சேமிக்கும் பழக்கம் அதிகம் கொண்ட புத்திசாலி தலைமுறை 90ஸ் கிட்ஸ்

1980 களில் இருந்து 2000 களின் முற்பகுதி வரை பிறந்த 90களில் பிறந்தவர்களையே “மில்லினியல்” தலைமுறை எனப்படுகிறர்கள்.இதில் 1980-1995 இல் பிறந்தவர்கள் ஜென் Y எனவும் 1996 முதல் பிறந்தவர்களை ஜென் Z எனவும் குறிப்பிடுகிறார்கள்.
1946 முதல் 1964 வரை, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிறந்த தலைமுறையை ‘பேபி பூமர்கள்’ என்று அழைக்க படுகின்றனர்.இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு உலகம் முழுவதும் போருக்கு சென்றவர்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினர். அடுத்து வந்த 20 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை விரைவாக அதிகரிக்கத் தொடங்கியது. அதை ஒரு ‘பூம்’ என்று வருணித்ததால் அந்த தலைமுறையை பூமர்கள் என்று குறித்தனர்.
2010 க்கு மேல் பிறந்த தலைமுறை Generation ஆல்பா என குறிப்பிடப்படுகிறார்கள்.
பூமர் தலைமுறை சமூகத்தில் புரட்சியை நிறைய எடுத்து வந்தவர்கள். நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியை தொடங்கி வைத்தவர்கள். மில்லினியல் கிட்ஸ்க்கு பூமர் கிட்ஸ்ன் கனவுகள் கைகளுக்கு கிடைத்தன எனலாம். உலக போர் மற்றும் போர்கள் பல முடிவுக்கு வந்து தொழில்நுட்பம் வளர்ந்ததோடு அல்லாமல் சமூகமும் வளரும் கலகட்டத்த்தில் இவர்கள் பிறக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் “சுயமரியாதை” யை வளர்க்க மக்கள் நிறைய முயற்சியை எடுத்தனர். இந்த போக்கு இப்போது 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஒருவிதமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நெருக்கடியை அவர்களுக்குள் வளர்த்திருக்கிறது.
இப்போதைய காலக்கட்டத்தில் ஓர் வியாபாரத்தை தொடங்குவதும், அதை விரிவைடைய செய்வதும் சுலபம். இருந்த இடத்தில் இருந்துகொண்டு லாபத்தை உலகம் முழுதும் பங்குபோடுவதும் சுலபம். ஆனாலும் மில்லினியல் தலைமுறையிடம் இந்த வெற்றி போதவில்லை என்கிற மனப்பான்மை அதிகம் காணப்படுகிறது.
90ஸ் கிட்ஸின் அடுத்த தலைமுறை ‘தான், தன் சந்தோசம் மட்டுமே’ என உருவாகுகிறது என்கிற கண்ணோட்டம் இருந்தாலும் பூமர் தலைமுறையை காட்டிலும் அவர்களின் முயற்சிகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைப்பது எளிது எனும் சூழல் நிறைய இருந்தாலும் 2கே கிட்ஸின் ‘மகிழ்ச்சி’ என்பது கேள்வி குறியாக இருக்கிறது என்கிறது புள்ளிவிவரங்கள்.
‘அந்தந்த நொடியில் வாழ்தல்’ என்பதை துளியும் பின்பற்றாது எதிர்காலத்தை நினைத்து நினைத்தே எல்லாவற்றையும் கவனத்துடன் அணுகி, நிகழ்காலத்தை மறப்பது 90ஸ் கிட்ஸ் தனித்துவமான அம்சம்.இந்த தவறான அணுகுமுறையை 2கே கிட்ஸ் பெரும்பாலும் பின்பற்றுவது இல்லை எனலாம்.
அமெரிக்க ஓய்வுபெற்ற நெட்வொர்க் தொலைக்காட்சி பத்திரிகையாளர் தாமஸ் ஜான் ப்ரோகாவ் மில்லினியல்களை எச்சரிக்கையான தலைமுறை என்று அழைக்கிறார்.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற 17வது சிஐஐ மியூச்சுவல் பண்ட் உச்சி மாநாட்டில், ‘வளர்ந்து வரும் மில்லியினல்ஸ் முதலீட்டாளர்களின் வேகம் தொடரும்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டது.
கேம்ஸ் நிறுவனம் மூலமாக நடந்த மியூச்சுவல் பண்ட் பரிவர்த்தனைகளிலிருந்து கிடைத்த தரவுகளை வைத்து இந்த அறிக்கை வெளியிட்டது.
கேம்ஸ் நிறுவனம் இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் 69சதவீதம் பங்களிக்கிறது. 2019 – 23 வரையிலான நிதியாண்டில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யத் துவங்கிய இளைஞர்கள் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
2019 – 2023 நிதியாண்டில் 1.6 கோடி பேர் புதிதாக மியூச்சுவல் பண்ட்டை தங்களின் பணத்தை பெருக்குவதற்காக தேர்வு செய்துள்ளனர். இதில் 54% பேர், அதாவது 85 லட்சம் பேர் 90களின் முற்பகுதியிலும், பிற்பகுதியிலும் பிறந்தவர்கள்.
90% இளம் தலைமுறையினர் பங்குசார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களையே முதலீட்டுக்கு தேர்வு செய்துள்ளனர்.
இந்த இளம் தலைமுறையினரில் 21% பேர் செக்டோரல் எனும் துறை சார்ந்த மியூச்சுவல் பண்ட்களை தேர்வு செய்து முதலீடு செய்திருக்கிறார்கள். அதாவது ஐடி பண்ட், வங்கி பண்ட், ரியல் எஸ்டேட் பண்ட், உற்பத்தி சார்ந்த பண்ட், மருத்துவத் துறை சார்ந்த பண்ட் என இவ்வாறு துறை வாரியான பண்ட்களில் முதலீடு செய்துள்ளனர்.
இப்போது சொல்லுங்கள் யார் புத்திசாலி தலைமுறை? 90ஸ் கிட்ஸ் எனலாம் இல்லையா!
பசுமை புரட்சி, வெண்மை புரட்சி என புரட்சிகளின் மூலம் உடல் ஆரோக்கியத்தை காட்டிலும் அடிப்படை பசியை போக்கிக்கொள்ள போராடிய தலைமுறைகளின் எதிர்கால கனவென ஜென் z தலைமுறையை சொல்லலாம்.
டெலாய்ட்டின் 2022 உலகளாவிய தலைமுறை z மற்றும் மில்லினியல் சர்வேயின்படி, தற்போதைய இளைஞர்கள் அதாவது 2கே கிட்ஸ் என அழைக்கப்படும் Gen-Z தலைமுறையினர் மத்தியில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் பன்மடங்கு உள்ளது.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான இளம் தலைமுறையினர் பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். தற்போதைய நிலையற்ற பொருளாதார இயல்பு அவர்களை சில அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
டெலாய்ட்டின் 2022 உலகளாவிய கணக்கெடுப்பில் இன்றைய இளம் தலைமுறையினரில் 45 சதவீதம் பேர் தங்கள் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வருமானம் இல்லை என்றும் 25 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் தங்கள் ஓய்வு காலத்தை பற்றிய கவலையை தெரிவித்திருக்கிறன்றனர்.
அமெரிக்கா மற்றும் தெற்கு ஐரோப்பாவில் உள்ள உலகப் பொருளாதார மன்றம் நடத்திய ஆய்வில், முந்தைய தலைமுறைகளை விட இன்றைய இளம் தலைமுறையினர் சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு மிகவும் குறைவுஎன்று தெரியவந்துள்ளது. இன்றைய சராசரி வருவாயுடன் ஒப்பிடுகையில் சராசரி வீட்டின் விலை சீராக உயர்ந்து வருவதே இதற்குக் காரணம்.
முந்தைய தலைமுறைகளை விட இன்றைய தலைமுறை அமெரிக்கர்கள் வாங்கும் திறன் 86 சதவீதம் குறைவாக இருப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.
இன்றைய இளம் தலைமுறையினரில் 83 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாள் கனவுகளை நிறைவேற்ற விரும்புவதாக Refinitiv நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளார்கள். அதே சமயம் 77 சதவீத மில்லினியல்கள் மற்றும் இன்று 75 வயதிற்கு மேற்பட்ட வயதில் இருக்கும் 66 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் இளமை பருவத்தில் வாழ்நாள் கனவுகளைத் தொடர விரும்புவதாக கூறியுள்ளார்களென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜென் Z தலைமுறை குடும்ப சூழ்நிலைகளில் மற்றும் உறவுகளில் தளர்வுகளும், எளிதாக அணுகக்கூடிய அணுகுமுறைகளையும் காண்கிறார்கள்.இதுவே இவர்களுக்கு மற்ற முந்தைய தலைமுறைகளை காட்டிலும் சுதந்திரமாக கனவுகளை பின்தொடர வழிவகுக்கிறது.