fbpx

நுரையீரல் பிரச்சனை அறிகுறிகள்

உலகில், கொரொனா பெருந்தொற்று ஏற்படத் தொடங்கிய போதிருந்தே, நம்முடைய சுவாச உறுப்பான நுரையீரல் நலன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனோ மட்டுமல்லாமல், வளி மண்டல மாசின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதும் நுரையீரல் பாதிப்புக்கான மற்றொரு காரணமாகும். அதனால்தான், தற்போது உலகில் சுவாசப் பிரச்சனைகள், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான உடல் நலக் கோளாறுகளால் அதிகம் பேர் பாதிக்கப்படுவதாக மருத்துவப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாகவே, எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய ஓர் உறுப்பு மனிதனின் நுரையீரல் ஆகும். புகை பிடித்தல் முதலான தீய பழக்க வழக்கங்கள் தவிர்த்து, வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளின் தொற்றால்தான் நுரையீரல் அதிகம் பாதிப்படைகிறது. பாதிப்புகளின் அளவு மாறுபட்டாலும், அவற்றை நாம் சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி விட்டு விடும் பட்சத்தில், பிற்காலத்தில் மிகப் பெரும் நோய்களுக்கு அது வழி வகுக்கக் கூடும் அபாயமும் உள்ளது. நுரையீரல் தொற்றை, நம் உடல் காட்டும் சில அறிகுறிகளை வைத்து முன்னமே தெரிந்து கொள்ளலாம்.

தொடர் வறட்டு இருமல் & சளி :

நுரையீரல் தொற்று பாதித்தால், வறட்டு இருமல் தொடர்ச்சியாக ஏற்படும். நெஞ்சுக்கூட்டில் சளி உண்டாகும். சுவாசக் குழல் மற்றும் நுரையீரலின் உட் பாதைகளில், இந்தச் சளி அழற்சியை ஏற்படுத்துவதால், அதை வெளித் தள்ள வேண்டி தொடர்ச்சியாக இருமல் வந்து கொண்டே இருக்கும். பிரான்கிடிஸ், நிமோனியா நோய்களுக்கும் இவைதான் ஆரம்ப அறிகுறிகளாகும். சளி மற்றும் இருமலில், சில நேரங்களில் இரத்தமும் காணப்படலாம். பச்சை, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் சளி தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

மூச்சுத் திணறல் & நெஞ்சில் வலி :

மூச்சுத் திணறலோ, மூச்சு விடுவதில் கஷ்டம் இருந்தாலோ நம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். இவ்வகையான வீசிங் பிரச்சனையுடன் நெஞ்சு வலியும் சேர்ந்து இருந்தால், கவனம் தேவை. நுரையீரல் மட்டுமல்லாமல் இதயப் பிரச்சனைகளும் பாதிக்கக் கூடும். அதிகம் தாமதிக்காமல், மருத்துவரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். 

உடற்சோர்வு & குளிர் காய்ச்சல் :

காய்ச்சலி, தலைவலி, சளி போன்றவை வருகையில் நம்மால் ஓரளவுக்கு வீட்டிலேயே சமாளித்துக் கொள்ளலாம். ஆனால், மிகத் தீவிரமான உடற்சோர்வும்,  நடுங்க வைக்க வைக்கும் அளவிற்கு குளிர் காய்ச்சலும் ஏர்பட்டால், அவை நிச்சயமாக‌ நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்தான்.

மேற்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டு, அது நுரையீரல் பிரச்சனைதான் என்பது உறுதி செய்யப்பட்டால், அதற்குத் தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ளல் அவசியம். ஆன்டி-பையாடிக்ஸ்,  ஆன்டி-ஃபங்கல் உள்ளிட்ட மருந்துகளை, மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடும். ஒருவேளை, நுரையீரல் வைரஸ் தொற்றால் பாதிக்கப் ப‌ட்டிருந்தால் அதற்கான சிகிச்சைகள் இன்னும் தீவிரமானவை.

நான் வீட்டிலேயேசெய்யக் கூடிய சில முன்னேற்பாடான‌ சிகிச்சை முறைகள் நுரையீரல் பாதிப்பின் வீரியத்தைக் குறைத்து, தொற்றிலிருந்து சீக்கிரமாக மீண்டு வர உதவி புரிகின்றன.

  • நிறைய தண்ணீர் / சூடான பானங்கள் / பழச்சாறு போன்ற திரவ உணவுகள் எடுத்துக் கொள்ளுதல். 
  • உடலை சம நிலைப் படுத்தும் படியான போதிய ஓய்வு.
  • ஆரோக்கியம் தரும் உணவுகளை மட்டும் உண்ணுதல்.
  • அவ்வப்போது நீராவி பிடித்தல்.
  • புகை பிடிப்பதைத் தவிர்த்தல்.
  • புகை பிடிப்பவர்கள் அருகில் இருப்பதை தவிர்த்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *