கட்டுரைஎழுதுவதுஎப்படி?


ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றுள் மிக எளியதும் மிக விரைவானதும் கட்டுரை ஒன்றைப் படிப்பதுதான். மிக எளிய விஷயங்களில் தொடங்கி மிகச் சிக்கலான விஷயங்கள்வரை பலவற்றைப்பற்றியும் சிறப்பான கட்டுரைகள் இவ்வுலகில் எழுதப்பட்டுள்ளன. நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், இணையத் தளங்கள் என்று பலவற்றிலும் இவை வெளியாகின்றன. அவற்றைப் படித்துப் பலரும் அறிவைப் பெருக்கிக்கொள்கிறார்கள்.
இதனால், நம்முடைய அறிவைப் பகிர்ந்துகொள்வதற்குக் கட்டுரை எழுதுவது ஒரு சிறந்த வழியாகும். நல்ல கட்டுரையை எப்படி எழுதுவது என்று இந்தக் கட்டுரையில் காண்போம்.
கட்டுரையின்மையக்கருத்து
எந்தவொரு கட்டுரையும் ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்டுதான் அமைகிறது. அந்தக் கட்டுரையைப் படிக்கிறவர்கள் அந்தக் கருத்தை நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அதன் இலக்காக ஆகிறது.
அதனால், கட்டுரை எழுதுவோர் இந்த மையக் கருத்தை முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும், பின்னர் அதை அடிப்படையாகக் கொண்டு தங்களுடைய கட்டுரையைத் திட்டமிடவேண்டும். இந்த மையக் கருத்திலிருந்து கட்டுரை விலகும்போதெல்லாம் அதைத் திரும்ப முதன்மை வழிக்கு அழைத்துவரவேண்டும்.
கட்டுரைக்கானஆராய்ச்சி
ஒரு கட்டுரையின் தரம் அதன் ஆராய்ச்சியைச் சார்ந்துதான் அமைகிறது. நன்கு ஆராய்ச்சி செய்து தகவல்களைத் தொகுத்து எழுதப்படும் கட்டுரைகள் சிறப்பாக அமைகின்றன. மற்றவை வாசகர்களுக்குச் சலிப்பை உண்டாக்குகின்றன, அல்லது, முழுமை அளிப்பதில்லை.
அதனால், நாம்எழுதும்தலைப்பைப்பற்றிநூல்கள், பேட்டிகள்என்றுபலவழிகளில்விரிவானஆராய்ச்சிகளைச்செய்யவேண்டும், இதில்தெரியவரும்தலைப்புகளைக்குறிப்பெடுத்துக்கொள்ளவேண்டும், அந்தக்குறிப்புகளைஒழுங்காகவெவ்வேறுதலைப்புகளில்அடுக்கிப்பயன்படுத்தவேண்டும்.
கட்டுரையின்மொழி
நம்முடைய கட்டுரையைப் பலதரப்பட்ட மக்களும் படிக்கிறார்கள் என்பதால், எல்லாருக்கும் சென்று சேரக்கூடிய எளிய சொற்களைச் சிறிய சொற்றொடர்களாக அமைத்து எழுதினால் அது எளிதில் சென்று சேரும். நாம் எழுதுவதை ஒருமுறை படித்துப் பார்த்தால், குழப்பமான சொற்றொடர்களை அடையாளம் காணலாம், அவற்றைத் திருத்தலாம்.
அதேபோல், கட்டுரையின்மொழித்தூய்மைமிகமுக்கியம். அதாவது, கட்டுரையில்எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, கருத்துப்பிழைபோன்றவைஇருக்கக்கூடாது.
உண்மையைஎழுதுதல்
கட்டுரையில் சிறிதும் கற்பனை இருக்க இடமில்லை. அதாவது, உண்மைத் தகவல்கள்மட்டும்தான் அதில் இடம்பெறவேண்டும். வாசகர் எழுத்தாளரை நம்பி அந்தக் கட்டுரையைப் படிக்கிறார் என்பதால், எழுத்தாளருடைய பொறுப்பு கூடுதலாகிறது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று கண்ட தகவல்களையும் நம்பாமல் உறுதிப்படுத்தி எழுதவேண்டும்.
வாசகர்கருத்துகள்
கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் அதுபற்றிச் சொல்கிற கருத்துகளைக் கேட்டு அதன் அடிப்படையில் வருங்காலக் கட்டுரைகளைச் சிறப்பாக எழுதுவது ஒரு நல்ல உத்தி. எழுத்தாளருடைய பார்வையில் தெரியாத பிழைகளெல்லாம்கூட வாசகர்களுக்குத் தெரிந்துவிடும் என்பதால் இந்த விஷயத்தில் திறந்த மனத்துடன் இருக்கும் எழுத்தாளர் மிகச் சிறந்த நன்மைகளைப் பெறுவார்.
வெவ்வேறு காலகட்டங்களில் கட்டுரையிலிருந்து வாசகர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதும் மாறுகிறது. அதனால், மக்களுடைய நாடித்துடிப்பை அறிகிற ஓர் உத்தியாகவும் இதைப் பயன்படுத்தலாம்.
வாசகர்கள் சொல்லும் எல்லாக் கருத்துகளையும் எழுத்தாளர் செயல்படுத்தவேண்டியதில்லை, அதில் எது சரி என்று சிந்தித்துப்பார்த்துப் பொருத்தமாகத் தோன்றுகிறவற்றைச் செயல்படுத்தினால் அவருடைய கட்டுரை எழுத்து சிறப்பாகும்.
சான்றுகள்
கட்டுரையின் உண்மைத்தன்மையை உறுதிசெய்யக்கூடிய சான்றுகளை (நூல்கள், பேட்டிகள் போன்றவை) எழுத்தாளர் வழங்கவேண்டும். இதன்மூலம் வாசகர்கள் அந்தத் தலைப்பைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் எங்கு செல்வது என்கிற கேள்விக்குப் பதில் கிடைத்துவிடும். எழுத்தாளர் தன்னை மதிக்கிறார் என்பதை உணர்ந்து வாசகரும் அந்த எழுத்தாளர்மீது மதிப்பைச் செலுத்துவார்.