உடல்நலம் சரியில்லை என்றால் மக்கள் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அங்கு மருத்துவர் ஒருவர் அவர்களைப் பரிசோதித்து வேண்டிய மருந்துகளை எழுதித்தருகிறார். பின்னர் அவர்கள் மருந்துக்கடைக்குச் சென்று அந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு நலம் பெறுகிறார்கள். இதனால், நம் ஊரில் பெரும் எண்ணிக்கையில் மருந்துக்கடைகள் உள்ளன. சிறிய ஓர் அறைக் கடைகளில் தொடங்கிப் பிரமாண்டமாக எல்லாவிதமான மருந்துகளும் கிடைக்கும் கடைகள்வரை நாம் காண்கிறோம். இத்துடன், பல இணையத் தளங்கள், மொபைல் செயலிகளும் மருந்துகளை வீட்டுக்குக் கொண்டுவந்து தருகிறார்கள். அரசாங்க ஆதரவுடன் […]