சாராயத்தால் சீரழியும் பல குடும்பங்களின் இன்பகரமான இல்லறவாழ்வு.

செய்தி சுருக்கம்:
அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உங்கள் உடலை உடலுறவுக்கு ஒத்துழைக்க மறுக்க வைப்பதுடன் வருங்காலத்தில் உங்கள் உடலுறவு நாட்டத்தையே அடியோடு மறக்கச் செய்துவிடும். கெடுதல் நிறைந்த இந்த குடிப்பழக்கம் ஆரம்பத்தில் சிறந்த உடலுறவுக்கு உதவி செய்வதுபோல தோன்றினாலும் இப்பழக்கம் தினசரி வாடிக்கை ஆகும் பொழுது உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாமல் செய்து நாளடைவில் உடலுறவின் மீதே வெறுப்பை உருவாக்க செய்யும், இதற்காக மருத்துவர்களை நாடி பலப்படுத்தும் மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் தினசரி குடிக்கும் வழக்கத்தால் அம்மாத்திரைகள் கூட பலனற்று போகும். இவ்வாறு தினசரி உபயோகிக்கும் மதுப்பழக்கத்தால் உடலுறவின் மீதிருந்த உங்கள் ஆர்வமும் ஆசையும் நாளடைவில் முழுமையாக நின்று போகவும் வாய்ப்புண்டு.
இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தன்னுடைய நாட்டமின்மையை தன் துணையிடம் சொல்லவும் முடியாமல் முழுமையாக ஈடுபடவும் முடியாமல் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாகி குடும்ப உறவுகளில் விரிசல் விழுவதும் உண்டு, இதனால் உங்கள் நடைமுறை வாழ்க்கை சின்னாபின்னமாகி போகக்கூடும். தன்னிலை மறந்து அளவுக்கு அதிகமான மதுவை அருந்தும் அனைவருக்குமே எப்போது வேண்டுமானாலும் மேற்கூறிய பாதிப்புகள் அனைத்தும் நிகழலாம் என மருத்துவர்களின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளின்படி மதுப்பழக்கத்திற்கு ஆளான பல ஆண்கள் உடலுறவில் ஆர்வமின்மை கொண்டவர்களாகவும், அல்லது உடலுறவில் அதிகநேரம் ஈடுபட முடியாமல் உடனே முடித்து உறங்கிப் போகிறவர்களாகவும் இருப்பதாக தெரிய வருகிறது. இன்னும் சிலர் எழுந்து நிற்கக்கூட முடியாமல் அடுத்தவர் கைத்தாங்கலாக பிடித்து படுக்கவைக்கப் படும் நிலையில் இருப்பர்.
தினமும் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு தன்னிலை மறக்கும் ஆண்களுக்கு Erection எனப்படும் விறைப்பு நிலையை கூட அடைய முடியாத அளவில் உடலுறவு சமயங்களில் பாதிக்கப்படுவர் என்கிறது ஆய்வு. இதுபோன்று ஏற்படக் காரணம் அளவை மீறிய ஆல்கஹால் தினசரி உடலுக்குள் செல்வதாகும். இம்மாதிரியான அதிகப்படியான மதுவில் கலந்திருக்கும் கெமிக்கல் சங்கதிகள் உங்கள் உயிரணுக்களின் உற்பத்தியை மெது மெதுவாக அழிக்கத் துவங்குகின்றன, அதனால் உடலுறவில் நாட்டமின்மை உருவாகிறது.
நெடுநாட்களாக மது அருந்துவதும், கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் தினமும் அதிக அளவில் உட்கொள்வதும் இம்மாதிரியான பின்விளைவுகளை உடலில் உருவாக்கியே தீரும். இதனால் உருவாகும் உடலுறவில் குறைபாடு உங்களுடைய மற்ற அனைத்து விதமான இன்பங்களையும் கூட அழித்து விடும். இன்னும் சொல்லப்போனால் இந்த தீய பழக்கமானது உங்கள் வீட்டு கடமைகளை மறந்து அந்த பணத்தில் மது வாங்கி அருந்த வைக்கும், மதுவிற்காக எவர் பின்னாலும் செல்ல வைத்து இறுதியில் படுகுழியில் தள்ளிவிடும்.
குடிப்பழக்கத்தால் காமத்தில் ஆசை தீர்ந்து போன ஒவ்வொரு ஆணும் தனக்குள் என்ன தவறு என்று யோசித்து யோசித்து மேலும் தீவிரமான குடிப்பழக்கததிற்கு அடிமை ஆகின்றான். பிரச்சினைக்கு தீர்வு காண முயலாமல் தன் துணையை தவிர்க்க முற்படுகிறான், இது மேலும் விரிசலை தான் இருவருக்குள்ளும் உண்டாக்கும், இந்த விதமான குடும்ப பிரச்சினைகளை காரணமாக கொண்டு மேலும் குடியையே நாடிச்செல்கிறான். இது தேவை இல்லாத வீண் சச்சரவுகளை உருவாக்கி சண்டை போட வைக்கும், தன் கையாலாகாத நிலையை மறைக்க மனைவியின் மீது குற்றம் சுமத்த முற்படுவார்கள். இதனால் தவறான முடிவுகளை எடுக்கும் குடும்பங்கள் பலவற்றை நாம் வாழ்வில் பார்க்கலாம்.
இல்லறவாழ்வில் சுகம் காண முடியாமல் போவதற்கு மருத்துவத்துறை பலவிதமான காரணங்களை முன்வைக்கிறது, வேலை செய்கின்ற இடத்தின் சூழல், பணிச்சுமை, அதீத கவலைகள், எல்லை மீறிய மனச்சோர்வு இவற்றால் கூட உங்கள் பாலியல் தூண்டுதல்களில் பாதிப்பு ஏற்படுத்த முடியும், சில சமயங்களில் இந்த மாதிரியான மனம் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக தாம்பத்ய உறவில் நாட்டம் குறைய வாய்ப்புள்ளது. இந்த காரணங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து தாம்பத்ய உறவின் விரிசல்களை சரி செய்துகொள்ள முடியாமல் தன் மீதான கழிவிரக்கம் காரணமாக மீண்டும் மீண்டும் மது என்னும் அரக்கனையே நாடிச்சென்று தங்களுடைய மொத்த வாழ்க்கையையும் சீரழித்து கொண்டவர்கள் ஏராளம்.
கைவிடமுடியாத போதைபழக்கம், அதனால் விளைகின்ற மன உளைச்சல், மனச்சோர்வு மற்றும் உடலுறவில் விருப்பமின்மை போன்ற பிரச்சினைகளை கண்டறிந்து மனதளவிலும் உடலளவிலும் சரிசெய்ய மருத்துவ வசதி தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. போதைபழக்கதில் இருந்து மீண்டு வர தரப்படும் சிகிச்சை சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம், ஆயினும் இந்த சிகிச்சை முறையில் தொடர்ந்து வழங்கப்படும் கவுன்சிலிங் முறைகளால் முழுமையாக போதை பழக்கத்தில் இருந்து மீண்டுவந்து தாம்பத்ய வாழ்வில் படிப்படியான முன்னேற்றத்தை விரைவில் அடைய முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
உங்கள் குடும்பத்தினரோ, நெருங்கிய உறவினர்களோ அல்லது நண்பர்களோ இந்த மது எனும் அரக்கனின் பிடியில் சிக்கித்தவித்தால் அவர்கள் விரக்தியின் உச்சம் சென்று வாழ்வை தொலைக்கும் முன்னர் எங்களை தொடர்பு கொள்ளவும். குடி போன்ற மற்ற எந்த விதமான போதை வஸ்து உபயோகம் செய்து அடிமை ஆகி இருந்தாலும் நாங்கள் முறையான சிகிச்சை குடுத்து அவர்களை புது மனிதனாக மாற்றி அவர்கள் வாழ்வில் வெளிச்சம் உண்டாக்கி தருவோம். மனம், உடல் மற்றும் உளவியல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைகளில் தீர்வு காண முடியும். பல இடங்களில் இம்மாதிரியான சிகிச்சைகளால் பலர் நலம் அடைந்து தங்களின் இல்வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து அனுபவிக்கின்றனர்.
Florida வில் அமைந்துள்ள Destination Hope என்னும் மறுவாழ்வு செண்டரில் கவுன்சிலிங் மற்றும் சீரான சிகிச்சை முறையால் நாள்தோறும் பலர் இந்த குடி மற்றும் போதை பழக்கங்களில் இருந்து நிரந்தரமாக மீண்டு வந்து மீண்டுமொரு நல்வாழ்வை தங்கள் துணையுடன் வாழத் துவங்குகின்றனர்.
பின்னணி:
தொடர்ச்சியான மது அருந்தும் பழக்கம் காலப்போக்கில் உடலுக்குள்ளும், மனதிற்குள்ளும், உறவுகளுக்குள்ளும் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தினசரி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட நினைக்கும்போது அல்லது உட்கொள்ளும் அளவினை குறைக்க முயன்று முடியாமல் போகும்போது அவர்கள் குடிக்கு அடிமையாகும் நிலையை அடைந்து விட்டார்கள் என மருத்துவ உலகம் தெரிவிக்கிறது.
இப்பழக்கதினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களையும் கோளாறுகளையும் பட்டியலிட்டு காண்பிக்கிறது மருத்துவ உலகம்
1. உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
கை கால்களில் நடுக்கம், மயக்கம் வரும் உணர்வு, கண்கள் இருண்டு போகுதல், அதிக வியர்வை மற்றும் அதிகமான தாக உணர்வு.
2. செயல்பாட்டில் மாற்றங்கள்:
அதீத சோகம், காரணமின்றி எரிந்துவிழுதல், தன் கருத்தை மற்றவர் மீது வலிந்து திணிப்பது, காரியங்களில் கவனச்சிதறல் மற்றும் கட்டுப்பாடில்லாமல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.
3. எண்ணங்களில் மாற்றங்கள்:
மனக்கவலை அதிகரித்தல், உணர்ச்சி மிகுதியால் பரவசம் அடைதல், சுய கோபம் அதிகரித்தல், தனிமையாக உணர்தல்.
4. இரைப்பை மற்றும் குடல் பாதிப்புகள்:
உடலானது உணவினை ஏற்க மறுத்து குமட்டலையும் வாந்தியையும் உண்டாக்கி உடலினை சோர்வடைய செய்தல்.
5. உடலியல் குறைபாடுகள்:
மயக்க உணர்வையும், தேவை இல்லாத பய உணர்வையும் உண்டாக்குதல்.
6. பொதுவான குறைபாடுகள்:
வாய் குழறுவது, கை விரல்களில் நடுக்கம், உடல் பாகங்களின் ஒருங்கிணைப்பில் தடுமாற்றம், நடக்கவோ நிற்கவோ பிடிமானம் தேவைப்படுதல்.