வாரன்பஃபெட்பங்குச்சந்தையில்எப்படிமுதலீடுசெய்கிறார்?

வாரன் பஃபெட் அமெரிக்க கொடையாளர், முதலீட்டாளர், தொழிலதிபர் ஆவார். ‘பெர்க்சயர் ஹாதவே’ எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அந்த நிறுவனத்தின் அதிக பங்குகளை கொண்டுள்ளவர்.
வாரன் பஃபெட் எவ்வாறு பங்குகளில் முதலீடு செய்கிறார்?
இவரின் கல்லூரி வாழ்க்கை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள வார்டன் பள்ளியில் இரண்டு வருடங்களும் பின் நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்தது. இங்கு பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இங்கு பெஞ்சமின் கிரஹாம் மற்றும் டேவிட் டாட் என்று பிரபலமான இரு பங்கு பத்திர முதலீட்டு ஆலோசகர்கள் பயிற்றுவித்தனர். இவர்களுள் பெஞ்சமின் என்பவர் ‘தி இன்டல்லைஜன்ட் இன்வெஸ்டர்’ புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.
வாரன் பஃபெட் தன்னைப் பற்றி குறிப்பிடும் பொழுது அவர் 85 சதவிகிதம் பெஞ்சமின் கிரஹாம் மற்றும் 15 சதவிகிதம் ஃபிஷர் என்று குறிப்பிடுகிறார்.
பெஞ்சமின் இடம் இருந்து கற்ற ஆலோசனைகளை இன்றுவரை இவருக்கு பெரிதும் உதவுகிறது. முக்கியமாக பங்குகளை வியாபாரமாக ஏற்பது மற்றும் சந்தையின் ஏற்ற இறக்கங்களை தெரிந்து அதை சாதகமாக்கிக் கொள்ளுதலே பங்குச்சந்தையின் அடிப்படைகள் ஆகும். இதை எங்களுக்கு கற்பித்தவர் கிரகாம் என இவர் கூறியுள்ளார். இன்னும் எவ்வளவு வருடங்கள் சென்றாலும் இதுவே பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு அடிப்படை விதிகள் ஆகும் எனவும் கூறுகிறார்.
இவர் முதலில் முதலீட்டு விற்பனையாளராகவும் பின் பங்கு முதலீட்டு ஆய்வாளராகவும் இருந்தார். பின் பபெட் பார்ட்னர்ஷிப் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். அதன்பின் ‘பெர்க்சயர் ஹாத்வே’ நிறுவன தலைவராகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இன்றுவரை தொடர்கிறார்.
பபெட் படித்து முடித்தபின் ஒமாகாவில் பங்குச்சந்தை தலைவராக இருந்தார். பின் நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் ‘மூலதன கொள்கைகளைப்’ பற்றி பாடம் எடுக்கத் தொடங்கினார். சில வியாபாரங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. சில தோல்விகள் பாடங்கள் என்பதற்கேற்ப திகழ்ந்தார். பின் கிரகாம் நிறுவனத்தில் வேலையை ஏற்றுக் கொண்டார். இவரின் கீழ் பணியாற்றுவது கடினமானதாக இருந்தது. அங்கு வால்டர்ஸ் உடன் நட்பு கிடைத்தது.
கிரஹாம் தன் கொள்கையான ‘பங்குகளின் மதிப்பிற்கும், அவற்றின் விற்பனை விலையும் சமநிலை எட்டிய பின்பே அந்தப் பங்குகள் பாதுகாப்பான விரிவான லாபங்களை அளிக்க முடியும்’ என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஆனால் பபெட்டிற்கு, இதில் உண்மை இருப்பினும் இதனால் பல வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்ற நிதர்சனமும் புரிந்தது. இதன் பின் கிரகாம் ஓய்வு பெற்று நிறுவனத்தை மூடியதால், பபெட் அவரின் சேமிப்பைக் கொண்டு பபெட் பார்ட்னர்ஷிப் லிமிடெட் நிறுவனம் என்ற மூலதன கூட்டு நிறுவனத்தை உருவாக்கினார்.
1957 – ஆம் ஆண்டிலிருந்து 3 கூட்டு நிறுவனங்களை இயக்கி வந்தார். பின் அவர் நிர்வகித்த கூட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 5, 6 என முன்னேறியது. 1958-ல் சேன்பார்ன் பங்குகள் நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவாக மதிப்பிட்டதை விளக்கினார். ஆதலால் இவருக்கு அங்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. பின் அதன் நிர்வாக குழுவில் ஓர் இடமும் அளிக்கப்பட்டது.
இவரது அனைத்து பங்கு நிறுவனங்களையும் இணைத்து ஒரே பங்கு நிறுவனமாக மாற்றினார். அப்போது பெர்க்சயர் ஹாதவே நிறுவனத்தின் பங்குகளை வாங்கத் தொடங்கினார். இவர் வாங்கிய விலையைவிட அதன் செயல்பாட்டு மூலதனம் குறைவாகவே இருந்தது. ஆனால் அந்நிறுவனத்தின் நிலையான சொத்துக்களான இயந்திரங்கள் இதில் இணைக்கப் படவில்லை. ஆனால் அதன் மேல் மட்ட குழுவை தன்வசப்படுத்தி அதன் தலைவராக கென் சேஸ் என்பவரை நியமித்தார். இவரின் நிறுவனத்தின் ஆரம்பத்தில் புதிய முதலீட்டாளர்களை இவர் வரவேற்கவில்லை. அதற்கு அவர் குறிப்பிட்ட காரணம் அல்லது யுக்தி என்று கூட சொல்லலாம். புதிய பங்குதாரர்கள் வெறும் மூலதனம் மட்டுமல்லாமல் சொத்துக்களை கொடுத்தால் மட்டுமே முடியும், இல்லையெனில் அவருக்கு பங்குதாரர்களை இணைக்க உடன்பாடு இல்லை எனக் கூறினார்.
அதன்பின் சில லாபங்களை தொடர்ந்து, தனது பழைய கூட்டு முயற்சி நிறுவனங்களை அழைத்து, அதன் பங்குதாரர்களுக்கு சொத்துக்களை வழங்கினார். பின் இவரின் பங்குகளின் விலை, உயர்ந்த நிலையில் ஃபோர்ப்ஸ் அட்டவணையில் முதன்முறையாக இடம் பெற்றார்.
பின் 2006ம் ஆண்டு தனது பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க திட்டமிட்டார். 2007இல் முதலீட்டு வணிகத்தை இவரை போல் இவர் வழியை பின்பற்ற ஒரு தலைவரோ அல்லது குழுவையும் தேடி லோவ் சிம்சனை தேர்ந்தெடுத்தார். பின் பொருளாதார நெருக்கடியின் போது, அதன் பின்னடைவின் போதும், முன்பே முதலீடு செய்ததால் சில வணிக வாய்ப்புகள் கிடைத்தன. இவரின் நிறுவனமும் சில இழப்புகளையும் சந்தித்துள்ளது.
இவரிடம் கேட்ட சில கேள்விகளும் அதன் விடைகளும்:
* விலை உயர்ந்த பங்குகளை பராமரிப்பது சிறந்ததா?
பின்பக்கம் காட்டும் கண்ணாடியை பார்க்கும் போது நாம் செய்ய வேண்டியது எளிதாகத் தோன்றலாம். ஆனால் முதலீடு செய்பவர்களின் துரதிர்ஷ்டம் பணி படர்ந்து இருக்கும் காற்றுத் தடுப்பு கண்ணாடி வழியாக காண்பது.
* பொருளாதார பின்னடைவு பற்றி?
மலை முகட்டில் இருந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது. பின்னடைவு மட்டுமின்றி, மக்கள் நான் இதுவரை கண்டிராத அளவு பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துள்ளனர்.
முதலீடுகள் பற்றி பல புத்தகங்கள் வந்துள்ளன. அதை சிறந்ததாக இவர் குறிப்பிடுவது, லேரி கன்னிங்காம் எழுதிய ‘ The Essays of Warren Buffet’ ஆகும்.
இவரின் கல்வியும், அனுபவமும் இவருக்கு மட்டுமல்லாமல் இவரைப் போன்று பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் பெரும்பாலோருக்கு உதவுகிறது. இதில் இவர் சிறந்து விளங்க பயிற்றுவித்த ஆசிரியர்கள், இவரின் அனுபவம் மற்றும் இவரின் நண்பர்களே காரணம்.