இந்தியாவின் பொறியியல் பட்டதாரிகளில் மூன்றில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்

செய்தி சுருக்கம்:
நாட்டின் பெருமைக்குரிய பொறியியல் பள்ளிகளிலிருந்து குறிப்பாக இந்திய தொழில்னுட்பக் கழகங்களில் இருந்து (IIT) பட்டம் பெறுபவர்களில் மூன்றில் ஒரு பங்கு, வெளினாடுகளுக்கு இடம் பெயர்கின்றனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
அமெரிக்கா செல்லும் புலம்பெயர்ந்தோரில் 65% பேர் உயர் திறன் பெற்றவர்கள் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் (NBER) ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.
பின்னணி:
இந்தியா முழுவதும் 23 IIT உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி எடுக்கும் விகிதங்கள் அமெரிக்காவின் ஐவி லீக் கல்லூரிகளை விட குறைவாக உள்ளன.
வேலைக்குச் செல்லும் தொழில் வல்லுநர்கள் மட்டுமின்றி, திறமையான இந்தியமாணவர்களும் வெளிநாடுகளுக்கு இடம் பெயர். 2022 ஜூன் வரை ஒரு வருடத்தில் 1,17,965 இந்தியர்கள் இங்கிலாந்து விசாவைப் பெற்றுள்ளனர்.
மேலும், 2014-ம் ஆண்டு முதல் 23000 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்தியாவின் திறமையான இளையவர்கள் வெளியேறுவதற்கான முக்கிய காரணம் அவர்களின் முயற்சி மற்றும் திறமைக்கு தகுந்த வாழ்க்கை அமைத்துகொள்வதற்கான தேடலே.