fbpx
LOADING

Type to search

சினிமா தெரிவு

பொன்னியின்செல்வன் என்று பெயர் வரக் காரணம் என்ன?

இந்தியாவில் மன்னர் ஆட்சி என்பது வரலாறு அறிந்த ஒன்று. தென்னாட்டை ஆண்ட சோழ மன்னர்களின் வரிசையில் இன்றுவரை மிகவும் பிரபலமாக கருதப்படுபவர் ராஜராஜ சோழன் எனும் அருள்மொழிவர்மர். இவர் ஆட்சி புரிந்த காலத்தில் இவர் பெரும் புகழ் பெற்றதற்குக் காரணம் அவர் போர்களில் அடைந்த வெற்றி, அவர் மக்களுக்கு செய்த நன்மைகள், மற்றும் கலைகளை வளர்ப்பதில் அவர் காட்டிய நாட்டம்போன்றனவாகும். இது போன்று பல காரணங்களை நாம் எடுத்துக் கொண்டாலும் அவரின் மறைவிற்குப் பிறகு 1950 ( தொடர்கதைஆரம்பிக்கப்பட்டவருடம்) வரை வரலாறு படிப்பவர்களுக்கும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் அல்லது தஞ்சை பெரிய கோவிலை பார்ப்பவர்களுக்கும் இவரைப் பற்றி அறிந்து கொள்ள நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆயினும் கிருஷ்ணமூர்த்தி என்னும் எழுத்தாளரால், இவர் அடைந்த புகழ் பன்மடங்காக்கப்பட்டது. பொன்னியின்செல்வரைஅனைத்துதரப்பினரும்அறிந்துகொள்ளவழிவகுத்தது. 

கல்கி என்னும் புத்தகத்தில் இவர் தொடராக எழுதிய புதினமே பொன்னியின் செல்வன் ஆகும். அருள்மொழிவர்மர் வரலாற்றை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தனது கற்பனைகளுடன் சேர்த்து அழகிய கதையாகவும் அனைவரும் ரசிக்கும் படியாகவும் அவர் நாவலைப்படைத்துள்ளார். இன்றளவும் இந்த நாவலுக்கான ரசிகர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த நாவல் திரைப்படமாக இயக்கப்படுவதால் இன்றைய தலைமுறையினரும் இந்தப் புதினத்தை பற்றியும், மன்னரைப் பற்றியும், அவர்தம் பெருமைகளையும் அறிந்துகொள்ள தூண்டுகோலாகவும்பெரும்வாய்ப்பாகவும்  அமைகிறது. 

இந்த நாவலில் கதாநாயகனாக கருதப்படும் அருள்மொழிவர்மரை, நாம் பொன்னியின் செல்வன் என்கிறோம். அந்தப் பெயருக்கான காரணமாக நாவலாசிரியர் குறிப்பிட்டிருப்பது யாதெனில், ஒருமுறை பொன்னி நதியில் பயணம் செய்யும்பொழுது அருள்மொழிவர்மர் நதியில் தவறி விழுந்ததாகவும், பின்பு பெண்ஒருவரால்காப்பாற்றப்பட்டதாகவும், அப்பெண்யாரெனதெரிந்துகொள்ளமுடியாததால், அருள்மொழிவர்மரை பொன்னி நதியே  காப்பாற்றியதாக கருதப்பட்டு, அதன் காரணத்தால் பொன்னியின்செல்வன்எனப்பெயர்பெற்றதாகநாவலாசிரியர் கூறுகிறார். இந்நிகழ்வை, சில கற்பனைக்கூற்றுகளுடன் கலந்து ஆசிரியர் நாவலில் படைத்துள்ளார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அனைவரும் அவரை பொன்னியின் செல்வன் என அழைத்ததாக வரலாறு. பின்பு உள்நாடு மற்றும்வெளிநாட்டு போர்கள்என இவர் அடைந்த வெற்றிகள் ஏராளம். இவ்வாறு இவர் அடைந்த வெற்றி பல வகையான கலைகளையும் ஊக்குவிக்க வாய்ப்புக்களை உருவாக்கிவழங்கியது. இவர்வளர்த்தகலைகளுள் முக்கியமானது இவரின் கட்டிடக்கலை. தஞ்சை பெரிய கோவில்கட்டிடம், இவரின் சரித்திரத்தை ஆயிரம் வருடங்கள் கழித்தும் நாம் வியந்து போற்றுவதாக அமைந்துள்ளது. இன்றளவும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தை நாம் ராஜராஜ சோழனின் பிறந்த நாளாகக் கொண்டாடுகிறோம். இவர் அடைந்த வெற்றியும், புகழும் ஒருபுறமிருக்க இவ்வளவு புகழையும் அதாவது இப்படி ஒரு மன்னன் இவ்வளவு விஷயங்கள் செய்ததை இன்றளவும் நம் நினைவில் நிறுத்தி பேச முக்கிய காரணம் நாவலாசிரியர் கிருஷ்ணமூர்த்தி மட்டுமே. அவர்கள் தொடரில் எழுதிய புதினமான பொன்னியின் செல்வன் எனும் நாவலே அனைத்து வகையான புகழுக்கும் காரணமாகும். 70 வருடங்கள் கடந்தும் ஒரு நாவல் அதன் புகழ் மங்காமல் இருக்கிறதென்றால் மிகவும் பெருமைக்குரியவிசயமாகும். 

சோழர்கள் பல நூற்றாண்டு இந்த மண்ணை ஆண்டாலும் விஜயாலயசோழனில் தான் அவர்களது பெருமை அனைவரும் அறிந்ததாக கூறப்படுகிறது. விஜயாலயச் சோழன் பின்பு ஆதித்த சோழன், அவர் புதல்வர் பராந்தக சோழன்.  பராந்தகருக்கு மூன்று புதல்வர்கள் ராஜ ஆதித்திய சோழன், கண்டராதித்த சோழன், அரிஞ்சய சோழர்.  இதில் முதலாவதான ராஜ ஆதித்யசோழர் போரில் இறந்து விடுகிறார். பின்பு கண்டராதித்த சோழன் அரியணையில் அமர்ந்தார். இவரும் இவரது மனைவி செம்பியன் மாதேவியும் சிவபக்தி உடையவர்களாக திகழ்கிறார்கள். மன்னராக கடமையாற்ற விரும்பாததாலும் மற்றும் சில காலம் கழித்தே சேந்தன் அமுதன் (எ) உத்தம சோழன் என்னும் மகன் பிறந்ததால் கண்டராதித்தற்குபிறகு அரிஞ்சய சோழர் அரசர் ஆகிறார். இவருக்கு போரில் அடிபட்டதால் இவரது மகனான பராந்தக சுந்தர சோழன் பதவியில் அமர்கிறார். இவர் சுந்தரசோழர் என்று அனைவராலும் அழைக்கப்படக் காரணம் இவர் அழகில் சிறந்தவராக திகழ்ந்தே ஆகும். இவரின் புதல்வர்கள் அருள்மொழிவர்மர் மற்றும் கரிகால சோழர் ஆகும். கரிகாலச்சோழர் எவ்வாறு இறந்தார் என்பது இன்றுவரை மர்மமாகவே கருதப்படுகிறது. இவருக்குப் பின் சில காலம் கண்டராதித்தரின் புதல்வர் மன்னராகிறார். கிருஷ்ணமூர்த்தி அவருடைய புதினத்தில் சேந்தன் அமுதன் () உத்தம சோழன் சிவபக்தராக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். ஆதலால் அருள்மொழிவர்மர் மன்னராக பொறுப்பேற்றதாக கருதப்படுகிறது. இந்த புதினம் சுந்தரசோழர் நோயுற்றது, கரிகாலச்சோழன் இறந்தது மற்றும் பழுவேட்டரையர்களின் சதி இவை அனைத்தையும் எவ்வாறு கடந்து அருள்மொழிவர்மர் ராஜராஜன் ஆகிறார் என்பதை அழகாக எடுத்துரைக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரமாக நாம் குறிப்பிட வேண்டியது குந்தவை. அருள்மொழி வர்மர் மற்றும் கரிகாலன்  இருவருக்கும் இடையில் பிறந்தவர். சிறந்த அறிவாளியாக, இராஜதந்திரியான குந்தவை மன்னர் ராஜராஜ சோழன் மீது அபரிமிதமான அன்பை உடையவர். குறுநில மன்னர்களின் சதியை கண்டறிந்து முறியடித்து அருள்மொழிவர்மர் அரியாசனத்தில் அமர பெரிதும் பாடுபடுபவர்கள் குந்தவையும் வந்தியத்தேவனும்ஆகும். ஆதித்த கரிகாலனின் படைத்தளபதியாக விளங்கும் வந்தியத்தேவனும் குந்தவையும் பொன்னியின்செல்வரின்மதிப்பிற்கும்அன்பிற்கும்பாத்திரமானவர்களாக திகழ்கிறார்கள்.

தஞ்சை பெரிய கோவில்

ஐந்துஅல்லதுபத்து  வருடங்கள் முன் எழுதிய கதையும், திரைப்படமும் இன்றைய தலைமுறையினருக்கு பொருந்தாது போகிறது. நடை, உடை, பழக்க வழக்கங்கள் என மாறி வரும் இன்றைய சமுதாயத்தில் 1950 இல் எழுதிய இந்நாவல் இன்றும் அனைவரும் ரசிக்கும்படி இருப்பது மிக மிக ஆச்சரியமான ஒன்று. மொத்தத்தில் கல்கியின் பொன்னியின்செல்வன்என்கிறராஜராஜசோழன் அனைத்துதலைமுறையினரும் வியக்கும் ஓர் அற்புத மன்னன்

தொடர்புடைய பதிவுகள் :

இ - சிகரெட் பாதுகாப்பனதில்லை..  அது உங்கள் ஆண்மையை பாதிக்கிறது.. விந்தணுக்களை சுருக்குகிறது.. எச்சரி...
இலங்கை அரசியலில் வலுவிழக்கும் புத்த பிக்குகள்! பலவீனமான அத்தியாயத்தின் தொடக்கம்!!
வீடியோக்களில் இருந்து பிரேம்களை படம் பிடிப்பதை எளிதாக்கியுள்ளது கூகுள் குரோம் பிரௌசர்..!!
பகவத் கீதையை அவமதிக்கும் பாலியல் காட்சியை நீக்குக - ‘ஓப்பன்ஹைமர்’ பட இயக்குநருக்கு இந்தியா கோரிக்கை!
காதல் உணவுகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்..! சிறப்பான காதல் வாழ்க்கைக்கு நீக்க வேண்டிய மற்றும் சேர்க...
முக வீக்கம் காரணம் என்ன?
பருவமழையில் ஏற்படும் பகீர் மாற்றங்கள்! 
செவ்வாய் கிரகத்தில் இருந்துநேரடி ஒளிபரப்பு!
இலங்கையிலிருந்து பெருமளவில் வெளியேறும் மருத்துவப் பணியாளர்கள்! உள்நாட்டில் மருத்துவ சேவைகள் பாதிப்பு...
26 ரஃபேல் ஜெட் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்சிடமிருந்து வாங்க போகும் இந்திய...

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *