பன்னீர் 65 செய்வது எப்படி..?

பன்னீர் 65 என்பது அனைவருக்கும், குறிப்பாக சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவாகும். பொதுவாக உணவகங்களில், இந்த உணவு ஒரு பிரபலமான ஸ்டார்ட்டராக வழங்கப்படுகிறது. சூப் முதலானவற்றுடன் இணைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தவிர, தனித்த ஒரு சிற்றுண்டியாகவும் சாப்பிடுவதற்கு ஏற்றது பன்னீர் 65. உணவகங்கள் மட்டுமல்லாது நாம் வீட்டிலேயும் இந்த உணவை எளிதாகச் செய்ய முடியும். குறைவான பொருட்கள் மற்றும் சிறுது நேரமே ஆகும்.
பன்னீர் 65 செய்யத் தேவையான பொருட்கள்:
- பன்னீர் க்யூப்ஸ் – 200கிராம்.
- இஞ்சி பூண்டு விழுது – 1 முதல் 2 தேக்கரண்டி.
- சீரகத் தூள்- 1 தேக்கரண்டி.
- மல்லித் தூள் – 1 தேக்கரண்டி.
- மிளகாய்த் தூள்- தேவையான அளவு.
- மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி.
- சிறியதாக நறுக்கிய கருவேப்பிலை – ஒரு கொத்து.
- உப்பு – தேவையான அளவு.
- எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் – 1 தேக்கரண்டி.
- அரிசி மாவு – 2 தேக்கரண்டி.
- சோள மாவு (Corn flour) – 3 தேக்கரண்டி.
- கடலை மாவு – 1 தேக்கரண்டி.
- தண்ணீர் – கால் கப்.
- எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில், இஞ்சி பூண்டு விழுது, சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கலந்து, அதில் பன்னீர் க்யூப்களைப் போட்டு அவற்றின் எல்லாப் பக்கங்களிலும், மசாலாக் கலவையானது தேய்த்துப் பூச வேண்டும். இப்போது, சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது வினிகரைத் தெளித்து மீண்டும் நன்றாகக் கலந்து விடவும். பன்னீர், இந்தக் கலவையில் நன்றாக ஊற வேண்டும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்து ஊற வைத்தால், பன்னீர் மீது இந்தக் கலவை நன்றாக ஒட்டி வரும். அதிகபட்சம் ஒரு நாள் வரை கூட ஊற வைக்கலாம்.
- அடுத்ததாக, ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி மாவு, சோள மாவு மற்றும் கடலை மாவுடன் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையானது, அதிக இறுக்கமாகவும் தண்ணீராகவும் இல்லாமல் ஒரு ஜெல்லி போல நெளு நெளு தன்மையுடம் இருக்க வேண்டும். கையில் எடுத்தால், விரல்களில் இருந்து சொட்டி கீழே வடியாத அளவுக்கு இருக்க வேண்டும்.
- நாம் ஏற்கனவே ஊற வைத்துள்ள பன்னீர் க்யூப்களின் மீது, இந்த அரிசி மற்றும் சோள மாவுக் கலைவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மென்மையாகக் கலக்கவும், மாவு மிகவும் திக்காகவும், பரவாமல் ஒரே இடத்தில் நிற்பதாகத் தெரிந்தால், இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். சுவை பார்த்து உப்பும் சேர்த்துக் கொள்ளலாம்.
- அடுத்து, ஒரு கடாயில் பன்னீரைப் பொறிக்கத் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, அது சூடானதும் (இதைக் கொஞ்சமான எண்ணெயில், தவா ப்ரை போல வறுத்தும் எடுத்துச் செய்யலாம்) அடுப்பின் தீயைக் கொஞ்சமாகக் குறைத்து வைத்து விட்டு. நம்முடைய பன்னீர் துண்டுகள் மீது மாவின் கோட்டிங் நன்றாகப் படிந்திருக்குமாறு பிரட்டி ஒவ்வொன்றாக எண்ணெயில் இடவும். ஒன்றிரண்டு துண்டுகளாக. கடாயில் இடுவது நல்லது. ஒரே நேரத்தில் அனைத்து பன்னீர் துண்டுகளையும், கடாயில் இட்டால் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு.
- கடாயில் இட்ட பன்னீர் துண்டுகள், நன்றாகப் பொரியும் வரை எல்லாப் பக்கமும் திருப்பி விட்டு மெதுவாகக் கிளற வேண்டும். அப்போதுதான் பன்னீர் 65 நன்றாகப் பொரிந்து மொறு மொறுவென மாறும். பொன்னிறமாக மாறும் வரை, கிளறுவது நல்லது.
- பன்னீர் க்யூப்கள் நன்றாகப் பொரிந்ததும் அவற்றைக் கடாயில் இருந்து எடுத்து, ஒரு டிஷ்யூ பேப்பரிலோ அலலது வடிகட்டியிலோ வைத்து எண்ணெயை வடிகட்டி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
- நம்முடைய சுவையான பன்னீர் 65 இப்போது தயார். நறுக்கப்பட்ட சிறு வெங்காயத் துண்டு மற்றும் எலுமிச்சை சாறுடன் சேர்த்துப் பரிமாறினால், சாப்பிட இது இன்னும் சுவையாக இருக்கும்!
தொடர்புடைய பதிவுகள் :
Vlog Meaning in Tamil
ஓவியம் வரைவது எப்படி..?
உங்கள் கீ பேட் சத்தத்தை வைத்தே உங்கள் பாஸ்வேர்டுகளைத் திருடும் AI தொழில்நுட்பம்! வலைதளவாசிகளே எச்சரி...
Walnut Tamil Meaning
அதிகம் புரோட்டீன் வேணுமா? பிக்கி சோய் சாப்பிடலாம்
இந்தியாவின் ஆபாசத் தடைச்சட்டங்களும் பெண்கள் மீதான சமூகத்தின் கட்டுப்பாடுகளும்…
உடல் பருமன் என்பது ஆரோக்கியக் குறைவே - ஆய்வு முடிவு..!!
ஐஐடி மெட்ராஸ் உடன் கைகோர்க்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்! புதிய பாதை ஒன்று திறந்தது!!
சீனாவின் Sinopec நிறுவனம் இலங்கையில் தன்னுடைய எரிபொருள் விநியோகத்தை விரைவில் துவங்கவுள்ளது - இலங்கை ...
எப்படிப்பட்டவர்கள் தங்களுக்குள் ஈர்க்கப்படுகிறார்கள்? புதிய டேட்டிங் ஆப்கள் சொல்வதென்ன?!