கலவர பூமியாக மாறி இருக்கும் பிரான்ஸ்: அழிக்கப்படும் வணிக நிறுவனங்கள்!

செய்தி சுருக்கம்:
பாரிசின் புறநகரப் பகுதி ஒன்றில் நாகேல் என்ற 17 வயது பிரெஞ்சு-அல்ஜீரிய இளைஞன் போக்குவரத்து நிறுத்தத்தின் போது ஒத்துழைக்க மருத்ததாக குற்றச்சாட்டி போலீஸ் அவரை சுட்டுக் கொன்றது. இதை எடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பிரான்ஸ் கலவர பூமியாக மாறி உள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
நகலை சுட்டுக்கொன்ற அதிகாரி உடனடியாக கைது செய்யப்பட்டு கொலை குற்றம் சாட்டப்பட்டார். இருப்பினும் இக்கொலையால் தூண்டிவிடப்பட்ட கலவர அளவானது ப்ரான்ஸை மூழ்கடித்து, பெல்ஜியம் மற்றும் சுடிட்சர்லாந்து வரை பரவி உள்ளது.
கிட்டத்தட்ட 45 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளபோதும் பிரான்சின் தெருக்களில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. பொது கட்டிடங்கள் மற்றும் கடைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. வணிக நிறுவனங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து வருகின்றன.
பிரான்சின் தெற்கு துறைமுக நகரமான வார்த்தையின் மோசமான வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு ஏறக்குறைய 400 வணிக நிறுவனங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.
மதிப்புமிக்க பொருட்களைக் கொண்ட வணிக வளாகங்கள் குறிவைத்த தாக்கப்படுகின்றன. இன்சூரன்ஸ் கம்பெனிகளின் ஆரம்ப மதிப்பீட்டின்படி இக்கலவரத்தில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 100 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக இருக்கும்.
தீ வைத்து அழிக்கப்பட்ட மற்றும் முற்றிலுமாக கொள்ளையடிக்கப்பட்ட கடைகள் இப் பாதிப்பிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட உணர்வு அலை இப்பொழுது கலவரக்காரர்களால் கையில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பிரான்சின் பொருளாதாரம் நசிந்து வருகிறது. இந்த கலவரங்கள் நாகேலுக்காக நடத்தப்படுவன இல்லை என்று நாகேலின் குடும்ப உறுப்பினர்களே குமுறி வருகின்றனர்.
கலவரத்தின் ஆறாவது நாளான ஞாயிறு முதல் திங்கள் வரை ஒரே இரவில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 157. இதுவே ஆகக் குறைவான எண்ணிக்கை ஆகும். கடந்த ஜூன் 30 இரவு 3880 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகின் காதல் பூமியாக அறியப்படும் பிரான்ஸ் இப்பொழுது கலவர பூமியாக மாறி இருப்பது உலக மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. விரைவில் கலவரங்கள் அடங்கி இயல்புநிலை திரும்ப வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.