fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம் உலகம்

அமெரிக்காவில் பரவும் இறைச்சி அலர்ஜி – ஆபத்துக்குக் காரணம் என்ன?

red meat

செய்தி சுருக்கம்:

அமெரிக்காவிலும் கனடாவிலும் ரெட் மீட் வகை இறைச்சியை சாப்பிடுவோர் ஒவ்வாமை என்னும் அலர்ஜியால் பாதிக்கப்படுகின்றனர். பூச்சிக்கடியால் உடலில் தங்கும் ஆல்பா கேல் என்னும் சர்க்கரைப் பொருள், இறைச்சியால் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. லோன் ஸ்டார் டிக் என்னும் பூச்சியே இப்பாதிப்புக்கு காரணமாயுள்ளது. இப்பாதிப்பு காணப்படுவது குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

ரெட் மீட் எனப்படும் மாடு, பன்றி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை நேரடியாக சாப்பிடுவதால் இப்பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்த இறைச்சியில் ஆல்பா கேல் என்னும் ஒருவித சர்க்கரைப் பொருள் உள்ளது. இதே சர்க்கரையை லோன் ஸ்டார் டிக் என்னும் பூச்சி, மனிதர்களுக்கு பரப்புகிறது. இறைச்சி மூலமாக அல்லாமல் வேறு வகையில், பூச்சிக்கடிப்பதன் மூலம் இந்தச் சர்க்கரைப் பொருள் இரத்தநாளங்களுக்குள் செல்கிறது. பிறகு ரெட் மீட் சாப்பிட்டால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த ஒவ்வாமை அமெரிக்காவிலும் கனடாவிலும் அநேகரை பாதித்துள்ளது.

பின்னணி:

இவ்வகைப் பூச்சியில் பெண் பூச்சிகளின் பின்புறம் வெள்ளை நிறப் புள்ளி ஒன்று காணப்படுகிறது. இதன் காரணமாக லோன் ஸ்டார் டிக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு உகந்த காலநிலை காணப்படுவதால் இவற்றால் ஏற்படும் நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் உயர்வதாக கூறப்படுகிறது.

நோய் அறிகுறிகள்:

லோன் ஸ்டார் பூச்சிகள் கடித்ததும் வட்டமாக ஒரு தடிப்பு ஏற்படும். லைம் நோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதுபோன்றே இந்தத் தடிப்பும் காணப்படும். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றில் அதிக வலி, சுவாசிப்பதில் சிரமம், தலை சுற்றல், உதடுகள், தொண்டை, நாக்கு மற்றும் கண் இமைகளில் வீக்கம் ஆகியவையும் காணப்படலாம்.

2017ம் ஆண்டு கிழக்கு ஒண்டாரியோவை சேர்ந்த லெஸ் வாட்டர்ஸ் என்பவருக்கு ஆல்பா கேல் சிண்ட்ரோம் கண்டறியப்பட்டது. ஒரு ஹாம்பர்கர் சாப்பிட்ட பின்னர் தனக்கு அப்பாதிப்பு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். தொண்டை வீங்கி, மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், இரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, மயக்கமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற வகை உணவு ஒவ்வாமைகள், சாப்பிட்டவுடன் ஏற்பட்டு விடும். ஆனால், லோன் ஸ்டார் பூச்சி கடித்தவர்கள், ரெட் மீட் சாப்பிட்டு பல மணி நேரம் கடந்தே நோய் அறிகுறிகள் தெரிகின்றன. இதன் காரணமாகவே இதை கண்டுபிடிப்பதிலும் சிகிச்சை அளிப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.

எங்கு காணப்படுகின்றன?

இவை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தென் மத்திய பகுதிகளில் காணப்பட்டன. தற்போது பல ஆண்டுகளாக வடக்குப் பகுதிக்கு நகர்ந்துள்ளன.

இன்னும் வடக்கில், கனடாவில் சாதகமான காலநிலை இருப்பதால் பறவைகள், மான்கள் மற்றும் வீட்டு விலங்குகள் மூலம் பரவுகின்றன.

அமெரிக்காவில் பாதிப்பு:

அமெரிக்காவில் லோன் ஸ்டார் டிக் எனப்படும் பூச்சி கடிப்பதால் ஏற்படும் ஆல்பா-கேல் சிண்ட்ரோம் எனப்படும் ரெட் மீட் அலர்ஜியால் 2010ம் ஆண்டு முதல் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னொரு அறிக்கையானது அமெரிக்காவில் காணப்படும் பொதுவான ஒவ்வாமைகளுள் 10வது இடத்தில் ஏஜிஎஸ் என்னும் ஆல்பா-கேல் சிண்ட்ரோம் உள்ளதாகவும், அந்நோய்க்குறியீட்டால் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது. அநேகர் தங்களுக்கு அப்பாதிப்பு இருப்பதையே அறியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்பூச்சியானது நோய்களை உருவாக்கும் வேறு வகை பாக்டீரியாக்களையும் மனிதர்களுக்குப் பரப்புவதாகவும், ரெட் மீட் வகை இறைச்சிகளுக்கு ஒவ்வாமையை உருவாக்குவது அரிது என்றும் பொது சுகாதார துறையினர் கருதுகிறார்கள்.
அமெரிக்காவின் பிரதான வணிகரீதியான பரிசோதனை மையத்தில் ஆல்பா கேல் எதிர் உயிரி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2017ம் ஆண்டு 13,000 பேராகவும், 2022ம் ஆண்டு 19,000 பேராகவும் உள்ளது.

கனடா:

இப்பூச்சிகள் கனடாவை சேர்ந்தவை அல்ல என்றும், அவை பெருகுவதற்கான ஆதாரங்கள் இல்லையென்றும் கூறப்படுகிறது. வேற்று நாடுகளிலிருந்து கனடாவுக்குள் வரும் பறவைகள் மூலம் இப்பூச்சிகள் வந்திருக்கக்கூடும். ஆனாலும் லோன் ஸ்டார் டிக் வகை பூச்சிகள் கனடாவில் நிலைகொள்ளும் ஆபத்து இருக்கும் என்று கருதப்படுவதால் அவை எங்கெங்கு தங்கக்கூடும் என்று சுகாதார துறையினர் ஆய்வு நோக்கில் முன்குறிக்கின்றனர்.

கனடாவில் வெதுவெதுப்பான காலநிலை இருப்பதால் பூச்சிகளால் ஏற்படும் நோய்கள் பெருகியிருக்கின்றன. ஒண்டாரியோவில் லைன் நோய் பாதிப்பு ஆரம்பமாகியுள்ளது. பூச்சி கடிப்பதால் ஏற்படும் அனபிளாஸ்மாசிஸ், பேபிசியோசிஸ் மற்றும் போவாஸ்சான் வைரஸ் நோய் ஆகியவையும் காணப்படுகின்றன. லோன் ஸ்டார் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கலாம் என்றும், மருத்துவர்களுக்கு இந்நோய் பற்றி தெரிய வந்திருப்பதால் அதற்கான பரிசோதனைகளை செய்ய அதிகமானோருக்கு பரிந்துரைக்கக்கூடும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வாமை சிலருக்கு மறைந்துவிடுகிறது. மறுபடியும் பூச்சிக்கடிக்காமல் கவனமாக இருப்பது முக்கியம். வனப்பகுதி, புற்கள் இருக்குமிடங்களுக்குச் செல்லும்போது உடலை நன்கு மறைக்கும் ஆடைகளை அணிந்திருப்பது அவசியம். பூச்சிகளுக்கான மருந்துகளை தெளிக்கலாம். வெளியே சென்று வந்தபின்னர் பெரியவர்கள் தங்கள் தோலிலும் குழந்தைகள் தோலிலும் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதாக என்று பார்க்கவேண்டும். செல்ல பிராணிகளை வளர்ப்போர் பூச்சிகளுக்கு சாதகமான பருவ காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது இதற்கென்று தனி சிகிச்சை இல்லை என்று கூறப்படுகிறது. அனபிலாக்சிஸ் என்னும் ஒவ்வாமை நோய்க்கூறுக்கான சிகிச்சையே அளிக்கப்படுகிறது. பூச்சிக் கடித்தால் உடனே சுகாதார துறையினரை அணுகி பரிசோதித்துக்கொள்வது அவசியம். இந்த அலர்ஜி காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை.

தொடர்புடைய பதிவுகள் :

உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை உயர்வது நின்றுள்ளது, ஆனாலும் கோவிட் காலத்திற்கு முந்தைய எண்ணிக்...
Alzheimer's Disease in Tamil
புத்தாடைக்குள் ஒளிந்திருக்கும் அபாயம்
சமூகப் பொருளாதாரச் சமத்துவமின்மை: வரலாறு சொல்வதென்ன?
Fukishima அணுமின் நிலைய கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் - இது மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற...
சிறுநீர்பாதைத் தொற்று பற்றி நம்மிடம் இருக்கும் மூடநம்பிக்கைகள்! தெரிவோம்… தெளிவோம்!!
புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைத்தாலும் தொடர்ந்து மது அருந்தினால் உயிர் தப்ப முடியாது! ஆய்வாளர்களின்...
உலகப்போரில் வீசிய வெடிகுண்டுகள், தோண்டத் தோண்ட அச்சுறுத்தல்கள்!
இந்தியாவின் ரஷ்யாவில் இருந்தான எண்ணெய் இறக்குமதி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது
இமயமலை பனிப்பாறைகளின் உருகும் வேகம் அதிகரிப்பு! 
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *