எலிசெபத் ராணியின் மரணத்திற்குப் பிறகு, முடியாட்சி உறவுகள் குறித்த வாக்கெடுப்பு. என்ன விரும்புகிறார்கள் கனடா மக்கள்…?

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, என்றழைக்கப்படும் ‘க்கும், காமன் வெல்த் நாடுகளுக்கும் இராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசெபத். இவர் கடந்த செப்டம்பர் மாதம், 8’ம் நாள் இயற்கை எய்தினார். அவருக்காக உலகம் முழுக்க துக்கம் அனுசரிக்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்னுமும் இங்கிலாந்தில் முடியாட்சி முறை தேவையா என்ற விவாதமும் மேலெழுந்தது. இன்றளவிலும் அதைப் பற்றி, பல்வேறு நாடுகளிலும் விவாதித்துக் கொண்டும், வாக்கெடுப்புகளும், கருத்துக் கணிப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பல்வேறு செய்தி நிறுவனங்களும், புள்ளி விவர அமைப்புகளும், சர்வே நிறுவனங்களும் இந்தப் பணியை முடுக்கி விட்டுள்ளன எனலாம்.
ராணியின் மரணம், அரச குடும்பத்திலும் இங்கிலாந்திலும் பேசப்படுவதற்கு இணையாக சர்வதேச உலகிலும் பேசப்படுகிறது. அவரது இறப்பு, உலக அரங்கில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்த பார்வை உலக அரசியலில் பெரும் பங்கு வகிக்கும் ஒன்றாகும். குறிப்பாக, ஜனநாயகம் மற்றும் முடியாட்சி ஆகிய இரண்டு ஆட்சி முறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து எது நல்லது, எது கெட்டது என ஒரு முடிவுக்கு வர வேண்டிய ஒரு வாக்கெடுப்புக்கு இந்த மரணம் வித்திட்டுள்ளது.
அவரவர் தாய் நாட்டுக்கும், பிரிட்டிஷ் முடியாட்சிக்கும் உள்ள தொடர்பைக் குறித்து அனைத்து நாட்டு மக்களும் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். அதற்கு, வட அமெரிக்க நாடான கனடாவும் விதிவிலக்கல்ல. ஆகவே, கனடாவிலும் கூட, அப்படியான கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப் பட்டது. அந்தக் கருத்துக் கணிப்பில், ஆங்கிலேய முடியாட்சிக்கு எதிரான கருத்துகளும், ஆதரவான கருத்துகளும் சம அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அதில், ஏறக்குறைய 60 சதவீத கனேடியர்கள் தங்கள் நாடு, பிரிட்டிஷ் முடியாட்சியை சார்ந்துதான் உள்ளதா,..? நம்மை அது எந்தளவுக்குக் கட்டுப்படுத்தும் என்பன போன்ற விசயங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
ராணி இரண்டாம் எலிசெபத் காலமான சில நாட்களுக்குப் பிறகு, ‘குளோபல் நியூஸ்’ எனும் செய்தி நிறுவனத்திற்கென தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட IPSOS எனும் கருத்துக்கணிப்பில், முடியாட்சியின் எதிர்காலம் குறித்த வாக்கெடுப்புக்கு கடந்த 2021 ஆண்டில் 53 சதவீதமாக இருந்த ஆதரவானது தற்போது 58 சதவீதமாக உயர்ந்துள்ளது.
“கனடியர்கள் தங்கள் கருத்துகளைக் கூற ஆர்வமாக இருக்கிறார்கள்” என்று IPSOS பொது விவகாரங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டேரல் பிரிக்கர் கூறினார். மேலும், இந்த முடியாட்சி விவகாரத்தைப் பொருத்த மட்டில், இது குறித்த பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஆதரவு தொடர்ந்து பெருகி வருகிறதா என்பது, “மூன்றாம் சார்லஸ் மன்னரின் செயல்திறன்” மற்றும் “எலிசெபத் ராணி இறந்த துக்கத்திலிருந்து தேறி வந்த பிறகு மக்கள் சார்லஸைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்” என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் பிரிக்கர் தெரிவித்தார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், மொத்தம் 1,000 கனேடியர்களை ஆன்லைனில் பேட்டி கண்டது IPSOS நிறுவனம். அந்தப் பேட்டிகளின் சாரம் என்பது ஒன்றே ஒன்றுதான். “மன்னர் மூன்றாம் சார்லஸ், தன் செயல் திறன் எப்படிப்பட்டது என்பதை கனடா மக்களிடம் இன்னும் நிரூபிக்க வேண்டியது நிறைய உள்ளது” என்பதே அது. பேட்டியில் பதிலளித்தவர்களில், கிட்டத்தட்ட 82 சதவீதம் அளவிலான ஆட்கள் எலிசபெத் மகாராணியின் ஆட்சி தங்களைப் பெரிதும் கவர்ந்ததாகவும், அவருக்கான ஆதரவு எப்போதும் மாறாமல் இருந்தது என்றும் தெரிவித்திருந்தனர். ராணிக்குப் பதிலாக, அவரின் ஆட்சி பீடத்தில் சார்லஸ் மன்னராகப் பொறுப்பேற்கும் பட்சத்தில், அவர் நன்றாகவே ஆட்சியை வழி நடத்துவார் என 56 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். ஆனால், தங்களுக்கு சாதகமாக சார்லஸ் நடந்து கொள்வாரென 44 சதவீதம் பேர் மட்டுமே நினைக்கிறார்கள். இந்த ஆதரவு, சார்லஸின் மனைவி கமிலாவுக்கு வெறும் 27 சதவீதமாக மட்டுமே உள்ளது. மகாராணி எலிசெபத் இடத்தில், அவருடைய மருமகள் கமீலாவை வைத்துப் பார்கக் பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்பதையே இந்த 27 சதவீத வாக்குகள் காட்டுகின்றன.
கமீலாவுடன் ஒப்பிடுகையில், இளவரசி டயானாவுக்கு இங்கிலாந்தில் இருந்த கவர்ச்சியும், மதிப்பும் அதிகமானது. அதனாலேயே, இளவரசி டயானாவுடனான, சார்லஸின் விவாகரத்துக்குப் பிறகு அவரது நற்பெயரில் ஏற்பட்ட களங்கத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரிக்கர், “சார்லஸ் மன்னர் குறித்து, மக்களிடம் எப்போதும் அவ்வளவு பெரிய அளவில் ஆதரவோ, உற்சாகமோ இருந்ததில்லை” என்கிறார். ஏற்கனவே குறைவான அளவே மதிப்பும் மரியாதையையும் வைத்திருந்த இளவரசர் சார்லஸ்க்கு, டயானா மூலமாக இன்னும் இழப்பே வந்திருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
அதற்காக, “தங்களுடைய புதிய மன்னரை, மக்கள் எதிரியாக ஒன்றும் எண்ணவில்லை என்றாலும், அவரது தாயாரிடம் இருந்ததைப் போலான ஈர்ப்பும் இவரிடம் நிச்சயமாக இல்லை” மேற்சொன்ன எலிசெபத் ராணி பெற்ற அந்த 82 சதவீதம் என்பது அவர் மீதான் அனுதாபத்தால் வந்தது மட்டுமல்ல. நாங்கள் அடுத்தடுத்து செய்த எல்லா வாக்கெடுப்புகளிலுமே இதே போன்ற ஆதரவு சதவீதத்தைத்தான் அவர் தொடர்ந்து பெற்றார். வாழும் போதும் சரி, இறந்த பின்னும் சரி குறிப்பிட்ட சதவீத மக்களால் இன்னும் அவர் மகாராணியாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார் என்பதாகத்தான் நாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது வேறு யாருக்கும் அத்தனை எளிதில் அமையாத ஒன்று. அவ்வகயில், மறைந்த எலிசெபத் ராணி மக்களிடம் உருவாக்கியிருந்த தாக்க ம் மிகப் பெரியது என்கிறார் பிரிக்கர்.
கணிசமான எண்ணிக்கையிலான, கனேடியர்கள் சார்லஸையும், அவரது உரிமையையும் முற்றிலுமாகத் தவிர்த்து விட்டு சார்லஸின் மகனும், அடுத்த புதிய வாரிசுமான வில்லியமுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதில் மிக ஆர்வமாக உள்ளனர். மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா ஆகியோர், கனடாவில் முடியாட்சிக்கான ஆதரவைப் பெருக்க சரியான ஆட்களகப் பொருந்தி வருவார்கள் என 47 சதவீத ஆட்கள் நம்புகிறார்கள். இந்த வாக்கெடுப்பில் பதிலளித்தவர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், 60 சதவீதம் பேர் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் பற்றி இதே போலத்தான் உணர்கிறார்கள். இருப்பினும் அந்த எண்ணிக்கை 2016 முதல் ஏழு புள்ளிகள் அளவிற்குக் குறைந்துள்ளது.
வில்லியம் மற்றும் அவரது சகோதரர் ஹாரி மற்றும் அவர்களது மனைவிகள் முறையே கேட் மற்றும் மேகன் இருவரும் தங்கள் தந்தையுடன் ஒப்பிடும்போது, பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றனர். இவர்களுள் வில்லியம் அதிக ஆதரவைப் பெற்றார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 66 சதவீதம் அளவில் அவர் ஆதரவு பெற்றுள்ளார்.
இவை போக, எலிசெபத் ராணி இறந்து விட்ட காரணத்தால், ஆங்கிலேய மன்னராட்சியுடனான தனது மொத்த உறவுகளையும் கனடா துண்டிக்க வேண்டும் என ஒரு பொருட்படுத்தத்தக்க அளவிலான பேர் (54 சதவீதம்) கூறியுள்ளனர். இந்த எண்ணிக்கையானது, ராணியின் மறைவுக்கு முன்னும் பின்னும் நடத்தப்பட்ட மற்ற எல்லாக் கருத்துக் கணிப்புகளுடனும் பெரும்பாலும் ஒத்துப்போகிறது. இவர்களுள் நிறைய பேர், கனடாவின் கியூபெக் நகரத்தில் வசிப்பவர்கள். மேலும் அங்கு எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், 79 சதவீதம் பேர் கனடா முடியாட்சியிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆங்கிலயேக் கனடாவில், இத்தகைய பிரிவு நடவடிக்கைக்கான ஆதரவு, சராசரியாக 46 சதவீதத்தைக் கொண்டுள்ளது, இதில், சஸ்காட்செவன் மற்றும் மனிடோபா மட்டுமே சிறிய அளவிலான ஆதரவைக் கண்டன.
55 வயதுக்குட்பட்ட இளைய கனேடியர்களுள், கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர், முடியாட்சிக்கு விரோதமாகவே இருந்தனர். இந்த அளவு, பழைய கனேடியர்களில் 49 சதவீதமாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் ஒரே குரலில், ஆங்கிலேய முடியாட்சியுடனான கனடாவின் உறவும், பிணைப்பும் முழுவதுமாகத் துண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். கனடாவில், முடியாட்சியை அமல்படுத்துவதற்கு உங்கள் ஆதரவு உண்டா..? இல்லையா.? எனும் கேள்விகள் அடங்கிய பொது வாக்கெடுப்பில் இந்த ஒப்பீட்டில் நிறைய கருத்து வேறுபாடுகளைக் காண முடிந்தது.
அரசியலமைப்பு முடியாட்சி என்பது கனடிய அடையாளத்தை வரையறுக்க உதவுவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாக வடிவமாக அது தொடர வேண்டும் என்றும், முடியாட்சியை கையில் வைத்திருப்பது கனடாவை, அமெரிக்காவிலிருந்து பிரிக்க உதவுகிறது என்றும், மேலும் அது கனடாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்றும் 55 முதல் 61 சதவீதம் வரையிலான, ஆட்கள் கருத்து கூறியுள்ளனர். இந்தக் கருத்தைத் தெரிவித்தவர்களே, கனேடிய சமுதாயத்தில் அரச குடும்பம் எந்த முறையான பங்குகளையும் கொண்டிருக்கக்கூடாது மற்றும் பிரபலங்களையும், மக்களையும் விட மேலானவர்களாகக் கருதப்படக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.
மன்னராட்சியுடன் இணைந்திருந்தால் கனடா உண்மையான சுதந்திர நாடாக இருக்காது; நவீன கனேடிய சமுதாயத்தில் அது ஒரு நல்ல இடத்தைப் பெறுவதற்கு, முடியாட்சியால் முடியாது. ஏனென்றால் மன்னராசியானது, காலனித்துவம் மற்றும் அடிமைத்தனத்தின் வரலாற்றுடன் மிகவும் இணைக்கப்பட்ட ஒன்றாகும் என கருத்துத் தெரிவித்த ஆட்களும் உள்ளனர்.
“கனேடியர்கள் இந்த பிரச்சினையில், எந்த வகையிலும் தீவிரமான ஆர்வத்துடன் இல்லை என்பதையே இவை அனைத்தும் தெரிவிக்கின்றன, என்றாலும் கூட, அவர்களுக்கு முடியாட்சி பற்றிய கவலை ஓரளவு உள்ளது” என்று பிரிக்கர் கூறினார்.
“ஒரு தலைமுறையின் எண்ண ஓட்டங்கள், மற்றொன்றை மாற்றுவதால், முடியாட்சிக்கு எதிரான கருத்துகளும் பார்வையும் நாளுக்கு நாள் வளர நிச்சயமாக அதிக இடம் உள்ளது. ஆனால் இப்போது, இந்த அடையாள உணர்வானது இன்னும் தீர்க்கமான, தெளிவான ஒரு முடிவை நோக்கி மக்களைத் தூண்டுவதற்குப் போதுமான ஒன்றாக இல்லை என்பதையே இது காட்டுகின்றது.
‘குளோபல் நியூஸ்’ சார்பாக செப்டம்பர் 13 மற்றும் 14, 2022 க்கு இடையில் நடத்தப்பட்ட Ipsos பொது வாக்கெடுப்பின் சில முடிவுகள் இவை. இந்த கணக்கெடுப்புக்காக, 18 வயதுக்கு மேற்பட்ட 1,001 கனேடியர்கள் பேட்டி எடுக்கப்பட்டனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு அளவு கோல்களின்படி, இந்த மாதிரியின் கலவையானது கனடிய மக்கள்தொகையை பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்த, போதுமான ஒதுக்கீடுகள் மற்றும் சோதனைகள் செய்யப்பட்டன. Ipsos ஆன்லைன் வாக்கெடுப்புகளின் துல்லியமானது, பூரணமான ஒரு நம்பகத்தன்மை உடையது. சர்வதேச அளவில், வாக்கெடுப்பிற்காக பரவலாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறையே இது.
இந்த வழக்கில், வாக்கெடுப்பானது அதிகபட்சமாக ± 3.5 சதவீத அளவுக்கு துல்லியமானதாகவும் அல்லது மாறுபட்டதாகவும் இருக்கலாம். 20 இல் 19 முறை, 18+ வயதுடைய அனைத்து கனேடியர்களிடமும் வாக்கெடுப்பு எடுக்ககப்பட்டிருந்தால், மக்கள்தொகையின் துணைக் குழுக்களிடையே நம்பகத்தன்மையின் வீச்சு மிக அதிகமாக இருக்கும். அனைத்து மாதிரி ஆய்வுகள் மற்றும் கருத்துக் கணிப்புகள், கவரேஜ் பிழை மற்றும் அளவீட்டுப் பிழை உட்பட, பிற பிழைகள் அனைத்துமே ஆதாரங்களுக்கு உட்பட்டவை.