உடலுறவுக்குப் பிறகான செயல்பாடுகள் உங்கள் நெருக்கத்தைத் தீர்மானிக்கின்றன!! தம்பதிகளே தயாரா..?!

சாப்பிடுவதையே மொபைலை நோண்டிக்கொண்டு ஏதோ கடமைக்கு செய்யும் இந்த தலைமுறை உடலுறவை எவ்வாறு அணுகுகிறது? தலை வாழை இலை போட்டு, எந்த பதார்த்தத்தை எங்கே வைக்கவேண்டும் என்பதிலிருந்து எதை முதலில் உண்ண வேண்டும் எதை கடைசியாக திண்ண வேண்டும் என்பது வரை அணு அணுவாக பகுத்து வைத்து வாழ்ந்த நாம் இன்று அவசர கதியில் ஏதோ ஒன்றை கடையில் வாங்கி கடைவாயில் போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறோம்.
உடலுறவையும் இவ்வாறே அவசர கதியிலும் கடமையே என்றும் செய்வது சரியா? போர் பிளே (Fore Play) எனப்படும் உடலுறவுக்கு முன்பான முன் விளையாட்டுகள் பற்றிகூட பெரும்பாலானோருக்கு கொஞ்சம் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த ஆப்டர்கேர் (After care) பற்றி 90% பேருக்கு ஒன்றுமே தெரியாது.
உடலுறவுக்குப் பின்பான செயல்பாடு என்றால் என்ன?
உடலுறவு கொண்ட ஜோடிகள், அது முடிந்ததும் எத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் நெருக்கமான முக்கியம் என்கிறார்கள் நிபுணர்கள். இருவரும் ஆளுக்கொரு பக்கம் திரும்பி தூங்குவதோ, இல்லை செல்லை நோண்டுவதோ சரியான செயல்பாடு இல்லை.
உடலுறவுக்குப் பிறகான பொன்னான நேரத்தைச் செலவிடும் முறை உங்கள் செக்ஸ் வாழ்க்கை மற்றும் மண வாழ்க்கையை மேம்படுத்தும். உடலுறவுக்குப் பிறகான செயல்பாடு என்றதும் ஏதோ தாந்தரீக மாந்தரீக விசயமென்று கருத வேண்டியதில்லை. ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக்கொள்வது, சேர்ந்து திரைப்படம் பார்ப்பது அல்லது இணைந்து சமைப்பது போன்ற செயல்பாடுகளே போதுமானது.
இது ஏன் முக்கியமாகிறது?
உடலுறவென்பது ஒரு சிக்கலான அனுபவம். எல்லோருக்கும் எப்போதும் அது ஒரேமாதிரி இருப்பதில்லை. உச்சமடைதல் இருவருக்கும் நல்லபடியாக நடக்கலாம் அல்லது ஏதேனும் ஒருவர் மட்டும் உச்சத்தை அடையலாம். மனத்தாங்கல்கள், குழப்பங்கள், பரவசம், ஆனந்தம் அல்லது சோர்வு என்று பலவிதமான உணர்வுகள் சங்கமிக்கும் ஒரு நிகழ்வு உடலுறவு என்பது.
உடலுறவுக்குப் பிறகு நீங்களும் உங்கள் துணையும் எப்படி ஒன்றாக நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பது உடலுறவு மற்றும் பொதுவாக உங்கள் உறவு ஆகிய இரண்டிலும் உங்கள் ஒட்டுமொத்த திருப்தியை தீர்மானிக்க முடியும். இது குறித்து நடத்தப்பட்ட ஒரு மூன்று மாத கால ஆய்வில் , உடலுறவுக்குப் பிந்தைய நேரத்தை அதிக நேரம் செலவழித்த தம்பதிகள் கூடுதல் பிணைப்பு மற்றும் நெருக்கத்தை அனுபவித்தனர் .
அதே ஆய்வில் குறிப்பிட்ட கால இடைவெளியில் இதைச் செய்வது அதிக பாலியல் மற்றும் உறவு திருப்திக்கு வழிவகுக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த செயல்பாடு நீண்ட கால தாம்பத்ய உறவுகளில் இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல. சுருக்கமான பாலியல் சந்திப்புகளில் கூட, இந்த உடலுறவுக்குப் பிறகான செயல்பாடுகள் நீங்கள் திருப்தியாகவும் பாதுகாப்பாகவும் உணர முடியும்.
இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கும் கருத்துகள் என்னென்ன?
உறவுக்குப் பிறகு நீங்கள் எப்படி உணர்கின்றீர்கள் என்பதைப் பாருங்கள்!
உடலுறவுக்குப் பிறகு உங்கள் மனதையும் உடலையும் கவனிக்க இந்த நேரம் பொன்னானது. அந்த நேரத்தில் உங்கள் துணையிடமிருந்து நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதற்கான குறிப்புகளை பகிர்ந்துகொள்ள முடியும். நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வது, அதைப் பற்றிய உரையாடலைத் தொடங்குவதை அந்த நெகிழ்ச்சியான நேரத்தில் எளிது.
முதலில், உங்கள் உடல் எப்படி உணர்கிறது என்பதைக் கவனிக்க முயற்சிக்கவும். உடலில் எங்கும் ஏதேனும் பிடிப்புகள் அல்லது பதற்றம் உள்ளதா? ஒரு மசாஜ் உங்களை நன்றாக உணர வைக்குமா? வேறு ஏத்னும் உதவி தேவையா?
நீங்கள் திருப்தியாக, கவலையாக , வருத்தமாக, உற்சாகமாக அல்லது இன்னும் தாகமாக உணர்கிறீர்களா என்பதைக் கவனியுங்கள் உங்கள் உணர்வுகளைப் பற்றி உங்கள் துணையுடன் உரையாடுவது, கேலி செய்வது அல்லது ஒன்றாகச் சேர்ந்து உணவு சமைப்பது போன்றவை நீங்கள் ஒருவருக்கொருவர் பதற்றத்தையும் பிணைப்பையும் உடைக்க சிறந்த வழிகளாக இருக்கலாம்.
உங்கள் ஜோடிக்கான இடத்தை உறுதி செய்யுங்கள்!
Postcoital-dysphoria பற்றிய ஒரு ஆய்வில், உடலுறவு அனுபவத்திற்குப் பிறகு திடீரென சோகம், கண்ணீர் அல்லது எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படுதல் குறித்து கேட்க்கப்பட்டது. ஆண் பங்கேற்பாளர்களில் சுமார் 40% பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் இந்த உணர்வுகளை அனுபவித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பெண் பங்கேற்பாளர்களில் 46% இவ்வாறு உணர்ந்ததாகத் தெரிவித்தனர். இந்த உணர்ச்சிகள், கவனிக்கப்படாமல் இருந்தால், குறைந்த பாலியல் மற்றும் உறவு திருப்திக்கு பங்களிக்கும்.
உங்கள் ஜோடி அழுகை அல்லது வேறு ஏதேனும் உணர்வுக்கு ஆட்பட்டிருந்தால், அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒரு திறந்த உரையாடல் சிக்கலான உணர்வுகளைத் தீர்ப்பதற்கு உதவும். உடலுறவுக்குப் பிறகு உரையாடலில் சிறிது நகைச்சுவையைச் சேர்ப்பது இருவருக்குமிடையில் இணக்கத்தைக் கொண்டுவரும்.
இறுதியாக ஒரு வார்த்தை!
பேசுங்கள், சிரியுங்கள், உங்கள் உடலுறவு அனுபவத்தைப் பற்றி கேட்டறியுங்கள், சிறிய விளையாட்டுகளில் ஈடுபடுங்கள் – எதையேனும் உணர்வுப் பூர்வமாகச் செய்யுங்கள். உடலுறவுக்குப் பிறகு மரக்கட்டைகள் போல உறங்குவதோ எந்த உணர்வுமின்றி அமர்ந்திருப்பதோ எந்த வகையிலும் உங்கள் உறவுக்கு வலிமை சேர்க்காது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.