உணவகத்தில் நுழைகிறோம், பிடித்த உணவுப்பொருள் ஒன்றை ஆர்டர் செய்கிறோம். ஐந்து நிமிடத்தில் சர்வர் அந்தப் பொருளைக் கொண்டுவந்து வைக்கிறார், எடுத்துச் சாப்பிடுகிறோம். ‘எப்படி இருக்கு?’ என்று உடன் வந்தவர் கேட்கிறார். உடனடியாக நம் நாக்கில் தோன்றும் சொல் என்ன? ‘நைஸ்!’ இன்றைய நம் பேச்சில் மிக இயல்பாகக் கலந்துவிட்ட சொல் நைஸ். நல்ல உணவானாலும் சரி, அழகான ஓவியமானாலும் சரி, உருகவைக்கும் கவிதையானாலும் சரி, கைதட்டவைக்கும் சொற்பொழிவானாலும் சரி, ‘நைஸ்’ என்று சொல்லிவிடுகிறோம். இந்தச் சொல்லுக்கு உண்மையில் […]
இப்போதெல்லாம் எந்தச் செய்தித்தாளைத் திறந்தாலும் அதில் இந்துத்வா என்ற சொல் தென்படுகிறது. இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியும் அதன் தலைவர்களும் அந்தக் கட்சியின் பின்னணியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பினரும் இந்துத்வா கொள்கைகளை முன்வைத்துப் பேசுகிறார்கள் என்பதால், இந்துக்கள் அனைவரும் இந்துத்வாவை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்கிற ஒரு சிந்தனை உருவாகிவிட்டது. குறிப்பாக, பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருக்கும் இந்தியாவில் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருப்பதால் பெரும்பான்மை இந்துக்கள் இந்துத்வா […]
உடல்நலம் சரியில்லை என்றால் மக்கள் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அங்கு மருத்துவர் ஒருவர் அவர்களைப் பரிசோதித்து வேண்டிய மருந்துகளை எழுதித்தருகிறார். பின்னர் அவர்கள் மருந்துக்கடைக்குச் சென்று அந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு நலம் பெறுகிறார்கள். இதனால், நம் ஊரில் பெரும் எண்ணிக்கையில் மருந்துக்கடைகள் உள்ளன. சிறிய ஓர் அறைக் கடைகளில் தொடங்கிப் பிரமாண்டமாக எல்லாவிதமான மருந்துகளும் கிடைக்கும் கடைகள்வரை நாம் காண்கிறோம். இத்துடன், பல இணையத் தளங்கள், மொபைல் செயலிகளும் மருந்துகளை வீட்டுக்குக் கொண்டுவந்து தருகிறார்கள். அரசாங்க ஆதரவுடன் […]
உங்கள் நண்பர் வட்டாரத்தில் சிலர் எல்லாம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய அறிவுமுழுவதும் பழையதாக இருக்கும். அதாவது, இதற்குமுன் உலகத்தில் என்ன நடந்தது என்பதைமட்டும்தான் அறிந்துகொண்டிருப்பார்கள், இப்போது என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குச் சிறிதும் தெரியாது. பழைய அறிவின் அடிப்படையில்தான் அவர்கள் செயல்படுவார்கள். இன்னும் சிலர் மாறிவரும் உலகத்தில் என்னவெல்லாம் புதிது என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். புதிதாக வந்துள்ள படங்கள் என்ன, மக்கள் விரும்பிக் கேட்டு மகிழ்கிற பாடல்கள் எவை, எந்த ஊருக்கு எப்போது செல்லலாம், என்னென்ன […]
வால்நட் என்ற டிரை ஃப்ரூட்ஸுக்குத் தமிழில் என்ன பொருள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அதற்கு இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். அங்கு செல்லுமுன், டிரை ஃப்ரூட்ஸ்பற்றி நாம் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும். நன்மைதரும்டிரைப்ஃரூட்ஸ் இப்போதெல்லாம் டிரை ஃப்ரூட்ஸ் எனப்படும் உலர்பழங்கள் மிகுதியாகக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. கடைகளில், இணையத் தளங்களில், மொபைல் செயலிகளில் என்று பலவிதமாக இவற்றை வாங்கலாம். முந்திரி, பாதாம், உலர்திராட்சை போன்ற பலவும் இந்த வகையில் வருகின்றன. இவற்றில் பலவும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாவதாகச் சொல்கிறார்கள். இவற்றைத் தனியாகச் சாப்பிடுகிறவர்கள் […]