fbpx
LOADING

Type to search

சினிமா

பொன்னியின் செல்வன் நாவல் ஏன் இவ்வளவு பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது?

ஓர் வரலாற்றுப் புதினம் எதற்காக, ஏன் இவ்வளவு புகழ் அடைந்தது ? இதுவே இங்கு எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி. இதற்கான விடை –  நாவல் என்பது பொதுவாக கிரைம், ரொமான்ஸ், திரில்லர், திகில், வரலாறு என பலபிரிவுகளில்இருக்கும். மேற்கூறியஅனைத்துவகைகளையும்ஆசிரியர் கல்கியின் எழுத்தில்இந்நாவலில்காணலாம். ஆசிரியரின் விவரிக்கும் தன்மை அனைத்து வகையான மக்களையும் ரசிக்கத் தூன்றுகிறது. ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் பார்க்கும் கண்ணோட்டம் மாறுபடுகிறது. ஆனால் இந்த நாவலைப் பொறுத்தவரை ஆசிரியரின் விவரிப்பு பாரபட்சமின்றிஎல்லோரையும் கவரும்வகையில்உள்ளது. இந்நாவலை படித்து முடித்தவர்களுக்கு தோன்றும் இயல்பானகேள்விஎன்னவென்றால், எவ்வாறு ஒரு மனிதன் இவ்வளவு திறமையான அரசனாக திகழ்ந்தான் என்பதே!  ஏனெனில் கல்கி ராஜராஜ சோழனை பற்றி கூறிய விஷயங்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புல்லரிக்கும் விதமாகவே உள்ளது. போட்டியும் , பொறாமையும் நிறைந்த உலகில் தனது சிறிய தந்தைக்கு அரியணையை விட்டுக் கொடுக்கும் மனிதனாக அருள்மொழிவர்மர் உள்ளார். பின்பு உத்தம சோழரின் சிவபக்தி காரணமாகவும், மக்களின் விருப்பத்திற்காக அரியணையில் அமர்கிறார் அருள்மொழிவர்மர். இதுவே, அருள்மொழிவர்மரின் உயரிய பண்புகளை வெளிப்படுத்துகிறது. இந்நாவல் சுந்தரசோழர் நோய்வாய் பட்டிருப்பது, பழுவேட்டயர்களின் சதி, ஆதித்த கரிகாலரின் மறைவு குறித்த மர்மம் என சில விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வர்ணனைகள், சில கற்பனை மாந்தர்கள் என சேர்க்கப்பட்டு கதைக்கரு இன்னும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. உண்மை கதாபாத்திரங்களுக்கு சமமாக கற்பனை மாந்தர்களின் பங்கும் இதில் இருக்கிறது. பராந்தகரின் மூன்று புதல்வர்களில் முதல்வரான  ராஜஆதித்ய சோழர் போரில் இறந்து விடுகிறார், இரண்டாவது புதல்வர் சிவ பக்தியில் நாட்டம் உடையவர் .வெகுகாலம் கழித்தே குழந்தை உத்தம சோழர் பிறக்கிறார். ஆகையால் மூன்றாவது புதல்வரான அரிஞ்சயர் ஆட்சிக்குவருகிறார். அவருக்கு ஏற்பட்ட காயங்களால் அவர்தம் மகனான சுந்தர சோழர் ஆட்சியில் அமர்கிறார். இவரது புதல்வர்கள் ஆதித்ய கரிகாலன் ,குந்தவை மற்றும் அருள்மொழிவர்மர் ஆவர். ஆதித்ய கரிகாலன் இறந்ததால் அருள்மொழிவர்மர் மன்னராக வேண்டும்.  ஆனால் கண்டராதித்தரின் புதல்வர் உத்தம சோழரை அருள்மொழிவர்மர் மன்னராக அறிவிக்கிறார்.  அவருக்கு சிவ பக்தியில் நாட்டம் உள்ளதால் பதினைந்து ஆண்டுகள் மட்டும் அரசராக இருக்கிறார், பின் அருள்மொழிவர்மர் மன்னர் ஆகிறார் . இதுவே பொன்னியின் செல்வன் எனும் இந்நாவலின் கதை. இந்த கதையை ஆசிரியர் கூறிய விதம் மட்டுமே இதனுடைய புகழுக்கு காரணம்.

மேற்கூறியது போல் அனைத்துபிரிவுகளும்ஒருங்கேகொண்ட நாவல் என்பதுமட்டுமின்றி நாம் இந்நாவலைப் படிக்கும்போது கதை நடக்கும் காலத்திற்கேநம்மைஅழைத்துசெல்லும்ஆற்றல்உடையது. மக்களோடு மக்களாக நடப்பவைகளை காணச்செய்கிறது. இந்த  நாவல் தொடர்கதையாக தொடங்கிய காலம் 1950 ம்ஆண்டு ஆகும். இன்றும் இதன் புகழ் மங்காமல் இருக்க நிறைய  சுவாரஸ்யங்கள் ஊடான விவரிப்பு மட்டுமே காரணம். சில இடங்கள் படிக்கும் அனைவரின் மனதையும் நெகிழச் செய்யும். அவ்வாறான சில இடங்கள், ஆதித்ய கரிகாலன் குந்தவைக்கு எழுதிய கடிதம் , வந்திய தேவரின் கதாபாத்திரம், குந்தவை அருள்மொழி வர்மன் சகோதரபாசம், குந்தவியின் ராஜதந்திரம் என நிறைய கூறலாம். இதற்காக ஆசிரியர் பல செப்பேடுகள் மற்றும் நூல்களைப் வாசித்து இருக்க வேண்டும். ஏனெனில் அருள்மொழிவர்மன் கையிலிருக்கும் சங்கு சக்கரம் பற்றி நாவலில் இடம்பெறுவது உண்மை என சில செப்பேடுகள் கூறுகின்றன. ஜோதிடக்கலை, கோள்கள் பற்றிய ஆராய்ச்சி என நம் முன்னோர்கள் பற்றியும் அவர்கள் திறமைகள் பற்றியும், எவ்வாறு அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதையும் காணலாம். ஐந்து பாகங்கள் கொண்ட இந்த நாவல் சில முக்கிய வினாக்களான ஆதித்ய கரிகாலன் மரணம், எவ்வாறு அருள்மொழி சதிகளை முறியடித்து  அரசர் ஆகிறார் அதற்கு உதவியவர்கள் என நம்மைஎங்கும்அகலவிடாமல்ஒத்துணர்வுடன்வாசிக்கவைக்கிறது. ஒரு மன்னனுக்கு உண்டான அனைத்து திறமைகளையும் உடையவராக வலம் வருகிறார் அருள்மொழிவர்மர். யானைகளை கையாள்வதில் சிறப்பு மிக்கவராக திகழ்கிறார். இவருக்கு இணையான பலம் கொண்டவராக வந்தியத்தேவர் வருகிறார். குறுநில மன்னனின் வம்சாவளியை சேர்ந்தவர் மற்றும் ஆதித்த கரிகாலன் படை வீரராக இருந்து சிறந்து விளங்கியதால் இளவரசரின் அன்பிற்குப் பாத்திரமாகி பின் அவருக்கு ஓற்றறாக குந்தவையை தேடி வருகிறார். குந்தவை இவரை அருள்மொழி வர்மரிடம் அனுப்புகிறார். பின்னாளில் அருள்மொழிவர்மர் அவரது புதல்வரான ராஜேந்திர சோழர் போன்றோறின் படைத் தளபதியாக விளங்குகிறார். இந்நாவலில் அதிகம் அனைவரையும் கவரும் கதாபாத்திரம் வந்தியத்தேவன். இவர்களுக்கு இணையாக கற்பனை மாந்தர்களில் சிறந்து அனைவரையும் கவர்ந்தவர்  ஆழ்வார்க்கடியான் நம்பி ஆகும் .

வைஷ்ணவன் என்னும் வேடத்தில் அமைச்சர் அணிருத்தரின் ஒற்றறாக திகழ்கிறார். இந்நாவலின் சிறப்பம்சமாக  கருதப்படுவது படிக்கும்பொழுது பண்டைய மக்கள், அவர்களின் வாழ்வியல் போன்றவற்றை கற்பனை செய்து அதில் நம்மையும் ஒன்றிவிடச்செய்வதே ஆகும். இந்நாவலைப் பற்றி பேசவோ ,எழுதவோ, விவரிக்கவும் செய்ய ஆரம்பித்தோமானால் நம்மையும் அறியாமல் அதற்குள் சென்று நேரம் தெரியாமல் பேசுவோம் என்பதே. மேற்கோள் காட்டவும், புகழ்ந்து பேசவும், பிடித்த நிகழ்வுகள் என பல விஷயங்களை உள்ளடக்கிய நாவல் இது.  ஒவ்வொருவரையும் ஆசிரியர் விவரிக்கும் விதம் பற்றிவாசித்தால்அது வாசிப்பவரின் மனதை விட்டு . இந்நாவலுக்கான அனைத்துப் புகழும் கல்கி என்னும் நாவலாசிரியரையே சாரும். ஆசிரியரின்கற்பனைத்திறன், வரலாற்றுஅறிவுத்திறன், தெளிவான, எளிமையான, கோர்வையானஎழுத்துநடை, வர்ணனை, கதைமாந்தர்படைப்பு, கதைமாந்தர்களின்திறமைகள், நற்பண்புகள்எனபலவிசயங்கள்இன்நாவல்பிரபலமடையகாரணமாகும்.

தொடர்புடைய பதிவுகள் :

பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆதித்ய கரிகால சோழனை கொன்றது யார்?
பிபிசி நிகழ்ச்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது அமேசான்
பகவத் கீதையை அவமதிக்கும் பாலியல் காட்சியை நீக்குக - ‘ஓப்பன்ஹைமர்’ பட இயக்குநருக்கு இந்தியா கோரிக்கை!
பொன்னியின் செல்வன் கதையின் கரு என்ன?
ஒப்பன்ஹைமர் படம் புரியவில்லையா இதைப் படியுங்கள்
பொன்னியின்செல்வன் என்று பெயர் வரக் காரணம் என்ன?
பொன்னியின் செல்வனில் வரும் வாணர் குளம் என்றால் என்ன?
இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் சரண் ராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார்
இயக்குனர்கள் கோபி நயினார், எஸ். பி. விஜய அமிர்தராஜ் ஆகியோர் தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி : பிரான்...
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ரகுதாத்தா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Next Up