fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம் சிறப்புக் கட்டுரைகள்

வழுக்கை விழுந்த ஆண்கள் ஆண்மை மிக்கவர்களா? – அமெரிக்க மருத்துவர் முடி உதிர்தலுக்கும் செக்ஸ் ஆசைக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார்.

செய்தி சுருக்கம்:

வழுக்கை விழுந்தவர்கள் படுக்கையறையில் துடிப்புடன் செயல்படுவார்கள் என்ற பிரபலமான கட்டுக்கதை அமெரிக்கா முழுவதும் பரவியுள்ள போதும் அங்கு பொது மருத்துவராக இருக்கும் மருத்துவர் ஒருவர் அந்த கருத்துக்கு மாறாக “வழுக்கை விழுந்தவர்கள் உண்மையில் உடலுறவில் நாட்டம் இல்லாதவர்களாக தான் இருப்பார்கள்”  என்று கூறியுள்ளார்.

பலநூறு ஆண்டுகளாக இருந்து வரும் நம்பிக்கையான, வழுக்கை தலை கொண்டவர்கள் ஆண்மையில் வீரியம் மிக்கவர்களாக இருப்பார்கள், ஏனெனில் உடலுறவு சமயத்தில் சுரக்கும் testosterone என்கிற சுரப்பி தான் முடி உதிர்வுக்கு காரணம், எனவே உடலுறவில் அதிக நாட்டம் கொண்டவர்கள் விரைவில் வழுக்கை அடைய நேரிடுகிறது என்கிற கருத்து தவறானது

வழுக்கை தலை கொண்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பலதரப்பட்ட ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்திருப்பது என்னவென்றால், முடி உதிர்விற்கும் உடலுறவில் நாட்டதிற்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என்பதாகும். வழுக்கைக்கும் ஆண்மையின் வீரியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

Lloyd’s Pharmacy நிறுவனத்தில் General Practitioner ஆக பணிபுரியும் Dr Neel Patel என்னும் ஆன்லைன் டாக்டர் கூறுவது “ஆண்மையின் வீரியத்துடன் வழுக்கை தலையை தொடர்பு படுத்தி பல கதைகள் நம்மிடையே உலவுகின்றன, ஆனால் ஆண்மைக்கும் அதன் வீரிய தன்மைக்கும் வேறு பல முக்கியமான காரணங்கள் உண்டு. தாம்பத்ய ஆரோக்கியம், குழந்தை உருவாகும் சக்தி, உயிரணுக்களின் எண்ணிக்கை போன்ற காரணங்களையும் நாம் சேர்த்து கொள்ள வேண்டியது இங்கு அவசியமாகிறது” என்கிறார். மேலும் “உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளும், தினசரி வாழ்வு நடைமுறைகளும், உணவு பழக்கவழக்கங்களும், வேலை செய்யும் இடம், வேலைப்பளு போன்ற காரணங்களும் தாம்பத்ய வாழ்வில் சிக்கல்களை உருவாக்கும். எனவே எந்தவொரு அறிவியல் ரீதியான ஆராய்ச்சியிலும், வழுக்கை தலைக்கும் தாம்பத்ய சுகத்திற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப் படவில்லை” என்றும் கூறினார்.

ஐம்பது வயதை நெருங்கும் போது 85% ஆண்களுக்கு முடி உதிர்தல் உண்டாகிறது, வழுக்கை ஏற்படுகிறது என்பதாக American Hair Loss Association என்ற அமைப்பின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வழுக்கை விழுவதற்கு பல்வேறு காரணங்களை மருத்துவ உலகம் முன்வைக்கிறது. அவற்றில் ஒருவரின் மரபணு, உணவுப்பழக்கம், மன அழுத்த அளவு, நீண்ட நாள் நோயின் தாக்கம் மற்றும் உடல் எடை இழத்தல் போன்ற காரணங்களும் முடி உதிர்வு ஏற்பட காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.

Dihydro testosterone (DHT) எனப்படும் ஒருவகை சுரப்பி உடலுறவு சமயத்தில் testosterone சுரக்கும் போது அதனுடன் இணைந்து சுரக்கச் கூடிய ஒன்றாகும். இந்த DHT அளவாலும்,

மரபணுவில் உள்ள பதிவுகளின் படியும் ஆண்களின் முன்பக்க தலையில் உள்ள முடியானது 50 வயதுக்கு மேல் உதிர ஆரம்பிக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

Medical Journal of Australia என்ற மருத்துவ இதழில் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளிவந்துள்ளது, அதில் குறிப்பிட தகுந்த வகையில் வழுக்கை விழுந்த நபர்களை கொண்டு மட்டும் சோதனைகள் செய்யப்பட்டு அவர்களின் ஆண்மையின் வீரியத்தின் பல வேறுபட்ட அளவுகளை பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்து முடிவுகளை சமர்ப்பித்துள்ளனர். அந்த ஆய்வின் முடிவில் வழுக்கை தலைக்கும், விந்து வெளியேறும் கால மாறுபாட்டிற்கும் எந்தவொரு குறிப்பிடத்தகுந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

வழுக்கை விழுந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் குறைந்தது நான்கு பெண்களுடனாவது உடலுறவு பழக்கம் கொண்டிருப்பார்கள் என்றொரு ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுகளின் முடிவுகளை தவிர, 18 வயதிலிருந்து 20 வயது வரையான ஆண்களிடம் எடுக்கப்பட்ட சர்வே விவரங்களின் படி, 10 நபர்களில் 3 நபர்கள் உடலுறவில் ஈடுபாடு அதிகமாக இருந்தால் விரைவில் வழுக்கை விழுந்து விடும் என்று நம்புகின்றனர். அதேபோல அந்த சர்வேயில் பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் வழுக்கைத் தலை உடையவர்கள் உடலுறவில் அதிக நாட்டம் கொண்டவர்களாகவும், அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியுள்ளனர். மேலும், முடி உள்ளவர்களை விட வழுக்கை விழுந்தவர்களுக்கு தான் ஆண்மை மிகுந்த வீரியமுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் இருந்து வருகிறது. இவ்வாறு Dr Neel Patel தெரிவித்துள்ளார்.

பின்னணி:

வழுக்கை தலையும், தாம்பத்ய உறவில் சிறப்பான செயல்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றும், அதைப்பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மருத்துவர் தெளிவுபட விளக்கியுள்ளார். விரிவான ஆய்வுகள் மற்றும் சர்வே முடிவுகள் இந்த உண்மையை நிரூபிக்க உதவியுள்ளது. முடி உதிர்தல் நிகழ வேறு பல காரணங்கள் உண்டென்றும், உடலுறவின் மீதான அதீத ஆர்வம் முடி உதிர காரணமில்லை எனவும் உறுதிபட கூறியுள்ளார் இம்மருத்துவர். அதேபோல பாலுணர்வு தூண்டப் படுவதற்கும் அதில் குறைபாடுகள் வருவதற்கும் பல்வேறு அம்சங்கள் காரணமாக இருக்கலாம். உடல், மன ரீதியான பாதிப்புகளும், வேலைப்பளுவினாலும் கூட ஆண்மை பாதிக்கப் படலாம் என்று தெரிகிறது.

எது எவ்வாறாயினும், ஆண்கள் தாம்பத்யத்தில் நாட்டமில்லாமல் போவது தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு நாள்பட்ட மதுப்பழக்கம் கூட காரணமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தினமும் உடல்பயிற்சி செய்து ஆரோக்கியமாக நம் உடலை பேண வேண்டும் நாம் அனைவரும். அதுவே மருந்து மாத்திரைகள் தேவை இல்லாத இன்பமான வாழ்வை நமக்கு பரிசளிக்கும்.

தொடர்புடைய பதிவுகள் :

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை அதிரவைத்த பூகம்பம், கவுகாத்தியில் வீட்டைவிட்டு அலறியடித்து வெளியேறி...
உங்கள் துணை மீது அதிக அக்கறை செலுத்துங்கள் - அப்புறம் பாருங்கள் உங்கள் செக்ஸ் வாழ்க்கை எப்படி மாறுகி...
அஜினமோட்டோ - முதுமை, இதயப் பிரச்சனைகளை வேகமாக ஏற்படுத்தும். - அலகாபாத் பல்கலைக் கழகம் ஆய்வு. 
எண்பதிலும் ஆசை வரும்
ஒர்க்கிங் ஃப்ரம் ஹோம் : பிரிட்டனில் என்னென்ன பண்றாங்க பாருங்க!
பின் மண்டை வலி வருவதற்கு என்ன காரணம்?
எச்.ஐ.வி எனும் இந்நூற்றாண்டின் மாபெரும் கொடிய சாத்தான்
$1.6 பில்லியன் பேட்டரி ஆலை ஒப்பந்தம் : தன் வசமாக்கிய இந்தியாவின் டாடா குழுமம்
பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் சுரங்கம் தோண்டும் இடத்தில் 5,000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டு...
மாரடைப்பைத் தொடர்ந்து வலி ஏற்பட்டால் உடனடி மரணம் நிச்சயம்! எச்சரிக்கும் சமீபத்திய ஆய்வு!
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *