வயது, பாலினம் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்பாக முதுகுவலியின் தாக்கத்தை அளவிட்டிருக்கின்றார்கள். 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் சுமார் 500 ஆய்வுகளின் தரவை ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றார்கள்.
இதில், கீழ்பாக முதுகுவலி என்பது எவ்வளவு பொதுவானது மற்றும் எவ்வளவு உடல்நல இழப்புக்கு வழிவகுக்கிறது என்பதன் விவரங்களை நமக்குத் தருகிறது. ஐந்து வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு குறைந்த முதுகு வலியை இந்த ஆய்வில் அளவிட்டிருக்கின்றார்கள்.
இயலாமை மற்றும் ஊனத்திற்கு முதுகு வலியே காரணம்!
கடந்த மூன்று தசாப்தங்களாக இயலாமைக்கான காரணங்களில் கீழ்பாக முதுகுவலி முதலிடத்தில் உள்ளது . இந்த கண்டுபிடிப்புகள் முதுகுவலியை ஒரு உலகளாவிய நோய் என்று அழைக்க அனைத்து சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது. இது உலகளவில் அனைத்து உடல்நல பிரச்சனைகளுக்கும் மூல காரணியாக உள்ளது.
கீழ்பாக முதுகுவலியின் காரணங்கள் என்னென்ன?
உடல் பருமன், புகைபிடித்தல் மற்றும் பணியிட பணிச்சூழலியல் காரணிகள் ஆகிய மூன்று முக்கிய ஆபத்து காரணிகள் கீழ்பாக முதுகுவலிக்கு தோற்றுவாயாக இருக்கின்றன. இந்த மூன்று காரணங்களும் நிவர்த்தி செய்யப்பட்டால் கீழ்பாக முதுகுவலியின் தாக்கத்தை 39 சதவீதம் குறைக்கலாம் என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
புகைபிடித்தல் என்பது முதுகெலும்பு கட்டமைப்புகளில் மைக்ரோசர்குலேஷனை பாதிக்கக்கூடியது. எடுத்துக்காட்டாக, வட்டுகள் மற்றும் மூட்டுகள், அத்துடன் எலும்புகள் பலவீனமடைதல் போன்றவற்றை புகைபிடித்தல் உருவாக்குகிறது. . ஆனால் புகைபிடித்தல் என்பது உடல் உழைப்பின்மை, உடல் பருமன் மற்றும் மோசமான தூக்கம் உள்ளிட்ட பிற வாழ்க்கை முறை காரணிகளுடன் சேரும்போது, அது மோசமான முதுவலி பிரச்சனையை கொண்டுவருகிறது.
இதேபோல், உடல் பருமன் மற்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணிகளும் முதுகுவலியுடன் தொடர்புள்ளவைதான். இவை அனைத்தும் கீழ்பாக முதுகுவலியின் அபாயத்தை அதிகரிக்கும் . உடல் பருமனானது நேரடியாக முதுகெலும்பு கட்டமைப்புகளில் அதிக சுமையை அளிப்பதால் அது நேரடியான முதுகுவலிக்கு காரணியாக அமைகிறது.
பெண்களை அதிகம் பாதிக்கும் முதுகுவலி!
ஒரு நபரின் பாலினம் கீழ்பாக முதுகுவலியின் அபாயத்தை நேரடியாக தீர்மானிக்கவில்லை என்றாலும், பெண்களிடையே இந்த கீழ்பாக முதுகுவலி அதிகம் காணப்படுகிறது. எங்கள் ஆய்வில் 225 மில்லியன் ஆண்களுடன் ஒப்பிடும்போது, உலகளவில் மொத்தம் 395 மில்லியன் பெண்கள் முதுகுவலியைக் கொண்டிருக்கின்றனர்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உடலியல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளால், பெண்கள் இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனலாம்.
கீழ்பாக முதுகுவலி உங்கள் வயதைப் பொறுத்து மாறுபடும். கீழ்பாக முதுகுவலி வேலை செய்யும் வயது வந்தவர்களுக்கு மிகவும் சகஜமானது என்பது ஒரு பொதுவான கட்டுக்கதை. ஆனால் உண்மையில், 80 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதுகுவலி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கீழ்பாக முதுகுவலி கொண்ட வயதான பெரியவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சிகிச்சைகளுக்கு உட்படுகின்றனர். ஆனால் அவர்கள் இளையவர்களை விட கடுமையான வலி மற்றும் இயலாமையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
நிறைவாக ஒரு வார்த்தை!
முதுகுவலி என்பது உண்மையில் உடலின் ஆதார மையமான முதுகுத்தண்டில் ஏற்படும் வலி உணர்வு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்தல், காலை நடை பயிற்சி, முறையான தூக்கம் மற்றும் போதிய ஓய்வு போன்றவை மட்டுமே உங்களை இந்த ஆபத்தான முதுகுவலி பிரச்சனையில் இருந்து காப்பாற்றும்.
முதுகுவலி என்பது கை கால்கள் செயலிழத்தல், இடுப்புக்கு கீழ் உடல்பாகம் மறத்துப் போதல் போன்ற தீவிரமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படும் ஒரு கவனிக்கப்படவேண்டிய ஆரோக்கியப் பிரச்சனை முதுகுவலி என்றால் மிகையில்லை.