fbpx
LOADING

Type to search

இந்தியா சிறப்புக் கட்டுரைகள் வர்த்தகம்

அதானி நிறுவன ஆடிட்டர் பதவி விலகுகிறார்! – Hindenburg, அதானி குழும நிதிநிலை அறிக்கை பற்றி கேள்வி எழுப்பியதால் இந்த முடிவா?

கெளதம் அதானி

செய்தி சுருக்கம்:

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து வருவாய் மற்றும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் இருந்து வரும் அதானி குழுமத்தின் ஆடிட்டர் Deloitte அவர்கள் விரைவில் பதவி விலகவுள்ளதாக தெரிகிறது. மேலும் இது அதானி நிறுவனங்களின் நிதி மேலாண்மை மீது சந்தேகத்தை கிளப்ப வழிவகை செய்யும் என தெரிய வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் கௌதம் அதானியும் அவரது நிறுவனத்தின் மற்ற இயக்குனர்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த Hindenburg என்கிற சிறிய அளவிலான விற்பனை நிறுவனம் சமீபத்தில் அதானி குழுமத்தின் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து கேள்வி எழுப்பியுள்ளது என்பதே இதற்கு காரணமாகும். முறையற்ற வரி மற்றும் மானிய சலுகைகள் உபயோகம், அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு திடீரென சரிந்தது மற்றும் அவற்றின் கடன் மதிப்பு போன்ற காரணிகளை முன்வைத்து நம்பகமற்ற நிறுவனம் என்பதாக Concern தாக்கல் செய்துள்ளது அந்த அமெரிக்க நிறுவனம்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

Reuter’s செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ள நம்பத்தகுந்த தகவலின்படி, அமெரிக்க விற்பனை நிறுவனமான Hindenburg சமீபத்தில் அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் மீதான ஒரு குற்றச்சாட்டை எழுப்பியிருந்தது, அதன் காரணமாக புகார் மீதான விசாரணையும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பு வட்டமும் அதானி நிறுவனங்களின் மீது விழுந்தது. இந்த சமயத்தில் அதானி துறைமுக நிறுவனங்களின் ஆடிட்டராக இருக்கும் Deloitte தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் Hindenburg இந்த ஆடிட்டரிடம் தான் அதானி குழும பரிவர்த்தனைகள் பற்றிய கேள்வியை எழுப்பி இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நிதி தொடர்பான விசாரணைகளை அந்நிறுவன ஆடிட்டர் மட்டுமே எதிர்கொள்ள முடியும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அதானி நிறுவனத்தின் ஆடிட்டர் அவருடைய பதவியிலிருந்து திடீரென விலகுவது நிர்வாகத்தின் நிதி பரிவர்த்தனைகள் மீதான உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கும். மேலும், அதானி நிறுவனத்தின் கடன் அளவு மற்றும் அதனுடைய வணிக விவரங்களை கேட்டும், வரிவிலக்கு மற்றும் மானியங்கள் போன்ற அரசின் சலுகைகளை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளையும் Hindenburg முன்வைத்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அதானி நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு 150 பில்லியன் டாலர்கள் வரை சரிவை சந்தித்தது, ஆயினும் வேறுசில முதலீடுகள் மற்றும் தொழில்கள் மூலம் சிக்கல்களை சரிசெய்து இதுவரை நிலுவையில் இருந்த கடன்களை திருப்பி செலுத்தியதன் மூலமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்ட அதானி குழுமம் தற்போது இந்த ஆடிட்டர் பதவி விலகலால் மேலும் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிகிறது.

அதானி துறைமுகங்களில் சோதனையிடவும், ஆடிட்டரை விசாரிக்க கோரியிருந்த மனுவும் நிர்வாக தரப்பினால் நிராகரிக்க பட்டுள்ளது. அதானி குழுமங்களின் வியாபார மற்றும் வணிக பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஆய்வு செய்ய Hindenburg தன் குற்றச்சாட்டில் கோரியிருந்தது. கடந்த வெள்ளியன்று Reuters செய்தி நிறுவனம் ஆடிட்டரை தொடர்பு கொண்ட போதும் இந்த புகார் மீதான கருத்தை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார், அதானி துறைமுகங்களில் இருந்தும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. திங்கள் கிழமை அதானி நிறுவனங்களின் ஆடிட்டர் பதவியில் இருந்து Deloitte முறைப்படி விலகவுள்ளார் என்று Reuters க்கு கிடைத்த ஆதாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.

கடந்த மே மாதம் நீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்த போது, இந்திய பங்குச்சந்தையின் Watchdog எந்தவொரு தடயத்தையும் இந்த குற்றச்சாட்டில் கூறியிருப்பது போன்று கண்டறியவில்லை என்றும், எனவே அதானி குழுமத்தின் மீதான இந்த குற்றச்சாட்டுகள் இந்த வழக்கை எந்தவொரு முடிவுக்கும் வர முடியாமல் தொடர்ந்து இழுத்து செல்லும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு பின்னர் அதானி குழும சேர்மன் கௌதம் அதானி செய்தியாளர்களிடம் “Hindenburg நம் மீது கூறிய குற்றச்சாட்டுகள் உள்நோக்கத்தோடு ஜோடிக்கப்பட்ட ஒன்றாகும், நம் நிறுவனத்தின் நற்பெயருக்கும் பாரம்பரியத்திற்கும் களங்கம் விளைவிக்க முயலும் ஒரு போலியான குற்றச்சாட்டு ஆகும்” என்று தெரிவித்தார். மேலும், “எங்கள் அதானி குழுமம் அதன் நிறுவன செயல்முறைகளில், அதன் வெளிப்படைத்தன்மையில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளது, நாம் அரசுக்கு காட்டும் வருமானமும், அதற்காக நாம் கட்டுகின்ற வரியும் நம் உண்மைத்தன்மையை அரசுக்கு தெரியப்படுத்தும்” என்றும் கூறினார்.

 

பின்னணி:

அதானி நிறுவன பங்கு மதிப்புகள் சமீபத்தில் வெகுவாக சரிந்தது, அதன் காரணம் அமெரிக்காவின் விற்பனை நிறுவனம் ஒன்று அதானி குழுமத்தின் மீது புகார் அளித்ததுதான் என்று தெரிய வந்துள்ளது. மேலும், நீதிமன்றம் அதானி நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பிற்கு உட்படுத்தி ஆய்வுகள் செய்து அம்மாதிரியான ஏமாற்று வேலைகள் எதுவும் அங்கு நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஆயினும் தற்சமயம் அந்த நிறுவன ஆடிட்டர் பதவி விலக போவதாக கசிந்துள்ள தகவலால் மேலும் சில சம்பவங்கள் இந்த வழக்கில் நிகழலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் அதானி குழுமம் தற்போது இந்த விவகாரத்தால் கடந்த ஜனவரி மாதம் முதல் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. மேலும் என்ன தகவல்கள் வெளிவர போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

தொடர்புடைய பதிவுகள் :

26 ரஃபேல் ஜெட் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்சிடமிருந்து வாங்க போகும் இந்திய...
தூத்துக்குடி - இலங்கை படகு போக்குவரத்து தொடங்குமா?
ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மூவர் கைது
செயற்கை நுண்ணறிவு அலையில் வெற்றிகரமாகச் சவாரி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்கிறார் ஐபிஎம் சிஇஓ அரவி...
திருமணத்தை மீறிய உறவு: ஏழு ஆண்டுகளே எல்லையா?
பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிப்பு!
கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு 12 வருடங்கள் கால அவகாசம் அளித்தது இந்தியா.
இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளும் இலங்கை! இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் எல...
ஜனநாயக ஆட்சியும் செங்கோல்களின் வரலாறும்!
சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை எங்கே கொண்டு செல்கின்றன?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *