நெஞ்சுசளி வர என்ன காரணம்?

குளிர்காலம் வந்துவிட்டால் போதும், பலர்குளிரில் நடுங்குவதைவிடக் கவலையில் நடுங்கத் தொடங்கிவிடுவார்கள். காரணம், குளிரோடுசளியும் வரும், நெஞ்சுச்சளி வந்து விட்டால் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்ற அச்சம் தான்.
பலரும் நினைப்பது போல், சளி என்பது கொஞ்சம் தொந்தரவுதான். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அதுதானாகச் சரியாகிவிடும். அதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள், மருந்துகள், பூச்சுகள் போன்றவையெல்லாம் நமக்கு மன நிறைவைத்தருவதற்கு தான், மற்றபடி சிறுவாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் நெஞ்சுச்சளியைச் சரி செய்துவிடலாம்.
நெஞ்சுச்சளி ஏன்வருகிறது என்பதுபற்றி இந்தக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம். இதன் மூலம் நாம் அதைச் சரியாகக்கையாளலாம்.
நெஞ்சுச்சளி என்றால் என்ன?
நுரையீரலின் காற்றுவழிகள் வீங்கி அவற்றில் சளி உருவாகும் நிலையைத்தான் நெஞ்சுச் சளி என்கிறோம். இதன்மூலம் மக்களுக்கு இருமல் வருகிறது, சிலநேரங்களில்அதில் சளியும் சேர்ந்துவருகிறது, நெஞ்சுவலி, களைப்பு, தலைவலி, உடல்வலி, தொண்ட வலி போன்றவையும் உண்டாகிறது.
நெஞ்சுச் சளிக்குச் சிகிச்சைகள்
பொதுவாக நெஞ்சுச் சளிக்குச் சிகிச்சையோ மருந்துகளோ தேவைப்படுவதில்லை. நம்முடைய நோயெதிர்ப்பாற்றலைப் பயன்படுத்தி அதை வென்றுவிடலாம். அதற்கு நாம்போது மானஅளவு ஓய்வெடுக்கவேண்டும், தூங்கவேண்டும், நிறையத் தண்ணீர் குடிக்கவேண்டும், வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி நீராவி பிடிக்கவேண்டும், குளிரில் வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அல்லது, வெளியில் செல்லும் போதுபோது மான அளவுபாது காப்பு உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் நெஞ்சுச்சளியின் பாதிப்புகள் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்துவிடும்.
ஒருவேளை, இந்தமாற்றங்களால் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காவிட்டால் மருத்துவரை அணுகலாம். அவர் பரிந்துரைக்கக்கூடிய மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
பாதுகாப்பாக இருப்போம்
நெஞ்சுச் சளி போன்ற பிரச்சனைகள் மக்களை எளிதில் தாக்கக்கூடியவை. அதனால், மற்றவர்களிடமிருந்து இது நமக்குவராமலும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்குச் செல்லாமலும் பாதுகாப்பது நல்லது.
எடுத்துக்காட்டாக, நம்முடையகைகளை அவ்வப்போது தூய்மைப்படுத்து கிறசிறியபழக்கம் இதற்குப் பெரிய அளவில் உதவுகிறது. இருமும் போது அல்லதுதும் மும்போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்வது இன்னொரு சிறந்த பழக்கம். இதற்கென்று கைக்குட்டையை எப்போதும் வைத்திருக்கலாம். அது இயலாது என்றால் கைகளைப் பயன்படுத்தி மூடிக்கொண்டாலும் சரிதான். ஆனால், அப்போது இயன்றவரை உடனடியாகக் கைகளை மீண்டும் தூய்மைப் படுத்த வேண்டும்.
ஒருவேளை, நீங்கள் வசிக்கும் பகுதியில் குறிப்பிட்ட தடுப்புமருந்துகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தால் அவற்றை எடுத்துக்கொள்வதும் நல்லது. இந்த நேரத்தில் உடலுக்கு நலனைத்தரும் உணவுவகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். இதையும் நீங்கள் உங்களுடைய மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்.
தொடர்புடைய பிரச்சனைகள்
சில நேரங்களில், நெஞ்சுச்சளியால் வேறு சில பிரச்சனைகளும் வரக்கூடும். அவற்றுக்கு வேறுவிதமான சிகிச்சைகள் இருக்கக் கூடும். அது போன்ற அறிகுறிகளை மருத்துவர்கள் கவனித்தால், உங்களைச் சிலகுறிப்பிட்ட மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளும்படி கோருவார்கள். அந்தப்பரிசோதனைகளில் தெரியவரும் விஷயங்களைப் பொறுத்துச் சரியான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்கள்.
அதனால், என்னதான் நெஞ்சுச்சளி எளிதில் குணமாகக்கூடிய ஒன்றாக இருப்பினும், அதைத் தொடர்ந்து கவனித்து வரவேண்டும், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பிரச்சனை எளிதில் தீரவில்லை என்று தெரிந்தால் தயங்காமல் மருத்துவரைப் பார்த்துச் சிகிச்சை பெறவேண்டும். இதன் மூலம் நம் நலன் காக்கப்படும்.
குறிப்பாக, குளிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள்வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். வருமுன் காப்பது எப்போதும் நல்லது.