fbpx
LOADING

Type to search

அறிவியல்

பெண்களில் தைராய்டின் அறிகுறிகள்

தைராய்டு என்றால் என்ன? 

வேதியியல் தனிமப் பொருளான அயோடின்-இன் ‘Iodine’ குறைப்பாட்டினால் தைராய்டு ‘thyroid’ பிரச்சனை உருவாகிறது. தைராய்டு நம் உடலில் காணப்படும் ஒரு சுரப்பி ’gland’ ஆகும். இது மனித உடலில் கழுத்துப்பகுதியில் உள்ளது. தைராய்டு சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன்கள் ‘hormones’ வளர்சிதை மாற்றத்தை ‘metabolism’ நெறிப்படுத்துவதிலும், மற்ற பல உடல் செயல்பாடுகளிலும் முக்கியத்துவம் வகிக்கின்றது. இந்த ஹார்மோன் நாம் உண்ணும் உணவிலிருந்து சக்தி அடைவதற்கும் உதவுகின்றது.

தைராய்டு பிரச்சனை:

இத்தகைய ஹார்மோன்கள் தேவையான அளவை விட அதிகப்படியாகவோ அல்லது குறைவாகவோ சுரக்க நேரிட்டால் பலவித தைராய்டு நோய்கள் உண்டாக நேரிடும். அவற்றுள் சில ஹைப்பர்-தைராடிசம் ‘hyperthyroidism’, ஹைபோ-தைராடிசம் ‘hypothyroidism’, தைராய்டிடிஸ் ‘thyroiditis’ ஆகியவை ஆகும்.

பெண்களில் தைரொய்ட்:

ஆண், பெண் இரு பாலினரையும் இந்த தைராய்டு நோய் தாக்க நேரிட்டாலும், ஆண்களை விட பெண்களுக்கு தைராய்டு நோய் வரும் வாய்ப்புகள் ஐந்து (குறைந்த பட்சம்) மடங்கு அதிகம் என்பதே உண்மை. மேலும் அறுபது சதவிகித நோயாளிகளுக்கு தங்கள் நிலை குறித்து தெரிவதும் இல்லை. கர்பிணி பெண்களுக்கும், குழந்தையை பெற்றெடுத்த இளந்தாய்மார்களுக்கும் இந்த பிரச்சனை வர அதிக வாய்ப்பு உள்ளது. தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால், குழந்தைக்கு வரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

பெண்களில் தைராய்டின் அறிகுறிகள் 

பெண்களுக்கு தைராய்டின் பிரச்சனை பல சந்தர்ப்பங்களில் தோன்றலாம். பெண் குழந்தை பிறக்கும் பொழுது, பூப்படையும் வயது மற்றும் மாதவிடாய் நிற்கும் பொழுது, கருவுற்றிருக்கும் காலத்தில் அல்லது குழந்தை பிறந்த பிறகும் ஏற்படலாம். ஆனால் நோய்வாய்ப்பட்டவர்கள் நல்ல சிகிச்சை எடுத்துக் கொண்டால், பூரண குணம் அடைய முடியும். எனவே அதன் அறிகுறிகளை தெரிந்து கவனத்துடன் செயல் படுவது நல்லது.

தைராய்டு நோயின் இரண்டு முக்கிய வகைகள்

தைராய்டு நோயின் இரண்டு முக்கிய வகைகள் ஹைபோ-தைராய்டு மற்றும் ஹைப்பர்-தைராய்டு ஆகும். இவ்விரு வகைகளின் பொதுவான அறிகுறிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன. 

ஹைபோ-தைராய்டின் (தேவையான அளவை விட குறைவான ஹார்மோன் உற்பத்தி ஆகுதல்) அறிகுறிகள்:

  • உடல் மற்றும் மனச் சோர்வும் உடல் பலவீனமும்  
  • மாதவிடாய் சிக்கல்கள் 
  • தூக்கமின்மை 
  • பார்வை கோளாறுகள்
  • கட்டுப்படுத்த முடியாத உடல் எடை அதிகரிப்பு 
  • குரலில் கரகரப்பு 
  • முகத்தில் வீக்கம் 
  • தலை சுற்றல் 
  • ஞாபக மறதி 
  • வறண்ட மற்றும் சுரசுரப்பாக கூந்தல் மற்றும் முடி உதிர்வு 
  • எளிதாக உடையும் நகங்கள்
  • மலச்சிக்கல்
  • அதிக குளிரை சகித்து கொள்ள முடியாத தன்மை 
  • குறைவான இதய துடிப்பு (நிமிடத்திற்கு 65 விட குறைவு) 
  • எரிச்சல், கவலை, பதட்டம் உள்ளிட்ட மனம் / உணர்ச்சி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்.

ஹைப்பர் -தைராய்டின் (தேவையான அளவை விட அதிக ஹார்மோன் உற்பத்தி ஆகுதல்) அறிகுறிகள்:

  • எடை இழப்பு
  • பசி அதிகரித்தல் 
  • குறைவான / சீரற்ற மாதவிடாய் 
  • அதிக வியர்வை / வெப்பத்தை சகித்து கொள்ள முடியாத தன்மை
  • தைரொய்ட் சுரப்பியில் பிரச்சனை – கழுத்துடைய முன்புறம் வீங்குவது 
  • மூச்சுத்திணறல் 
  • தசைச் சோர்வு / கைகளில் நடுக்கம் 
  • தூக்கமின்மை 
  • பார்வை கோளாறுகள்
  • அதிகமான இதய துடிப்பு / படபடப்பு 
  • மயக்கம்
  • மனச்சோர்வு

இவற்றுள் சில அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது உணரப்பட்டாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது உசிதமான செயல் ஆகும்.

தொடர்புடைய பதிவுகள் :

சூரியனின் வெளிப்புற வெப்பத்தின் இரகசியம் வெளிப்பட்டது!
22 பேருடன் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றத்தைத் தொடங்க முடியும்..! எந்தமாதிரியான குணமுள்ள மனிதர்கள் த...
படைப்பாற்றலில் கற்பனைத்திறனில் மனிதனை மிஞ்சும் சாட்ஜிபிடி (ChatGPT)!! ஆகச்சிறந்த படைப்பாளிகள் கூட சா...
‘AI டெக்னாலஜியால் தேர்தல் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்டம் காணப்போகிறது!’ - பில் கேட்ஸ் எச்சரிக்கை...
Depression Meaning in Tamil 
முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஓபியாய்டுகள் தீர்வு அல்ல: சிட்னி பல்கலைக்கழக ஆய்வு முடிவு
அஜினமோட்டோ - முதுமை, இதயப் பிரச்சனைகளை வேகமாக ஏற்படுத்தும். - அலகாபாத் பல்கலைக் கழகம் ஆய்வு. 
உண்ணா நோன்பு என்னும் தலைசிறந்த மருத்துவம்!
நிலவின் தென் துருவத்தில் இரவு தொடங்கியது - பிரயாணக்களைப்பு தீர 18 நாட்கள் ஓய்வெடுக்க போகும் சந்திராய...
சுமேரியர்கள் கண்டுபிடித்த கால அமைப்பு! ஐயாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்திவரும் மனித இனம்!!
Tags:
முன்னைய பதிவு
அடுத்த பதிவு

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள பதிவுகள்