English: guilty Tamil: குற்ற உணர்வுள்ள; குற்றமான; குற்றமுள்ள; குற்றம் சாட்டத்தக்க Explanation: குற்ற உணர்ச்சி என்பது நம் செயல்கள் நம்மைச் சுற்றியுள்ளவர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதிலிருந்து எழும் ஒரு உணர்ச்சி. ஒருவருக்குத் தன் குடும்பம், உணவு, பணம், வேலை, உடல்நலம் போன்ற எதைப் பற்றியும் குற்ற உணர்ச்சி எழலாம். நம்மில் பெரும்பாலோர் எது சரி எது தவறு என்று முடிவுசெய்ய நமது மனசாட்சியை நம்பியிருக்கிறோம். நமது தரம் மற்றும் மதிப்புக்கு ஏற்காத ஒரு செயலைச் செய்யும்போது […]
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். யாரைப் பார்த்தாலும் நாம் முதலில் கவனிக்கிற விஷயம் அவர்களுடைய முகம்தான், அதைக் கொண்டுதான் நாம் மனிதர்களை நினைவில் கொள்கிறோம் என்பதால் முகத்தோற்றம் ஒவ்வொருவருடைய தனிச்சிறப்பாக அமைகிறது, அதை நன்கு பராமரிக்கவேண்டும் என்பதில் மக்கள் கவனம் செலுத்துகிறார்கள். அப்படிப்பட்ட முகம் சில நேரங்களில் வண்ணம் மாறினால், அதுவும் கருப்பாக ஆனால் மக்கள் திகைத்துப்போவது இயல்பு. அதற்கு என்ன காரணம், அதை எப்படிச் சரிசெய்துகொள்வது என்று அவர்கள் சிந்திக்கிறார்கள், பதில்களைத் தேடுகிறார்கள். கருப்பு நிறம் […]
சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற ஒருவருக்குத் திடீரென்று வலி வருகிறது, அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் களைப்பாக உணர்கிறார் என்றால், ஒருவேளை அவருக்கு நரம்புத் தளர்ச்சிப் பிரச்சனை இருக்கக்கூடும். அது என்ன நரம்புத் தளர்ச்சி? நம்முடைய உடல்முழுவதும் நரம்புகள் இருக்கின்றன. அவற்றின்மூலம்தான் தகவல் தொடர்பு நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக, கையில் ஒரு முள் குத்துகிறது என்றால் அந்தத் தகவல் நரம்புகளின் வழியாகத்தான் மூளை அல்லது முதுகெலும்புக்குச் செல்கிறது, மூளையோ முதுகெலும்போ கையை எடுத்துவிடச்சொல்லிக் கட்டளையிடுகிறது, அந்தக் கட்டளையும் நரம்புகளின் வழியாகத்தான் கைக்கு […]
English: dude Tamil: (கொச்சை வழக்கு) ஆள்; நபர்; நண்பா; டேய்; அடேய்; அடியே; பங்கு; மச்சி Explanation: Dude என்ற சொல் பெரும்பாலும் இளைஞரால் ஒருவரை ஒருவர் கூப்பிடவோ அல்லது ஒரு நபரைக் குறிக்கவோ பயன்படுத்தப்படுகிறது. ‘டூட்’ என்பது பொதுவாக ஒரு ஆண் தனிநபரைக் குறிக்கும் ஒரு அமெரிக்கப் பேச்சுவழக்காக இருந்தாலும் அது இப்போது இருபாலரையும் குறிக்கிறது. இச்சொல் 19-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை மிக நாகரீகமான முறையில் உடையணிந்த ஒரு ஆண் […]
English: Dengue Fever Treatment in Tamil Nadu தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தமிழ்நாட்டில் அவ்வப்போது டெங்கு நோய் தாக்குவதும் உயிர் இழப்புகள் நேர்வதும் நடந்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசும் பிற நிறுவனங்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. பெரும்பாலானோருக்கு டெங்கு நோய் தாக்கிய சில நாள்களில் கடுமையான காய்ச்சலும் உடல்வலியும் ஏற்பட்டுப் பின் சரியாகிவிடும். சிலருக்கோ இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் (platelets) அழிந்து உடலுள் இரத்தக்கசிவு (haemorrhage) ஏற்படும். அச்சமயம் நோயாளிகள் […]