fbpx
LOADING

Type to search

பல்பொருள்

Attitude Meaning in Tamil

English: attitude

Tamil: மனப்பான்மை, மனப்பாங்கு, தோரணை, எதிர்மறையான/எதிர்க்கும் போக்கு (பேச்சுவழக்கு)

Explanation: 

ஒருவரது மனப்பான்மை அல்லது மனப்பாங்கு என்பது ஒரு குறிப்பிட்ட பொருள், நபர், பொருள் அல்லது நிகழ்வைக் குறித்த அவரது உணர்ச்சிகள், நம்பிக்கைகள், நடத்தைகள் ஆகியவற்றின் தொகுப்பைக் குறிக்கிறது. மனப்பான்மை பெரும்பாலும் அனுபவத்தின் அல்லது வளர்ப்பின் காரணமாக உருவாகிறது. மனப்பான்மை என்பது பொதுவாக நீடித்திருக்கும்; என்றாலும் அது அனுபவத்தின் காரணமாக மாறவும் கூடும்.

  • சமூகநீதி குறித்து உங்கள் கருத்து என்ன? 
  • இந்த ஊரிலேயே நல்ல அரசியல்வாதி யார்? 
  • பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை அனுமதிக்கலாமா? 
  • துப்பாக்கி விற்பனை கட்டுப்படுத்தப்பட வேண்டுமா?

இதுபோன்ற பல விஷயங்களைக் குறித்தும் நமக்கு மிகவும் வலுவான கருத்துக்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இதுபோன்ற பல விஷயங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டும் அவற்றை அனுபவித்தும் நம் மனப்பான்மைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த மனப்பான்மைகள் நம் நம்பிக்கைகளையும் நம் நடத்தைகளையும் பாதிக்கின்றன.  

Examples: 

  1. மகிழ்ச்சி உங்கள் மனநிலையையும் மனப்பாங்கையும் பொறுத்தது. (Happiness depends on your mindset and attitude.)
  2. ஒரு நபர் ஒரு விஷயத்தைப் பற்றிய முரண்பாடான நம்பிக்கைகள் கொண்டிருக்கும்போது அவரது மனப்பான்மை மாறக்கூடும். (A person’s attitude can change when he has conflicting beliefs about something.) 
  3. தியாவுக்கு நன்னம்பிக்கையுடைய மனப்பான்மை உள்ளது. (Diya has an optimistic attitude.)
  4. அந்த மாணவன் நேற்றைய வகுப்பில் ஏதோ எதிர்க்கும் விதமாகவே நடந்துகொண்டிருந்தான் (The student was showing some attitude in the class yesterday.)
  5. அவள் அமெரிக்கா சென்று வந்தவுடன் வெளிநாட்டினர் குறித்த அவள் மனப்பாங்கு மாறிவிட்டது. (Since she returned from the United States, her attitude towards foreigners has changed.) 
  6. “அரசியல்வாதியின் தோரணை அச்சுறுத்துவதாக இருந்தது,” என்று அவர்கள் கூறினர். (“The politician had a threatening attitude,” they said.)
  7. இன்று லீலா அவனை வாழ்த்த மறுத்தாள்; என்ன ஒரு திமிர்! (Lila refused to greet him today; what an attitude!)
  8. பயிற்சியாளர், “நீ அதைச் செய்தால் மட்டும் போதாது; நீ அதை சரியான மனப்பான்மையுடன் செய்ய வேண்டும்” என்றார். (The coach said, “It is not enough if you just do it; you must do it with the right attitude.”)
  9. படத்தில் அவள் சாய்ந்த தோரணையில் காணப்பட்டாள். (She was in a reclining attitude in the picture.)
  10. நீங்கள் அனைவரும் கல்வி குறித்துத் தவறான மனப்பான்மை கொண்டிருக்கிறீர்கள். (All of you have the wrong attitude to education.)

தொடர்புடைய பதிவுகள் :

22 பேருடன் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றத்தைத் தொடங்க முடியும்..! எந்தமாதிரியான குணமுள்ள மனிதர்கள் த...
விருந்தினர்கள் உடன் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஓய்வறையை உருவாக்கித்தர அனைத்து ஓட்டல்களுக்கும், நட்சத்தி...
வெகுஜன புதைகுழிகள் தொடர்பான நம்பகமான விசாரணையை வலியுறுத்தி இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக...
திருமணப்பொருத்தம்பார்ப்பதுஎப்படி?
ஒர்க்கிங் ஃப்ரம் ஹோம் : பிரிட்டனில் என்னென்ன பண்றாங்க பாருங்க!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார இணைப்பு! திட்டங்களை புதுப்பிக்கும் முயற்சியில் இருதரப்ப...
Designation Meaning in Tamil
Bestie Meaning in Tamil
இந்தியாவின் ஆபாசத் தடைச்சட்டங்களும் பெண்கள் மீதான சமூகத்தின் கட்டுப்பாடுகளும்…
வதந்தி பரவும் வேகத்தைப் பாருங்கள்! இலங்கையின் புனிதமான போதிமரத்தை மொபைல் சிக்னல்கள் பாதிக்கின்றன என்...
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up